தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 50 படங்களை கடந்துவிட்டார் ஹன்சிகா.
அவரது 50வது படத்திற்கு “மஹா”என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பை தனுஷ் வெளியிட்டார்.
ஒது ஒரு க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசை அமைப்பில், etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் இது.
ஒரு மாஸ் கதாநாயகனுக்குரிய தலைப்பு இது என்று அனைவரும் பாராட்டுவதாக கூறிய தயாரிப்பாளர் மதி அழகன் மேலும் கூறியதாவது ”
ஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேய நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அபரிதமான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும், ரசிகர்கள் மனதில் அவருக்கு நிலையான இடத்தை தந்து இருக்கிறது.
அவருடைய இமேஜை மனதில் வைத்து, அவருடன் இரண்டு படங்கள் இணை இயக்குனராக பணியாற்றி உள்ள இயக்குனர் U R ஜமீல் கதையை அவரை வைத்து எழுதி இருக்கிறார்.
இந்த கதை hollywood படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது. அவருடைய கதைக்கு பொருத்தமானவர் ஹன்சிகா தான் என்று ஆணித்தரமாக நம்பி இருக்கிறார்.
ஒரு தயாரிப்பாளராக அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன்.
அதற்கு உகந்ததாக “மஹா” இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தமிழ் திரை ரசுகர்களுக்கு இந்த திரைப் படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதிலும், இந்த படத்துக்கு பிறகு ஹன்சிகா ஒரு இளவரசியாக தமிழ் திரை உலகில் நீடிப்பார் என நம்புகிறேன்.
“மஹா”திரைப்படம் மூலம் ஹன்சிகாவுக்கு இளவரசி என்ற பட்டம் வழுங்குவதில் எங்கள் படக் குழுவினருக்கு பெருமை” என்கிறார் தயாரிப்பாளர் மதிஅழகன்.
விஜய் நடிப்பில் உருவான புலி படத்தில் இளவரசி மாதங்கினியாக ஹன்சிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hanshika got Princess title from her 50th movie Maha