தேசத்தை உலுக்கிய சம்பவம் ‘மட்கா’..; நான்கு வேடங்களில் வருண் தேஜ்

தேசத்தை உலுக்கிய சம்பவம் ‘மட்கா’..; நான்கு வேடங்களில் வருண் தேஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிப்பில், பலாசா 1978, ஸ்ரீ தேவி சோடா சென்டர் படப்புகழ் கருணா குமார் இயக்கத்தில், பான்-இந்திய திரைப்படமாக உருவாகிறது “மட்கா”.

டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா, வைரா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ரஜனி தல்லூரியின் SRT என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து, இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் போடப்பட்டு, பரபரப்பாக நடந்து வருகிறது. மட்கா திரைப்படம், மிகப்பெரும் பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்ப தரங்களுடன்,
பிரம்மாண்டமாக உருவாகிறது.

வருண் தேஜுவின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில், படத்தின் தயாரிப்பாளர்கள் “மட்கா” திரைப்படத்தின் அறிமுகத்தை, ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், படத்திலிருந்து ஓப்பனிங் பிராக்கெட் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கிராமபோனில் கதாநாயகன் இசையை வாசிப்பதை காட்டும் காட்சியுடன் இந்த வீடியோ துவங்குகிறது. பின் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் கதாப்பாத்திரங்களைக் காட்டுகிறது.

இதில் நவீன் சந்திரா கேங்ஸ்டராகவும், பி ரவிசங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். கதாநாயகனின் சிறுவயதுப் பகுதி அவன் கபடி விளையாடுவதைக் காட்டுகிறது,

மட்கா

பின்னர் அவன் சூதாட்ட மாஃபியாவின் தலைவனாகிறான். அவன் ஒரு சிகார் புகைத்துக் கொண்டு, யாரிடமோ போனில் ‘ப்ராமிஸ்’ என்று சொல்வதோடு வீடியோ நிறைவுபெறுகிறது.

இந்த வீடியோ கிளிப்பில், வருண் தேஜ் முழுமையாகக் காட்டப்படவில்லை என்றாலும், மிகவும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, அவர் முழுமையான தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் என்பது புரிகிறது.

அவரது ஆடை வடிவமைப்பு, 80களின் ஃபேஷன் பாணியை ஒத்திருக்கிறது. வருண் தன் கவர்ச்சிகரமான நடிப்பு மற்றும் மேனரிசம் மூலம் திரையில் அசத்துகிறார். அவர் பேசும் ‘பிராமிஸ்’ என்ற ஒரே வார்த்தை, மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

1958 மற்றும் 1982 க்கு இடையில் நடக்கும் கதை என்பதால், 50 களில் இருந்து 80 கள் வரையிலான சூழலை மீண்டும் கச்சிதமாக உருவாக்கி இயக்குநர் கருணா குமார் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் A கிஷோர் குமார் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆஷிஷ் தேஜா புலாலா ஆகியோரின் திறமையில் கடந்த காலத்தின் அழகியல் திரையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அற்புதம். தொழில் நுட்ப தரமானது, வெகு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த அறிமுக வீடியோ படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.

மட்கா

மட்கா படக்கதை முழு தேசத்தையும் உலுக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 24 வருட கதை என்பதால் வருண் தேஜ் இப்படத்தில் நான்கு வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றுகிறார்.

வருண் தேஜ் ஜோடியாக நோரா ஃபதேஹி மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் நவீன் சந்திரா மற்றும் கன்னட கிஷோர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R எடிட்டராகவும், சுரேஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். இத்திரைப்படத்தில் பல அதிரடி காட்சிகள் இருப்பதால், 4 ஃபைட் மாஸ்டர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : பிரியசேத்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா
கலை: சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் & டிஜிட்டல் – ஹேஷ்டேக் மீடியா

Varun Tej starrer Matka opening bracket video goes viral

RDX பட மலையாள நடிகரை ‘மெட்ராஸ்காரன்’ ஆக்கிய வாலி மோகன்தாஸ்

RDX பட மலையாள நடிகரை ‘மெட்ராஸ்காரன்’ ஆக்கிய வாலி மோகன்தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், SR PRODUCTIONS தயாரிப்பில், பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’

மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” !!

புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் மெட்ராஸ்காரன் திரைப்படம்.

SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.

மெட்ராஸ்காரன்

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் நாயகி மற்றும் துணை கதாப்பாத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

மெட்ராஸ்காரன்

Shane Nigam Mollywood star joins Madraskaaran

பொங்கல் விழாவை மகிழ்ச்சி பொங்க மக்களுடன் கொண்டாடிய இமான்

பொங்கல் விழாவை மகிழ்ச்சி பொங்க மக்களுடன் கொண்டாடிய இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான்.

முதலில் விளம்பரஙகளுக்கு இசையமைத்த அந்த இவர் பின்னர் சினிமாவில் இசையமைக்க தொடங்கினார். தற்போது 100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.

தமிழில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார்.

D.இமான்

இவர் தனக்கென்று ஒரு TRUST ஆரம்பித்து, அதன் மூலமாக பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்தும், பல உதவிகளை தேடி போய் செய்தும் வருகிறார்.

இசையமைப்பாளர் இமான் அவர்கள் உசிலம்பட்டிக்கு சென்று அங்குள்ளவர்களை ஊக்குவித்தது மதுரை மாவட்ட உசிலம்பட்டி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விழாவை FRIENDS FILM FACTORY TEAM அவர்களும் BUTTERFLY NETWORK TEAM இருவரும் ஊருதுணையாக இருந்து விழாவை சிறப்பித்து கொடுத்தனர்.

D.இமான்

Music Composer D Imman celebrated Pongal with Village peoples

அந்த சம்பவத்திற்க்கு பிறகு என்னைப் பூப்போல பார்த்துக் கொண்டனர்.. – விஜய் ஆண்டனி

அந்த சம்பவத்திற்க்கு பிறகு என்னைப் பூப்போல பார்த்துக் கொண்டனர்.. – விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் ‘ஹிட்லர்’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

இயக்குநர் தனா பேசியதாவது…

இந்த படத்தில் நன்றி என ஆரம்பித்தால் 500 பேருக்கும் மேல் நன்றி சொல்ல வேண்டும். அத்தனை பேரின் பங்கும் இருக்கிறது. என்னை நம்பி தயாரித்த ராஜா சார், என் கதையில் நடிக்க வந்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி.

இந்த படத்தில் மிகச் சிறந்த நடிகர் பட்டாளம் எனக்குக் கிடைத்தார்கள். அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. கௌதம் மேனன் சார், விஜய் ஆண்டனி சார் என எல்லோருமே அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப்படம் முன்பே வந்திருக்க வேண்டியது. விஜய் ஆண்டனி சாருக்கு நடந்த எதிர்பாராத ஆக்ஸிடெண்ட் படத்தைத் தாமதமாகியது. அந்த ஆக்ஸிடெண்ட் நடந்து அவர் எங்களுக்காக விரைவாக எழுந்து வந்தார். அவரது அர்ப்பணிப்பு வியப்பானது. அவருக்கு என்றென்றும் நன்றி.

இந்த இடத்தில் என் ஒளிப்பதிவாளர் நவீன்குமாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவரது உழைப்பு அபாரமானது. படத்தின் மியூசிக் விவேக், மெர்வின். நாங்கள் மிக நட்பாக எல்லாவற்றையும் பேசிக்கொள்வோம். படத்திற்காக என்ன செய்யலாம் என என்னுடன் பேசிப் பேசி, எல்லாவற்றையும் செய்வார்கள். இசை மிக அற்புதமாக வந்துள்ளது. அவர்களுக்கு நன்றி.

சங்கத்தமிழன், மணிரத்னம் சார் படத்திலிருந்தே தெரியும். அவருடன் மிக நட்பாகப் பழகுவேன். எனக்காக இறங்கி வேலை செய்வார் அவருக்கு நன்றி. ரியா சுமனுக்கு பதிலாக முதலில் வேறு ஒரு ஹீரோயின் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் ஷூட்டிங்கிற்கு இரண்டு நாட்கள் முன்னால் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் எங்களுக்காக வந்தவர் தான் ரியா சுமன், மிகச்சிறந்த நடிகை. ரொம்பவும் புரபஷலானவர். நன்றாக நடித்துள்ளார்.

“ஹிட்லர்” எனது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட படம். ஒரு ஆக்சன் திரில்லர் படம். படத்தைப் பார்த்த போது எங்களுக்கு நிறைவாக இருந்தது அதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது..

இயக்குநர் தனாவின் ‘வானம் கொட்டட்டும்’ படத்திற்கு மிகப்பெரிய ஃபேன் நான்.

நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார்.

ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கௌதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். விவேக், மெர்வின் இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக் கொண்டார் ஸ்டண்ட் டைரக்டர் முரளி , அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைக் கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

After Accident Hitler team treated me softly says Vijay Antony

விஜய்ஆண்டனி சாஃப்ட்… ரியா சாஃப்ட்.. தனா சாஃப்ட்.; பேரு மட்டும் ‘ஹிட்லர்’… – ரெடின் கிங்ஸ்லி

விஜய்ஆண்டனி சாஃப்ட்… ரியா சாஃப்ட்.. தனா சாஃப்ட்.; பேரு மட்டும் ‘ஹிட்லர்’… – ரெடின் கிங்ஸ்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் ‘ஹிட்லர்’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் T.D.ராஜா பேசியதாவது…

இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு மிகக்கடினமாக உழைத்துள்ளனர். மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் டைரக்டர் என ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். நடிகை ரியா சுமன் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். தனா சார் 24 மணி நேரமும் இந்தப்படத்தையே நினைத்துக் கொண்டிருப்பார். இரவு பகலாக படத்திற்காக உழைத்துள்ளார்.

விஜய் ஆண்டனி மனிதநேய மிக்க மாமனிதன் அவர். அவரது சொந்தப் படத்தை விட இந்தப் படத்தின் மீது அக்கறை கொண்டு என்னிடம் எப்போதும் விசாரித்துக் கொண்டிருப்பார். அவரது மனதிற்கு நன்றி. “ஹிட்லர்” மிகச் சிறந்த படைப்பாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் விவேக் பேசியதாவது…

ஒரு நல்ல திரைப்படத்தில் நாங்களும் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தனா, விஜய் ஆண்டனி ஆகியோருடன் பணிபுரிந்தது நல்ல அனுபவம். உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் மெர்வின் பேசியதாவது…

நாங்கள் நாக்க முக்க பாடல் வெளியான காலத்திலிருந்து விஜய் ஆண்டனி ரசிகர்கள். இப்போது அவருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி. ஒரு நல்ல திரைப்படத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கண்டிப்பாக இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம். அனைவருக்கும் நன்றி

ஹிட்லர்

நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது…

தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஒரு மிகச்சிறப்பான படைப்பில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி.

இயக்குநர் தனா இதுவரை நான் நடித்த படத்தில் இல்லாத புதிய ரியாக்சனை இப்படத்தில் என்னிடம் கொண்டுவந்தார். தனாவிற்கு நன்றி. விஜய் ஆண்டனி சாருடன் பல காலமாக இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன், இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. மக்களை அடிமைக்குள்ளாக்கினான் ஹிட்லர், இந்த “ஹிட்லர்” மக்களின் நன்மைக்காக அதிகாரத்தை கையில் எடுத்துள்ளான். பார்த்து ரசியுங்கள் நன்றி.

நடிகர், இயக்குநர் தமிழ் பேசியதாவது…

“ஹிட்லர்”, மிக அழுத்தமான தலைப்பு இந்தப்படத்திற்கு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஒரு படம் முடிந்த பிறகு எல்லோருக்கும் நன்றி சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இயக்குநர் தனா 24 மணி நேரமும் இந்த படத்திற்காக மட்டுமே உழைத்துக் கொண்டே இருப்பார். எப்போதும் இதே சிந்தனை தான். இந்தப் படத்தில் அவருடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. பார்வையாளர்களுக்கும் இந்தப்படம் நல்ல அனுபவம் தரும் நன்றி.

நடிகை ரியா சுமன் பேசியதாவது…

எனக்கு இந்தப் படம் மிக முக்கியமான படம். இயக்குநர் தனா, மணி சார் ஸ்கூலிலிருந்து வந்துள்ளார். எல்லா மணிரத்னம் படங்கள் போல இந்தப்படத்தில் தனா சார் எனக்கு மிக முக்கியமான ரோல் தந்துள்ளார். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது.

விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது…

இந்த படம் பேரு தான் “ஹிட்லர்”, ஆனால் டைரக்டர் சாஃப்ட், ஹீரோ சாஃப்ட், ஹீரோயின் சாஃப்ட் ஆனால் பெயர் மட்டும் “ஹிட்லர்”. இந்தப் படம் சூப்பராக இருக்கும். விஜய் ஆண்டனி சார் படத்தில், இது வித்தியாசமாக இருக்கும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

ஹிட்லர்

Cast and Crew soft but titled Hitler says Redin Kingsley

புனே உலகத்திரைப்பட விழாவில் லிஜோ மோல் நடித்த ‘காதல் என்பது பொதுவுடைமை’

புனே உலகத்திரைப்பட விழாவில் லிஜோ மோல் நடித்த ‘காதல் என்பது பொதுவுடைமை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் என்பது பொதுவுடைமை திரைப்படம் 22வது புனே உலகத் திரைப்படவிழாவில் (Jan 18th – 25th) திரையிட தேர்வாகியுள்ளது.

ஜனவரி 19 மற்றும் 21 தேதிகளில் இப்படம் புனே திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது.

ஏற்கனவே இப்படம் இந்தியன் பனோரமா வின் கோவா திரைப்பட விழாவிலும் தேர்வாகி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ‘காதல் என்பது பொதுவுடமை’ இது ஒரு நவீன காதல் கதை. இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

இவர் லென்ஸ், மஸ்கிடோபிலாஷபி, தலைக்கூத்தல் ஆகிய படங்களின் இயக்குநர்.

இந்த படத்தில் லிஜோ மோல், ரோகிணி மொலேட்டி, வினீத் ராதாகிருஷ்ணன், கலேஷ் ராம்ஆனந்த், அனுஷா மற்றும் தீபா நடித்துள்ளனர்.

மம்மூட்டி நடித்த ‘காதல் தி கோர்’ திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி வழங்க மேன்கைன்ட் சினிமாஸ்,
நித்திஸ் பொரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைக்க, டேனி சார்லஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

காதல் என்பது பொதுவுடைமை

Kadhal Enbadhu Podhu Udaimai movie selected for Pune film festival

More Articles
Follows