தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
EV கணேஷ்பாபு இயக்கி தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ‘கட்டில்’.
இதன் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது…
அந்தக் காலத்தில் காதலுக்கு குழந்தைக்கு எனத் தனித்தனியாக பாடல் இருக்கும் கதையோடு சேர்ந்து இருக்கும்.
இப்போது பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன்.
நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது. இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடல்களே இல்லை என்று சொல்லலாம். அவையெல்லாம் காவியம்..
இப்படத்தில் நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். ஶ்ரீகாந்த தேவா சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். . படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்.. நன்றி.
Kattil movie songs were not songs says Bigg Boss Shanthi