ஐ.பி.எல். ஆட்டம்..; சென்னை அணி வெற்றிக்கு ரஜினி பன்ச் டயலாக் சொன்ன இம்ரான் தாஹிர்

ஐ.பி.எல். ஆட்டம்..; சென்னை அணி வெற்றிக்கு ரஜினி பன்ச் டயலாக் சொன்ன இம்ரான் தாஹிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini tahirசெப். 19 நேற்றிரவு அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி & நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பின், முதன் முறையாக டோனி நேற்று ஐபிஎல் போட்டியில் களம் கண்டார்.

அதில் சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த வெற்றியைக் குறிப்பிடும் வகையில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரும், தென் ஆப்பிரிக்க வீரருமான இம்ரான் தாஹிர் தனது ட்விட்டரில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ பட வசனத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “திரும்பவும் நீ எங்களை(சென்னை சூப்பர் கிங்ஸ்) தொட்டிருக்கக் கூடாது. தொட்டுட்டா தொட்டவன நாங்க விட்டதே இல்லை.

இப்ப தானே காளியோட ஆட்டமே ஆரம்பமாகி இருக்கு. இன்னும் நிறைய சிறப்பான தரமான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு #எடுடா வண்டிய போடுடா விசில்” என்று பதிவிட்டுள்ளார்.

இது CSK ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Thirumbavum nee yengala @ChennaiIPL thoturukka koodadu.Thotutey thottavana nanga vittadey illai.Ippa thane kaliyoda attame arambamagi irukku.

innum neraya sirappana tharamana sambhavangal kathukittu irukku #eduda vandiya poduda whistle — Imran Tahir (@ImranTahirSA) September 19, 2020

Imran Tahir tweets on CSKs first victory

மது மற்றும் இலவசங்களால் சோம்பேறியான தமிழர்கள்.. ; நீதிபதி கருத்து

மது மற்றும் இலவசங்களால் சோம்பேறியான தமிழர்கள்.. ; நீதிபதி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madras high courtகடந்த மே மாதம் 16 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள்… “புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இது தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் சங்கர நாரயணன் வழக்கு குறித்தான விவரங்களை சமர்பிக்க கூடுதலாக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி…

“மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்பு மற்றும் வேலை இழப்பு குறித்த விவரங்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநில அரசுகளிடம் இருந்தும் தகவல்களைப் பெற்று மத்திய அரசு அந்த விவரங்கறை கூறியிருக்க வேண்டாமா? என்றார்.

இதன்பின்னர் பேசிய வழக்கறிஞர்…

“தமிழ்நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களில் 52 சதவிகிதத்தினர் வெளிமாநிலத்தவர்கள் தான்.

தஞ்சாவூர் பகுதிகளில், விவசாயப் பணிகளில் ஏராளமான மேற்கு வங்க மாநில பெண்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

இதனைதொடர்ந்து மீண்டும் பேசிய நீதிபதி, “தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் மது மற்றும் இலவசங்களால் சோம்பேறிகளாக உள்ளனர். என தெரிவித்தார்.

Data on migrant worker deaths Madras High Court questions Central govt

நடிக்கிற வேலையை மட்டும் பாருடா..; சூர்யா போட்டோவை மிதித்து இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நடிக்கிற வேலையை மட்டும் பாருடா..; சூர்யா போட்டோவை மிதித்து இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்தனர்.

இதனால் நீட் தேர்வு எதிர்ப்பு தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

எனவே நடிகர் சூர்யா நீட் தேர்வுவை கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டார்.

இதனால் நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜக & இந்து அமைப்புகள் சூர்யாவுக்கு எதிராக திரும்பினர்.

இதனை தொடர்ந்து… திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தர்மா என்பவர், நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் கோவை காந்திப்பார்க் பகுதியில் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

“இயலாமையில் இருக்கும் சில மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக சூர்யா பேட்டிகள் அறிக்கைகள் உள்ளன.

சூர்யா மாதிரியான ஆட்கள் நீட் வந்து மாணவர்களுக்கு ஆகாது நீட் ங்கிற மாதிரி பேசி வருகின்றனர்” என்றார் இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சூர்யாவின் படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நடிப்பை மட்டும் பாருடா சூர்யா…. வேலையை மட்டும் பாருடா சூர்யா… என கோஷங்கள் எழுப்பினர்.

coimbatore hindu munnani youth protest against suriya

hindu munnani protest

ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு-2’..; இளையராஜா இல்லாமல் மிஷ்கின் படம்

ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு-2’..; இளையராஜா இல்லாமல் மிஷ்கின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pisasu 2 andreaஉதயநிதி நடித்த சைக்கோ படத்திற்கு பிறகு துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார்.

ஆனால் அந்த பட தயாரிப்பாளரும் நடிகருமான விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்திலிருந்து விலகினார்.

இதனையடுத்து தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி அவரின் பிறந்தநாளில் வெளியிடுவதாக தெரிவித்தார் மிஷ்கின்.

தன் அடுத்த படமாக ‘பிசாசு 2’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

பெரும்பாலும் மிஷ்கின் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பார்.

ஆனாலும் இளையராஜாவின் மூத்த மகன்தான் கார்த்திக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Mysskins Pisasu 2 cast and crew details

எந்த வம்புக்கு போகாதவர் அஜித்.; வீரமாக பேசி மன்னிப்பு கேட்கும் விஜய் இல்ல.. – மீரா மிதுன்

எந்த வம்புக்கு போகாதவர் அஜித்.; வீரமாக பேசி மன்னிப்பு கேட்கும் விஜய் இல்ல.. – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithunசமீபத்தில் பிரபலமான பத்திரிகை ஒன்று நடிகர் அஜித்தை எந்த பிரச்சனைக்கும் வெளியே வராதவர் என கிண்டலடித்து டிசைன் வெளியிட்டது.

அதில்.. வெளியே வர மாட்டேன் போடா என்ற டி சர்ட்டை அஜித் போட்டு இருப்பது போல டிசைன் செய்திருந்தனர்.

இதனால் தல ரசிகர்கள் கடுப்பாகிஅந்த பத்திரிகையை கேவனமான வார்த்தைகளால் ட்ரெண்டாக்கி ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.

இந்த் டிரெண்ட் குறித்து மாடலும் நடிகையுமான மீரா மிதுன் கூறியுள்ளதாவது..

அஜித் எந்த வம்புக்கும் போகாதவர்.. விஜய் போல வீரராக இசை வெளியீட்டில் பேசிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பவர் இல்லை.

தானாகவே உயர்ந்தவரை இது போல அசிங்கப்படுத்தியது தவறு. அஜித் அவர்கள் அவதூறு வழக்கு தொடுக்கும் நேரம் இது.

என பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mithun targets Vijay again

‘முந்தானை முடிச்சு’ ரீமேக்..; சசிகுமார் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

‘முந்தானை முடிச்சு’ ரீமேக்..; சசிகுமார் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் இAishwarya rajesh to play the lead in Mundhanai Mudichu sequelயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட்டனாலும் அவர் இயக்கி நடித்த படங்களில் யாராலும் மறக்க முடியாத படம் முந்தானை முடிச்சு.

ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரித்த இந்த படம் 1983-ம் ஆண்டு வெளியானது.

தமிழில் ஹிட்டானதை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக்கானது.

இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக வந்த செய்திகளை கடந்த மே மாதம் நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

தற்போது ஊர்வசி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம்.

ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது

இந்த படத்தில் இணைந்துள்ள குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது..

‘முந்தானை முடிச்சு’ படத்தில் இணைந்திருப்பது உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் மைல் கல் படத்தில் நடிக்கிறேன்.” என்றும் கூறியுள்ளார்.

Aishwarya rajesh to play the lead in Mundhanai Mudichu sequel

Aishwarya rajesh to play the lead in Mundhanai Mudichu sequel

More Articles
Follows