1 மில்லியனை கடந்தது ஜோதிகாவின் *காற்றின் மொழி* டீசர்

Jyothikas Kaatrin Mozhi teaser crossed 1M viewsமிஸ்டர் சந்திரமௌலி படத்தை தொடர்ந்து தனஞ்செயன் தயாரித்துள்ள படம் காற்றின் மொழி.

இப்படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரித்துள்ளார்.

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.

ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்துள்ளார். லட்சுமி மஞ்சு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கௌரவ தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார்.

ஏ.எச். காசிப் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

தற்போது இது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் 36 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
இதனால் படத்தின் மீதான அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து யூ-டியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது இந்த டீசர்.

இதனால் காற்றின் மொழி படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Jyothikas Kaatrin Mozhi teaser crossed 1M views

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஹீரோக்களின் பிறந்த…
...Read More
வித்யாபாலன் நடித்து ஹிந்தியில் வெளியாகி சூப்பர்…
...Read More

Latest Post