தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி ரிலீஸ் ஆன அன்று எதிர்மறையான பல விமர்சனங்கள் வந்தாலும், அவற்றையெல்லாம் காலி செய்து, வசூல் வேட்டையாடி வருகிறார்.
சென்னையில் இரண்டாவது வாரத்தில் 24 திரையரங்க வளாகங்களில் 625 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.2.20 கோடியை வசூல் செய்துள்ளது. இரண்டாவது வார இறுதி நாட்களில் ரூ. 2 கோடியை வசூலித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை சென்னையில் மட்டும் ரூ. 9 கோடியை எட்டியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல மாலில் தெறி 13 நாட்களில் ரூ 1.10 கோடி வசூல் செய்து இருந்தது.
ஆனால், கபாலி பத்தே நாட்களில் ரூ 1.15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, தெறி சாதனையை முறியடித்துள்ளது.
மேலும் ஒன்பது நாட்களை கடந்துள்ள நிலையில் தமிழக வசூல் ரூ.72 கோடியை நெருங்கியதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் தமிழக வசூலில் 75% தயாரிப்பாளருக்கும் மீதமுள்ள 25% தியேட்டர் உரிமையாளர்களுக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாம்.
எனவே தயாரிப்பாளருக்கு மட்டும் ரூ.50 கோடி வரை கிடைத்துள்ளதாக தெரிகிறது.
ரஜினியின் எந்திரன்’ படத்திற்கு அதிக லாபம் கொடுக்கும் படமாக ‘கபாலி’ அமைந்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.