தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும்பாலானோரால் எதிர்பாக்கப்பட்ட ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் நட்பே துணை படத்தின் ட்ரைலர் நாளை (பிப்.28) வெளியாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியானத்திலிருந்தே அனைவரின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்தது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி இசை உலகிலும், இணையதளங்களிலும் மக்களைத் தன் வசப்படுத்தியது. இப்போது ட்ரைலரும் மகிழ்விக்க வருகிறது. இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் காதலியாக அனகா நடிக்கிறார். இப்படம் அடிப்படையாகக் கொண்டு உருவானாலும் குடும்பம், நட்பு, காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கிறது.
விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ புகழ் விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், புட் சட்னி (Put Chutney) புகழ் ராஜ்மோகன், பிஜிலி ரமேஷ் மற்றும் அஸ்வின் ஜெரோமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் – ஒளிப்பதிவு – டிமாண்டி காலனி மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் புகழ் அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை – பொன்ராஜ், நடனம் – சந்தோஷ் மற்றும் சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், தயாரிப்பு – சுந்தர்.சி -ன் அவ்னி மூவிஸ்.