தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் பின்னணி பாடகியும் கூட.
இவர் தமிழில் விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, சூர்யாவுடன் ‘ஏழாம் அறிவு’, தனுஷ்டன் ‘3’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. எனவே தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது பிரபாஸ் உடன் பான்–இந்தியா படமான ‘சலார்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ஒரு தெலுங்கு படத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். பாபி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.
இது சிரஞ்சீவியின் 154வது படமாக உருவாகிறது. நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
ஸ்ருதிக்கு தற்போது 36 வயதாகிறது. தமிழில் 45 வயதுள்ள நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் 60 வயதை கடந்தவர்கள். இவர்கள் ஸ்ருதியின் அப்பா கமல் வயதை உடைய நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Shruti Haasan to pair opposite with senior actors