தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீயோன் என்பவர் இயக்கியிருக்கும் படம் பொது நலன் கருதி.
கந்து வட்டி கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தை புரொடக்ஷன்ஸ் சார்பாக அன்புவேல்ராஜன் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு விஜய் ஆனந்த்.
இந்த படத்தில் கருணாகரன், சந்தோஷ், அருண்ஆதித் இவர்கள் கதையின் நாயகன்களாக நடிக்க சுபிக்ஷா, அனுசித்தாரா, லிசா இவர்கள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் இமான் அண்ணாச்சி, பில்லா பட வில்லன் யோக் ஜாப்பி, வழக்கு எண் முத்துராமன், சுப்ரமணியபுரம் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை ஹரிகணேஷ், ஒளிப்பதிவு சுவாமிநாதன், கலை கோவி ஆனந்த் செய்துள்னர்.
விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான பிடி செல்வகுமார் பேசியதாவது…
இதுநாள் வரை நான் அகிம்சை வழியிலே சென்றேன். ஆனால் இப்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் கோபமாக வருகிறது.
துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தப்பு செஞ்சது யாரு? அந்த ஸ்டைர்லைட் பேக்டரி ஓனர், மாவட்ட கலெக்டர், முதல்வர் இவர்கள்தான்.
ஆனால் போராட்டக்காரர்களை குற்றவாளியாக்கி விட்டார்கள். உயிரிழந்தவர்களுக்கு உதவித் தொகை கொடுத்தது தப்பில்லை. அதற்கு ஒரு கோடி கூட கொடுக்கலாம்.
ஆனால் உங்க பணத்தை கொடுங்க. நீங்க தப்பு பண்ணிட்டு எங்க வரிப்பணத்துல உதவித் தொகையை கொடுப்பீங்களா? இதெல்லாம் யார் கேட்கிறது.? நாமதான் கேட்கனும்.
இனிமேலும் சுயநலம் பார்த்துட்டு வாழ முடியாது. ஏதாவது செய்யனும். இனிமே உயிர் போனா என்ன? இருந்தா என்ன-
பொது நலன் கருதனும். அதுதான் இதுபோன்ற பொது நலன் கருதி உள்ளிட்ட நல்ல படங்களை வெளியிடுகிறேன். என ஆவேசமாக பேசினார் பிடி. செல்வகுமார்.
இவர்தான் விஜய் நடித்த புலி படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Producer PT Selvakumar speech about CM and Tuticorin Sterlite issue