தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு.’
இதில் கமலுடன் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
அப்போதே இத்திரைப்படம் பெரும் வசூலைக் குவித்து மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது இந்த படம் டிஜிட்டல் செய்யப்பட்டு இன்று ஜூன் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது.
சென்னையில் கமலா வெற்றி எஸ்கேப் பலாசோ பிவிஆர் உள்ளிட்ட பல திரையரங்குகளில் இந்த படம் வெளியானது.
முதல் நாள் இந்த படத்தை பார்ப்பது போல கமல் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க முன்பதிவு செய்து இருந்தனர். இந்த திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் திரையிடப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரிலும் ‘வேட்டையாடு விளையாடு’ ரீ ரிலீஸ் ஆனது. அங்கும் ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்து முதல் நாள் முதல் படம் பார்ப்பது போல கொண்டாடி மகிழ்ந்தனர்.
Vettaiyadu Vilaiyaadu Rerelease Kamal fans celebration like fdfs