புலி படத்தயாரிப்பாளருடன் இணையும் நடிகர் ஜிவி பிரகாஷ்

புலி படத்தயாரிப்பாளருடன் இணையும் நடிகர் ஜிவி பிரகாஷ்

gv prakashவெயில்’ படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வசந்த பாலன்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இப்போது ஒரு ஹீரோவாகவும் வலம் வருகிறார்

எனவே, ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைத்து வசந்த பாலன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ‘போக்கிரிராஜா’ படத்தை தயாரித்தவரும், ‘ஒன்பதுல குரு’ என்ற படத்தை இயக்கியவருமான பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

பிரபாஸ்-சத்யராஜீக்கு பிறகு மகேஷ் பாபுவுக்கு கிடைத்த கௌரவம்

பிரபாஸ்-சத்யராஜீக்கு பிறகு மகேஷ் பாபுவுக்கு கிடைத்த கௌரவம்

mahesh babuஉலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபாஸ் மற்றும் சத்யராஜின் உருவ சிலைகள் இடம் பெற்றுள்ளன.

தற்போது மகேஷ்பாபுவின் சிலையும் இடம் பெறவுள்ளது.

விரைவில் தனது மெழுகு சிலை இடம் பெறப்போவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மகேஷ்பாபு, இதை தனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மகேஷ் பாபுவின் உடல் அமைப்பின் மாதிரிகளை அருங்காட்சியகம் குழுவினர் எடுத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்டைல் கூடவே பிறந்தது; வைரலாகும் ரஜினியின் அமெரிக்கா போட்டோஸ்

இந்த ஸ்டைல் கூடவே பிறந்தது; வைரலாகும் ரஜினியின் அமெரிக்கா போட்டோஸ்

rajinikanth in USAரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகிறது.

தற்போது அவர் வழக்கமான உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 2 வாரம் அவர் தங்குகிறார்.

இதனிடையில் அவர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு ஹாயாக தனியாக சுற்றி வருகிறார்.

அங்கு அவர் ஒரு எஸ்கலேட்டரில் ஸ்டைலாக போஸ் கொடுத்தப்படி உள்ள ஒரு படம் வைரலாகி வருகிறது.

இதே போன்ற ஒரு போஸ் சிவாஜி படத்தில் ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஒரு காட்சியில் இருக்கும். எனவே அதையும் இந்த போட்டோவும் வைத்து… தலைவருக்கு ஸ்டைல் கூடவே பிறந்தது என ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.

மேலும் அங்குள்ள மெட்ரோ ரயிலில் ரஜினி பயணித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரன்ட்டாகி உள்ளது.

மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்… கமல் கண்டனம்

மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்… கமல் கண்டனம்

kamal haasanகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில், காவிரி வழக்கில் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, மேலும் இரண்டு வாரம் காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் தன் டுவிட்டரில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்” என பதிவிட்டிருக்கிறார்.

பாலியல் கொடுமைகளை தடுக்க சொந்த கையில் சொர்க்கம்; இருட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டர் ஐடியா

பாலியல் கொடுமைகளை தடுக்க சொந்த கையில் சொர்க்கம்; இருட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டர் ஐடியா

IAMK director santhosh p jeya kumar‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி இருக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் மே 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் பேசும்போது, ‘இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் படம். ஏ சான்றிதழ் பெற்று முற்றிலும் இளைஞர்களுக்காக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு, கவுதம் கார்த்திக்கிடம் சொன்னேன். ஒரு கட்டத்தில் அவரிடம் என்ன சொன்னேன் என்றே எனக்கு தெரியவில்லை.

அவருக்கும் என்ன கேட்டார் என்றே தெரியவில்லை. அப்படியே சூட்டிங் போய் படத்தை எடுத்து முடித்து விட்டோம்’ என்றார்.

இந்த மாதிரி படங்களில் கவுதம் கார்த்திக் நடித்தால் அவருடைய இமேஜ் பாதிக்காதா என்று இயக்குனரிடம் கேட்டதற்கு, கவுதம் கார்த்திக்கு இது போன்ற படங்கள் வருவதில்லை. வித்தியாசமான கதையம்சம் படங்கள்தான் அவரைத் தேடி வருகிறது’ என்றார்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற படத்தை எடுத்தால் அதை அதிகப் படுத்துவதுபோல் இருக்காதா என்று கேட்டதற்கு, இந்தப் படத்தில் சொந்த கையில் சொர்க்கம் காணுங்கள், அதாவது தன் கையே தனக்கு உதவி என்ற மெசேஜை சொல்லி இருக்கிறோம்’ என்றார்.

மீண்டும் மன்சூரலிகான் உடன் இணைந்த கே.ஆர்.விஜயா

மீண்டும் மன்சூரலிகான் உடன் இணைந்த கே.ஆர்.விஜயா

Mansoor Alikhan again teams up with KR Vijaya for Kadamaan Paaraiதனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார் மன்சூரலிகான்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.

மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

இந்த படத்தில் ஒரு கண்ணியமான அம்மா வேடம் ஒன்று இருந்தது அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது, கே.ஆர்.விஜயா நினைவுக்கு வந்தார்.

ஏற்கனவே நான் தயாரித்த வாழ்க ஜனநாயகம் படத்தின் போது நான் வளந்து வரும் நடிகன் நான் கேட்ட உடனே கே.ஆர்.விஜயா எனக்கு நடித்துக் கொடுத்தார்.

இப்போதும் கடமான் பாறை படத்திலும் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கண்ணியமான எளிமையான அம்மாவாக நடித்துக் கொடுத்தார். பெரிய நடிகை என்ற எந்த ஒரு கர்வமும் இல்லாமல் அப்போது போல இப்போதும் இருக்கிறார்.” என்றார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் ஜோடியாக ருக்க்ஷா என்ற கேரள பெண் மிரட்டலான கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

ஒளிப்பதிவு – மகேஷ்.T / இசை ரவிவர்மா பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்
ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் J.அன்வர் ஆக்கம், இயக்கம் மன்சூரலிகான்.

Mansoor Alikhan again teams up with KR Vijaya for Kadamaan Paarai

More Articles
Follows