ஆயிரத்தில் ஒருவன் சிவகார்த்திகேயன்; பாராட்டும் கூட்டத்தில் ஒருத்தன்

ஆயிரத்தில் ஒருவன் சிவகார்த்திகேயன்; பாராட்டும் கூட்டத்தில் ஒருத்தன்

Kootathil-Oruthan-Posterஅசோக் செல்வன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன்.

ஞானவேல் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தை தயாரித்த எஸ்ஆர். பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜீலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் புரமோசன் நிகழ்ச்சிக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூட்டத்தில் ஒருத்தனாக இருந்த சிவகார்த்திகயேன் இன்று ஆயிரத்தில் ஒருவனாக உயர்ந்து நிற்கிறார் என கௌரவித்துள்ளனர்.

Kootathil Oruthan movie launched Tribute Video for Sivakarthikeyan

 

அந்த வீடியோ பதிவு இதோ…

Exclusive: மெர்சல் சூட்டிங் அப்டேட்; விஜய்யை அவசரப்படுத்தும் அட்லி

Exclusive: மெர்சல் சூட்டிங் அப்டேட்; விஜய்யை அவசரப்படுத்தும் அட்லி

vijay real life imageவிஜய் நடிப்பில் உருவாகும் மெர்சல் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதால், சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறாராம் அட்லி.

சென்னையின் இரண்டு பகுதிகளில் இதன் சூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.

ஒரு இடத்தில் சண்டைக் காட்சியையும் மற்றொரு காட்சியை கோட்டூர்புரத்திலும் மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டூர்புர காட்சியில் ஒரு பெண் விபத்தில் அடிப்பட்டு கிடப்பது போலவும், அவரின் சிகிச்சை செலவுக்கு லட்சக்கணக்கில் தேவைப்படுவது போலவும் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

இந்த பெண்ணின் சிகிக்சையை டாக்டராக நடிக்கும் மாறன் கேரக்டர் விஜய் இலவசமாக செய்யலாம் என எதிர்பார்க்கலாம்.

Vijay Atlee combo Mersal movie shooting updates

போதை பொருள் வழக்கில் காஜல் அகர்வால் மேனேஜர் கைது

போதை பொருள் வழக்கில் காஜல் அகர்வால் மேனேஜர் கைது

Drug Scandal Kajal Agarwals Manager Arrestedதென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் காஜல் அகர்வால்.

இவர் மெர்சல் படத்தில் விஜய்யுடனும் விவேகம் படத்தில் அஜித்துடனும் தற்போது நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவரின் மேனேஜர் ஜானி ஜோசப், அவரது வீட்டிற்குள் காஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள ஜானி காஜலுக்கு மட்டுமில்லாமல், பலருக்கும் மேனேஜராக பணியாற்றி இருக்கிறார்.
இந்த விவகாரத்தால் காஜல் அகர்வாலுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் நவ்தீப், சார்மி, முமைத்கான். இயக்குனர் பூரி ஜெகந்நாத் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Drug Scandal Kajal Agarwals Manager Arrested

வரியை நீக்க முடியாது… விஷாலிடம் ‘ஸாரி’ சொன்ன தமிழக அரசு

வரியை நீக்க முடியாது… விஷாலிடம் ‘ஸாரி’ சொன்ன தமிழக அரசு

actor vishalமத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது.

ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.

சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரட்டை வரி செலுத்தினால் திரையுலகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த ஜூலை 3ம் தேதி முதல் 4 நாட்கள் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன.

இதனை அடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட திரைத் துறை அமைப்பினர் ஜூலை 2ம் தேதி அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அதில் எந்த முடிவும் எட்டப்படாததையடுத்து ஜூலை 3 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன.

ஆனால் அதற்கு மக்கள் ஆதரவு பெரியதாக கிடைக்கவில்லை. திரைத்துறையிலும் ஒற்றை கருத்து இல்லாத்தால் அந்த செயல் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை திரைத்துறையினர் ஜூலை 3ம் தேதியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும் இது அரசுக்கு எதிரான போராட்டமல்ல என்று அறிவித்த தியேட்டர் உரிமையாளர்கள், ஜூலை 7ம் தேதி முதல் தியேட்டர்களை தாங்களாகவே இயக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் இன்று 3ம் கட்ட இறுதிப் பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக திரைத்துறையினர் கூறியுள்ளனர்.

நடந்த பேச்சுவார்த்தை என்ன என்பதையும் முழுமையாக யாரும் தெரியப்படுத்தவில்லை.

மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மாதவன்

மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மாதவன்

Madhavan and Mani Ratnamமணிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளை துவக்கி நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளார்.

இதுகுறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில்…

“மணிரத்னம் பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதில் மாதவனும் ஒருவர்.

இக்கதை இரண்டு நாயகர்கள் உள்ளடக்கியது.” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே ‘அலைபாயுதே’, ‘கன்னடத்தில் முத்தமிட்டால்’ மற்றும் ‘ஆயுத எழுத்து’ ஆகிய படங்களில் மணிரத்னம்-மாதவன் இணைந்து பணிபுரிந்துள்ளார்கள்.

4வது முறையாக மீண்டும் இணைவார்களா? என எதிர்ப்பார்க்கலாம்.

மேலும், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக சூர்யா ரசிகர்களுக்கு அனிருத் விருந்து

முதன்முறையாக சூர்யா ரசிகர்களுக்கு அனிருத் விருந்து

Suriyas Thaanaa Serndha Koottam single release dateவிஜய்யுடன் கத்தி படத்திலும், அஜித்துடன் வேதாளம் மற்றும் விவேகம் படத்திலும் பணியாற்றியிருக்கிறார் அனிருத்.

தற்போது முதன்முறையாக சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 2வது லுக் போஸ்டர்கள் நேற்று சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

இந்நிலையில் வருகிற ஜீலை 27ஆம் தேதி இப்படத்தில் உள்ள ஒரு பாடலை வெளியிடவிருக்கிறார்களாம்.

நானா தானா வீணா போனா என்று அந்தப்பாடல் தொடங்குகிறதாம்.

Suriyas Thaanaa Serndha Koottam single release date

More Articles
Follows