இளையராஜா இசையில் விக்ரம் பிரபு-சமுத்திரக்கனி-பிரகாஷ்ராஜ் கூட்டணி

Prakash Raj Vikram Prabu and Samuthirakani starring movie titled 60 Vayadu Maaniram‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ராதாமோகன்.

தற்போது தனஞ்செயன் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் ‘காற்றின் மொழி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் ராதாமோகன்.

இந்தப் படம் அக்டோபர் மாதம் 18-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஆனால் இதற்கு முன்பே சத்தமில்லாமல் ஒரு படத்தை பல பிரபலங்கள் வைத்து இயக்கியுள்ளார்.

விக்ரம்பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து ‘60 வயது மாநிறம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, விஜி வசனம் எழுதியுள்ளார். பா.விஜய், பழநிபாரதி, விவேக் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

படப்ப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவை முடிவடைந்துள்ளதால் அடுத்த ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Prakash Raj Vikram Prabu and Samuthirakani starring movie titled 60 Vayadu Maaniram

Overall Rating : Not available

Latest Post