ரஜினியின் ‘காலா’ பன்ச் டயலாக்கை பாடலாக்கிய ஹிப் ஹாப் ஆதி

ரஜினியின் ‘காலா’ பன்ச் டயலாக்கை பாடலாக்கிய ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hip Hop Aadhi used Rajinis Punch dialogue for his Natpe Thunai movieடைரக்டர் சுந்தர் சி. தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் நட்பே துணை.

பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் வேங்கமகன் ஒத்தையில நிக்க மொத்தமா வராங்களே என்ற பாடல் தொடங்குகிறது.

இந்த பாடலின் லிரிக் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்பாடலை சின்னப்பொண்ணு மற்றும் ஹிப்ஹாப் ஆதி இணைந்து பாடி உள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் க்யா ரே செட்டிங்கா… வேங்க மகன் ஒத்தையில நிக்கேன். தில்லு இருந்தா மொத்தா வாங்களேன்.. என்ற பன்ச் டயலாக் இருக்கும்.

தற்போது இது பாடலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hip Hop Aadhi used Rajinis Punch dialogue for his Natpe Thunai movie

கமல் 1… ரஜினி 3… இது சிபிராஜ் போடும் டைட்டில் கணக்கு

கமல் 1… ரஜினி 3… இது சிபிராஜ் போடும் டைட்டில் கணக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sibiraj next movie titled Shiva Directed by Dharani Dharanசத்யராஜ் மற்றும் சிபிராஜ் இணைந்து நடித்த ‘ஜாக்சன் துரை’ படத்தை இயக்கினார் தரணிதரன்.

இப்படம் வெற்றி படமாக அமையவே தற்போது சிபிராஜை மீண்டும் இயக்கவுள்ளார் தரணிதரன்.

இப்படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறாராம். இவர்கள் இருவரும் ஏற்கெனவே சத்யா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இப்படத்திற்கு சிவா என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல் படத்தலைப்பான ‘சத்யா’ என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்தார் சிபிராஜ்.

அதற்கு முன்பே போக்கிரி ராஜா என்ற ரஜினி படத்தலைப்பில் நடித்தார்.

சிபிராஜின் மற்றொரு படத்திற்கு ரங்கா என்ற ரஜினி படத்தலைப்பையே வைத்துள்ளனர்.

ஆக கமல் தலைப்பில் ஒரு படம்.. ரஜினி படத்தலைப்பில் 3 படம் என சிபிராஜ் நடித்துள்ளது (வருவது) இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சிவா படத்தை காவ்யா மகேஷ் என்பவர் தயாரிக்கிறாராம்.

Sibiraj next movie titled Shiva Directed by Dharani Dharan

ஐரா வை பாஸிட்டிவ் வாக பார்க்கும் இசையமைப்பாளர் KS சுந்தர மூர்த்தி

ஐரா வை பாஸிட்டிவ் வாக பார்க்கும் இசையமைப்பாளர் KS சுந்தர மூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KS sundara murthyதமிழ் இசைத்துறையில் திறமை வாய்ந்த இளம் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி அவரது அடுத்த வெளியீடான ‘ஐரா’ படம் குறித்து மிகவும் பாஸிட்டிவ்வாக உணர்கிறார். வெவ்வேறு வகையான பாடல்களை கொண்டிருந்த அவரது ஐரா ஆல்பம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த மிகப்பெரிய வரவேற்பை கொண்டாடாமல், அவரது நெருங்கிய நண்பரும், இயக்குனருமான கேஎம் சர்ஜூனுக்கு நன்றியை தெரிவிக்கிறார்.

“என் மீது இந்த அளவு நம்பிக்கையை அவர் வைக்காமல் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. லக்ஷ்மி மற்றும் மா போன்ற குறும்படங்களை எடுத்த நாட்களில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனக்கும் சர்ஜூனுக்கும் இடையே உள்ள பந்தம் விலை மதிப்பற்ற ஒரு பரிசு. அது தான் எங்களை கலையில் புதிய விஷயங்களை செய்ய உதவுகிறது. எப்போது, நாங்கள் கதையை பற்றி விவாதித்தாலும் நான் உடனடியாக சில இசைக் குறிப்புகளை வாசித்து காட்டுவேன். சம்பந்தப்பட்ட காட்சிகளை படம்பிடிக்கும் போது அது அவர் மனதில் ஓடும். எங்கள் நட்பின் ரகசியம் என்னவென்று பலரும் கேட்கிறார்கள். நிச்சயமாக, அது சர்ஜுன் எனக்கு வழங்கும் நம்பிக்கை மற்றும் சுதந்திரம் தான். அதுவே தனித்துவமாக சிந்திக்க எனக்கு உதவுகிறது. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் விருப்பமான இயக்குனர் ஒருவர் இருப்பார். அவருடன் பணிபுரியும் போது இசை மிகவும் சிறப்பாக அமையும். அது போன்ற அனுபவங்கள் ஒருவரின் திரை வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் நடப்பது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம். அந்த வகையில் என் இசை பயணத்தின் ஒரு பகுதியாக சர்ஜூன் எனக்கு கிடைத்ததை நான் வரமாக உணர்கிறேன்” என்றார்.

கே.எஸ். சுந்தரமூர்த்தி இயல்பிலேயே சினிமா மற்றும் கலை தாகம் உடையவர். அவரது தந்தை ஒரு டிசைனர். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் பணியாற்றிய அவரது படைப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டன. தனது குழந்தை பருவத்தில் இருந்து இசை திறமைகளை ஒருங்கே பெற்ற இந்த இளம் இசையமைப்பாளர் கலை மற்றும் வணிக ரீதியான படங்களுக்கும் இசையமைக்க விரும்புகிறார்.

நயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்க, கேஎம் சர்ஜூன் இயக்கியுள்ள இந்த ஐரா படத்தை கேஜேஆர் ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்திருக்கிறார். மார்ச் 28 அன்று உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் கலையரசன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இனிமே LIC-ன்னா சிவகார்த்திகேயனும் உங்க நினைவுக்கு வருவார்

இனிமே LIC-ன்னா சிவகார்த்திகேயனும் உங்க நினைவுக்கு வருவார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and Vignesh Shivan combo movie may titled LICஎம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படம் ‘மிஸ்டர் லோக்கல்’.

இப்படம் மே 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ ஆர்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவா.

இந்த படங்களை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இவையில்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் பார்த்தோம்.

லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘எல்.ஐ.சி.,’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அப்படின்னா.. இனிமே எல்ஐசின்னா சிவகார்த்திகேயனும் ரசிகர்கள் நினைவிற்கு வருவார்தானே…

Sivakarthikeyan and Vignesh Shivan combo movie may titled LIC

சிம்புவிடம் சிக்கிய சிவகார்த்திகேயன் நாயகி; கீர்த்தி சுரேஷ் எஸ்கேப்.?

சிம்புவிடம் சிக்கிய சிவகார்த்திகேயன் நாயகி; கீர்த்தி சுரேஷ் எஸ்கேப்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalyani Priyadarshan to romance with Simbu in Maanaduசெக்கச் சிவந்த வானம் மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளாராம்.

தெலுங்கில் 3 படங்களிலும் மலையாளத்தில் தனது தந்தை பிரியதர்ஷன் இயக்கி வரும் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

இவை தவிர தமிழில் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் வான் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாகவும் நடிக்கவுள்ளாராம் இந்த கல்யாணி.

Kalyani Priyadarshan to romance with Simbu in Maanadu

Marvel anthem உருவாக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

Marvel anthem உருவாக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும்.

நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதுவே இந்த படத்தை ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரசிகர்கள் மார்வெல் சூப்பர் ஹீரோக்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் மிகப்பெரிய வெற்றியே இதை பறைசாற்றுகிறது. தானோஸ் கிரகத்திலிருக்கும் மக்கள் தொகையை பாதியாக்கி விட்டதால், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பற்றிய உரையாடல்கள் ஈடு இணையற்றதாக உள்ளது.

“என் சொந்த குடும்பத்திலேயே என்னை சுற்றி மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

“அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் ஒரு படம் மட்டும் அல்ல, இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் ரசிகர்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான ஒரு பயணம். ரசிகர்கள் மிகவும் விரும்பும் மார்வெல்லை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கொண்டாடுவது தான் சரியான வழி. ரசிகர்களின் அசாதாரண ஆதரவுக்கு நாங்கள் சிறிய அளவில் தெரிவிக்கும் நன்றி” என்றார் மார்வெல் இந்தியா ஹெட் பிக்ரம் துக்கல்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பற்றி: தானோஸ் மூலம் நிகழ்வுகள் பாதி பிரபஞ்சமே அழிந்து விட, சூப்பர் ஹீரோக்கள் பலரும் மறைந்து விட, மீதமுள்ள அவெஞ்சர்ஸ் எடுக்கும் இறுதி முடிவு தான் இந்த 22 படங்களின் இறுதி படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

கெவின் ஃபைஜ் தயாரிக்க, அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ இரட்டை இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். லூயிஸ் டி’எஸ்ஸ்பிஸிடோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, டிரின் டிரான், ஜான் ஃபேவ்ரூ மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாக தயாரிப்பில் பணிபுரிந்துள்ளனர். கிறிஸ்டோபர் மார்கஸ் & ஸ்டீபன் மெக்ஃபீலி திரைக்கதை எழுதியுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

More Articles
Follows