நான்கு மொழிகளில் பாடி கணேஷ்பாபுவை சிலிர்க்க வைத்த சித் ஸ்ரீராம்

நான்கு மொழிகளில் பாடி கணேஷ்பாபுவை சிலிர்க்க வைத்த சித் ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maple Leafs Productions தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.

இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இயக்குநர் நடிகர் EV கணேஷ்பாபு பேசியதாவது…

“நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் பீ.லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார்.

சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி.

நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ் பெண்ணாகவே மாறி விட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும்.

வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

Sid Sriram sung in 4 languages for Kattil movie

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு – Maple Leafs Productions
கதை திரைக்கதை வசனம் எடிட்டிங் – பீ.லெனின்
இயக்கம் – EV கணேஷ்பாபு
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கர்
இசை – ஶ்ரீகாந்த் தேவா

அஜித்தின் ‘துணிவு’ படத்தில் ஜிபி. முத்துக்கு என்ன கேரக்டர்.??

அஜித்தின் ‘துணிவு’ படத்தில் ஜிபி. முத்துக்கு என்ன கேரக்டர்.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்ல நல்ல வார்த்தைகளை பேசி சிலர் பிரபலம் ஆவார்கள்.. ஆனால்.. செத்த பயலே.. நாரப்பயலே.. என்று மக்களை திட்டி திட்டி அதை காமெடியாக்கி பிரபலமானவர் ஜி பி முத்து.

ஆனாலும் இவருக்கான ரசிகர்கள் ஏராளம்.

இதனாலேயே இவரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு அழைத்தனர். ஆனால் 3 வாரங்களில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது அனைத்து பட விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

முக்கியமாக நயன்தாரா தயாரித்து நடித்த ‘கனெக்ட்’ படத்தை காண வந்திருந்தார்.

நயன்தாரா தான் தன்னை அழைத்தார் எனக் கூறியிருந்தார். பின்னர் நயன்தாரா அழைக்கவில்லை என தெரிந்த பின் அவரே வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் இவர் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இது குறித்து அவரது சமீபத்திய பேட்டியில்…

“துணிவு படத்தில் ஒரே ஒரு காட்சியில் தான் வருவேன். ஆனால் அஜித் உடன் காட்சிகள் இல்லை. அவருடன் நான் நடிக்கவில்லை. அவரை நேரில் கூட பார்க்கல” என ஜிபி முத்து கூறியிருக்கிறார்.

என்ன கேரக்டர் என்பது படம் வந்தா தான் தெரியும் போல…

GP Muthu character in Thunivu movie

வாரிசை முந்திக் கொண்டது துணிவு..; அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் போனி கபூர்

வாரிசை முந்திக் கொண்டது துணிவு..; அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் போனி கபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ மற்றும் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ஆனாலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர்.

இதனிடையில் இன்று மாலை 5 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் டிரைலர் வெளியானது.

இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் சில மணி நேரங்களில் ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘துணிவு’ படத்தை ஒரு நாள் முன்னதாக ஜனவரி 11ஆம் தேதி வெளியிட உள்ளதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.

துணிவு

இதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமை விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்து மோத விடாமல் ஒருநாள் முன்னதாகவே துணிவு படத்தை வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை அமைச்சர் உதயநிதியின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதே நிறுவனம்தான் ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டு உரிமையை சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் மட்டும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு

Boney Kapoor new update for  Thunivu release date

முன்பதிவில் முன்னணி..; ‘வாரிசு’ படைக்கும் வரலாற்று சாதனை.!

முன்பதிவில் முன்னணி..; ‘வாரிசு’ படைக்கும் வரலாற்று சாதனை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘வாரிசு’.

இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை 2023 பொங்கல் ரிலீஸ் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே 12,500 டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், இங்கிலாந்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் 4 பெரிய திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோக நிறுவனங்களில் ஒன்றான Ahimsa Entertainment நிறுவனம், ‘வாரிசு’ படம் இதன் மூலம் வெளிநாடுகளில் டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்துவருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வாரிசு

‘Varisu’ set a record in ticket booking sales abroad

வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு, இயக்குநர் சுராஜ் இயக்கிய படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ மூலம் வடிவேலு மீண்டும் பெரிய திரையில் அறிமுகமானார்.

இப்படத்தில் வடிவேலு, ஷிவானி நாராயணன், ராவ் ரமேஷ், ஆனந்த் ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார் போன்ற நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சராசரியான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை ஜனவரி 6 முதல் பிரபல நெட்ஃபிக்ஸ் தளத்தில் திரையிடப்பட உள்ளது.

Vadivelu’s ‘Naai Sekar Returns’ OTT Release Date Announced

இயக்குனர் லோகேஷின் LCU வில் இணைகிறாரா ஜெயம் ரவி?

இயக்குனர் லோகேஷின் LCU வில் இணைகிறாரா ஜெயம் ரவி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் மற்றும் முன்னணி ஹீரோ ஜெயம் ரவி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிஸியான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘பொன்னியின் செல்வன்’ நடிகருக்கு ஒரு ஸ்கிரிப்ட் விவரிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

‘தளபதி 67’ படத்தின் நடிகர்களுடன் ரவி இணைந்தாரா அல்லது லோகேஷ் தயாரிப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது எதிர்காலத்தில் லோகேஷ் இயக்க இருக்கும் ‘கைதி 2’, ‘விக்ரம் 3’ போன்ற படத்திற்கான பேச்சு வார்த்தையாக கூட இருக்கலாம் . அதிகாரப்பூர்வ வார்த்தைக்காக காத்திருப்போம்.

Breaking! Jayam Ravi joins LCU?

More Articles
Follows