சீயான் விக்ரமுடன் இணையும் சசிகுமார்

சீயான் விக்ரமுடன் இணையும் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and sasiஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இருமுகன்.

விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் வெளியிடுகின்றனர்.

செப்டம்பர் 1ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதே போல் சசிகுமார் தயாரித்து நடித்துள்ள கிடாரி படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 2 தேதியிலும் படத்தை செப்டம்பர் 1ஆம் தேதியும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

கபாலியின் செங்கல்பட்டு ஏரியாவை வாங்கிய பிரபல நிறுவனம்..!

கபாலியின் செங்கல்பட்டு ஏரியாவை வாங்கிய பிரபல நிறுவனம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali movie stillsசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கபாலி’ தரிசனம் தர தயாராகிவிட்டார்.

இன்னும் சில நாட்களில் இந்த தரிசனம் கிடைக்கவிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தயாரிப்புக் குழுவினரும் இறுதிக் கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புரோமோஷன், விளம்பரம், விநியோகம் என பல வகைகளில் பிஸியாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் செங்கல்பட்டு ஏரியாவின் வெளியீட்டு உரிமையை AGS நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

‘கபாலி விளம்பரம் போதும்…’ ரஞ்சித் வேண்டுகோள்..!

‘கபாலி விளம்பரம் போதும்…’ ரஞ்சித் வேண்டுகோள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director Pa Ranjithரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள கபாலி விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் விளம்பரங்களும் இந்திய சினிமாவே வியக்கும் வகையில் உருவெடுத்துள்ளது.

எனவே, கபாலி மூலமாக தங்கள் பொருட்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ள பல நிறுவனங்கள் முட்டி மோதி வருகின்றன.

இந்நிலையில், ‘கபாலி’யோடு தங்கள் விளம்பரத்தை செய்து வரும் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது…

“கபாலி படத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் போது படத்தை வெளியிட்டு விட வேண்டும்.

மேலும் விளம்பரங்கள் வேண்டாம். மக்கள் படம் பார்க்க காத்திருக்கின்றனர். இதுவே போதும் என நினைக்கிறேன்” என்றார்.

கமலுக்கு பதிலாக இணையும் தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி

கமலுக்கு பதிலாக இணையும் தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mip movieலிங்கா படத்தை தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள படம் முடிஞ்சா இவன புடி.

இதில் சுதீப் மற்றும் நித்யா மேனன் இருவரும் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் நாசர், பிரகாஷ்ராஜ், முகேஷ் திவாரி, சரத் லோகித்ஸ்வா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை இமான்.

லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை ஜீலை 20ஆம் தேதி கமல் வெளியிட இருந்தார்.

ஆனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எனவே, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இணைந்து இசையை வெளியிடவுள்ளனர்.

கின்னஸ் சாதனை படைத்த காமெடி நடிகர் பிரம்மானந்தம்

கின்னஸ் சாதனை படைத்த காமெடி நடிகர் பிரம்மானந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor brahmanandamதெலுங்கு சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என்னுமளவுக்கு அதிக படங்களில் நடித்து வருபவர் பிரம்மானந்தம்.

தெலுங்கு தவிர தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழியில் கில்லி, மொழி, பயணம், லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை 1000 படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 30 ஆண்டுகளில் 1000 படங்களில் நடித்துள்ளதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சிவிலியன் போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலிக்கு லீவு விட்ட சென்னை நிறுவனம்… ஊழியர்கள் ‘மகிழ்ச்சி’

கபாலிக்கு லீவு விட்ட சென்னை நிறுவனம்… ஊழியர்கள் ‘மகிழ்ச்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fyndusரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைக்கு வர இன்னும் 4 நாட்களே உள்ளன.

ஆன்லைன் புக்கிங் தொடங்கவுள்ள நிலையில், சில தியேட்டர்களில் ஒரு வாரத்திற்கு ஹவுஸ்புல் என்ற நிலையும் தொடர்கிறது.

முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமா? என பல மீம்ஸ்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கபாலி ரிலீஸ் அன்று தங்கள் நிறுவனத்திற்கு விடுமுறை அளித்துள்ளது.

சென்னை OMR சாலையில் உள்ள ஃபின்டஸ் நிறுவனம்தான் இந்த புதுமையை கையாண்டுள்ளது.

இவையில்லாமல் பல நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் ஒரு காட்சிக்கு தங்களின் ஒட்டுமொத்த ஊழியர்களையும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.

இதனால் இந்நிறுவனங்களின் ஊழியர்கள் ‘மகிழ்ச்சி’ அடைந்துள்ளனர்.

More Articles
Follows