மே 25ல் அரை டஜன் படங்கள் ரிலீஸ்; அதர்வா–பரத் படங்கள் விலகல்

atharvaa and bharathகடந்த சில வருடங்களாகவே வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆனது.

அதாவது வாரத்திற்கு சுமார் 6 படங்களாவது வெளியாகின. இதனால் இதனை முறைப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனிடையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடாமல் நிறுத்தினர்.

அதன்பின்னர் பட வெளியீட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்களை முறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த மே 25ஆம் தேதி கிட்டதட்ட 8 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே மற்றும் பரத் நடித்த பொட்டு ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகவில்லை. செம போத ஆகாதே படம் ஜீன் 14ல் வெளியாகிறது.

இந்த படங்கள் விலகிக் கொள்ள தற்போது “செம, திருப்பதிசாமி குடுமபம், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, ஒரு குப்பைக் கதை, அபியும் அனுவும், காலக் கூத்து,” ஆகிய 6 படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Overall Rating : Not available

Latest Post