தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பற்றி அவதூறு.; மன்னை சாதிக் கைது

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பற்றி அவதூறு.; மன்னை சாதிக் கைது

Mannai sathikமன்னார்குடியை சேர்ந்தவர் சாதிக் பாஷா.

பேஸ்புக், டிக் டக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர் இவர்.

இதன் காரணமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

களவாணி, நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

சமீபத்தில் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தவறாக சித்தரித்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி போலீஸ் சாதிக் பாஷாவை கைது செய்துள்ளனர்.

சாதிக் பாஷாவை 15 நாட்கள் திருச்சியிலுள்ள மத்திய சிறையில் அடைக்க மன்னார்குடி கோர்ட் உத்தரவிட்டுள்ளது

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்

Uriyadi vijayakumarமூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது.
விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், ‘உரியடி’ புகழ் விஜயகுமார், பசுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடி குழு’ ஆகிய படங்களுக்கு கதாசிரியராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாஸ்கர் சக்தி, இப்படத்திற்கு திரைகதை-வசனம் எழுதுகிறார்.

இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவில், ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், ஹரி சாய் இசையமைக்க, பாடல்களை விவேகா எழுதுகிறார். கலைக்கு சிவசங்கர் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை தினேஷ் சுப்பாராயன் அமைக்கிறார்.

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி இயக்கும் இந்த புதிய படத்தின்
நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
உரியடி விஜயகுமார்
பசுபதி
மற்றும் பலர்

தயாரிப்பு: மூவ் ஆன் பிலிம்ஸ் சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார்
கதை, இயக்கம்: போஸ் வெங்கட்
திரைகதை, வசனம்: பாஸ்கர் சக்தி
ஒளிப்பதிவு: இனியன் ஜே ஹாரிஸ்
படத்தொகுப்பு: ஜியான் ஸ்ரீகாந்த்
கலை: சிவசங்கர்
இசை: ஹரி சாய்
பாடல்கள்: விவேகா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு லாரன்ஸ் பாராட்டு

கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு லாரன்ஸ் பாராட்டு

Raghava lawrenceஅனைவருக்கும் வணக்கம்!
—————————————-
இன்று உலகையே பெரிதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும்
“கொரோனா வைரஸ்” தமிழகத்தில் முழுமையாய் பரவி விடாமல் இருக்க,
இந்தியாவிலேயே
முதன்மை மாநிலமாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை,
துரிதமாகவும்
மிகத் தீவிரமாகவும் எடுத்து,
“கொரோனா வைரஸை”
கட்டுக்கள் வைத்திடுவதற்காக
சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர் மாண்புமிகு திரு “எடப்பாடி” பழனிச்சாமி சார் அவர்களுக்கும், , மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் சார் அவர்களுக்கும்
மனப்பூர்வமான பாராட்டுக்கள்!

பொதுவாக ஒரு விஷயத்தில் அரசு சரியாக நடவடிக்கை எடுக்காத பொழுது,
எப்படி தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறதோ,
அதேபோல,
ஒரு விஷயத்தில்
அரசு சரியாக செயல்படுகிற போது
பாராட்ட வேண்டியதும் நமது கடமை!

தமிழக அரசை பாராட்டுகிற அதே சமையம்,
பொதுமக்களாகிய நாமும்
அரசு எடுத்துக் கூறி வருகிற, சுகாதார பாதுகாப்பு முறைகளை கவனத்துடன் கடைப்பிடிப்போம்!
உயிர் நலன் காப்போம்!
நன்றி!

அன்புடன்……
ராகவா லாரன்ஸ்.

உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும்..; மாஸ்டர் விஜய் பன்ச்

உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும்..; மாஸ்டர் விஜய் பன்ச்

Vijay slams IT Raid with his punch dialogue at Master Audio launchமாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போத ஒரு குட்டிக் கதையுடன் பன்ச் டயலாக் சொன்னார்.

ஒரு சில இடத்துல விளக்கேத்தி கும்பிடுவாங்க… ஒரு சில பேர் பூ போட்டு வணங்குவாங்க… நம்மள புடிக்காத சில பேர் கல்லு விட்டு எரிவாங்க…

என் படத்துல ஒரு பாட்டு இருக்கும். நீ நதி போல ஓடிக் கொண்டிரு.

நம்ம நதி போல ஓடிக்கிட்டே இருக்கனும். நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்லனும்.

ஒரு சில நேரத்துல உண்மையா இருக்கனும்ன்னா ஊமையா இருக்கனும்.

விழா தொகுப்பாளர் விஜய்யிடம் கேட்டார்..

20 வருசம் முன்னாடி இருந்த விஜய்யிடம் கிட்ட ஏதாச்சும் கேட்கனும்ன்னா என்ன கேட்பீங்க..

அப்போ வாழ்ந்த வாழ்க்கை வேண்டும். நிம்மதியா இருந்துச்சி… ஐடி ரெய்டு இல்லாம இருந்துச்சி.
விஜய்சேதுபதியை மேடைக்கு அழைத்து அவருக்கு முத்தமிட்டார் விஜய்.

Vijay slams IT Raid with his punch dialogue at Master Audio launch

‘மாஸ்டர்’ சூட்டிங்ல வெறியாகி மன உளைச்சல் ஆகிட்டேன்.. – விஜய்

‘மாஸ்டர்’ சூட்டிங்ல வெறியாகி மன உளைச்சல் ஆகிட்டேன்.. – விஜய்

Thalapathy Vijays upset and stress in Master Shooting மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதாவது…

மாநகரம் படம் மூலம் நம்மள திரும்பி பாக்க வச்சாரு டைரக்டர் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தை திரும்பி திரும்பி பாக்க வச்சாரு.

இப்போ மாஸ்டர்ல என்ன பண்ண போறாருன்னு தெரிஞ்சிக்க நானும் காத்திருக்கேன்.

லோகேஷ் கையில சீன் பேப்பர் இருக்காது. யார் கிட்டயும் இருக்காது. பர்ஸ்ட் 2 3 நாட்கள் வெறியாகி மன உளைச்சல் ஆகிட்டேன். நான் கோவப்பட்டு இவரோட இன்னும் 4 மாசம் என்ன பண்ண போறாம்னு நெனச்சேன்.

இவ்வாறு பேசினார் விஜய்.

Thalapathy Vijays upset and stress in Master Shooting

நண்பர் அஜித் மாதிரி வந்துட்டேன்; மாஸ்டர் இசை விழாவில் விஜய் பேச்சு

நண்பர் அஜித் மாதிரி வந்துட்டேன்; மாஸ்டர் இசை விழாவில் விஜய் பேச்சு

Vijay talks about his friend Ajith at Master Audio launchமாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது…

என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்களே…

எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும்.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண்காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க.

விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு.

ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு.

உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு.

மாளவிகாவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அழகான முகம். அவர் உடனே தமிழ் கத்துகிட்டாரு.

நம்ம நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு போலம்னு கோட் சூட் போட்டு வந்திருக்கேன்” என்றார் (அப்போது கரவொலி அடங்க வெகு நேரம் ஆனது.

என பேசினார் விஜய்.

Vijay talks about his friend Ajith at Master Audio launch

More Articles
Follows