தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஆனது.
இந்த நான்கு நாட்களில் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 51 கோடியை வசூலித்துள்ளது என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.30 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அதாவது இந்த ஆண்டில் வெளியான படங்களில் சென்னை ஓப்பனிங்கில் இப்படத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
மற்ற இடங்களை பிடித்துள்ள படங்கள்…
- கபாலி (3 நாட்களில்) ரூ. 3.75 கோடி
- தெறி (4 நாட்களில்) ரூ. 3 கோடி
- இருமுகன் (4 நாட்களில்) ரூ. 2.30 கோடி
- 24 படம் (3 நாட்களில்) ரூ. 1.6 கோடி
இதில் தெறி மட்டுமே தமிழ் புத்தாண்டு பண்டிகை தினத்தில் வெளியானது.
தெறி மற்றும் இருமுகன் படங்கள் வியாழக்கிழமையே வெளியானது குறிப்பிடத்தக்கது.