சிம்புவை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த பிரபலம்

pandirajபாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படம் பல பிரச்சினைகளை சந்தித்து கடந்த 2016 ஆண்டு வெளியானது.

ஆனால் இதனையடுத்து தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் பாண்டிராஜ்.

தற்போதுதான் அதற்கான நேரம் அமைந்துள்ளது போலும்.

தற்போது ஜி.வி. பிரகாஷுடன் ஒரு தயாரிப்பாளராக இணைகிறார் பாண்டிராஜ்.

தன்னுடைய பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அவரின் நண்பர் P.ரவிச்சந்திரனின் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிப்பதுடன் வசனமும் எழுதியிருக்கிறார்.

செம என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்து இசையமைக்கிறார்.

இவருடன் நாயகியாக அர்த்தனா நடிக்க, யோகிபாபு,கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வில்லனாக ”ஜனா” என்பவர் அறிமுகமாகிறார்.

பாண்டிராஜின் உதவி இயக்குனர் வள்ளிகாந்த் இயக்குகிறார்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார், பிரதீப் E ராகவ் எடிட்டிங், J.K..அருள்குமார் கலை இயக்குனர், யுகபாரதி, ஏகாதசி பாடல்கள் எழுதுகின்றனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Overall Rating : Not available

Related News

கடந்த சில வருடங்களாகவே வருடத்திற்கு 200க்கும்…
...Read More
அதர்வா நடித்து, தயாரித்துள்ள செமபோத ஆகாதே…
...Read More

Latest Post