ஜோ-ராதாமோகன் படத்தலைப்புக்கு போட்டி அறிவித்துவிட்டு இப்படி செய்யலாமா?

Jyothika Vidaarth Radha Mohan film titled Kaatrin Mozhiவித்யா பாலன் நடித்த பெரும் ஹிட்டான ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கை ராதா மோகன் இயக்குகிறார்.

இதன் நாயகனாக விதார்த் நடிக்க, கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்கவுள்ளார்.

இப்படத்தை போஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு குறித்த போட்டி அறிவிப்பு வெளியானது.
அதாவது…

1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.

2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.

3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.
என அறிவித்து இருந்தனர்.

படத்தின் தலைப்பை சரியாக சொன்னால் அவர்கள் சூட்டிங் ஸ்பாட் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் படத்தின் தலைப்பை காற்றின் மொழி என அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார்.

போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார் என்று அதில் அறிவித்து இருந்தனர்.

ஆனால் இன்று ஏப்ரல் 19ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி அறிவிப்பு வெளியான செய்தி…

https://www.filmistreet.com/cinema-news/guess-jyothika-radha-mohan-film-title-and-be-their-vip-guest/

Jyothika Vidaarth Radha Mohan film titled Kaatrin Mozhi

Overall Rating : Not available

Related News

தனஞ்செயன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் திரைக்கு…
...Read More

Latest Post