தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’.
இப்படம் நாளை மறுநாள் செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த புரோமோசன் நிகழ்ச்சியில் பேசினார் விஷால்.
அப்போது அரசியல் பற்றி பேசினார். மேலும் மற்றவர்களைப் போல் கடவுள் ஆசைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் என கூறமாட்டேன் என மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசினார்.
அதன் விவரம் வருமாறு…
மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
மற்றவர்கள் போல, கடவுள் ஆசைப்பட்டால் வருவேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நேரடியாகச் சொல்கிறேன், தேவை ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன். அதில் எந்தத் தவறும் இல்லை.
அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை சரியாக செய்தால் ஏன் என்னைப் போன்ற நடிகர்களை அரசியலுக்கு அழைக்கப் போகிறார்கள்? என்றார்.
மேலும் பேசுகையில்….
ரேஷன் கார்ட், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மீண்டும் இலவசங்களை கொடுத்து ஓட்டுக்கள் வாங்கிவிடலாம் என யாரும் நினைக்கமுடியாது. அதற்கான வாய்ப்பு இப்போது குறைந்துள்ளது.” இவ்வாறு விஷால் பேசினார்.
I wont point out God If i wish i will enter in politics says Vishal