தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 5ஆம் தேதி) நள்ளிரவு 11.30 மணிக்கு அவரது பிரிந்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் கல்லறைக்கு அருகாமையிலேயே புதைக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவை கேட்ட கட்சித் தொண்டர்கள் தற்போது சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் அனைத்து வாகனங்களும் டோல் பிளாசாவை கடந்து செல்ல இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Jayalalitha funeral at MGR memorial at Marina beach