ஒரே நாளில் கிட்டதட்ட ஒரே பெயரில் ரிலீஸாகும் அதர்வா-ஜிவி.பிரகாஷ் படங்கள்

ஒரே நாளில் கிட்டதட்ட ஒரே பெயரில் ரிலீஸாகும் அதர்வா-ஜிவி.பிரகாஷ் படங்கள்

Semma Botha Aagatha and Sema movie clash on 25th May 2018பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் அதர்வாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் பத்ரி வெங்கடேஷ்.

இவர் மீண்டும் அதர்வாவை வைத்து இயக்கியுள்ள படம்
செம போத ஆகாதே.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மிஷ்டி, அனைகா சோதி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், நரேன், ஜான் விஜய், யோகி பாபு, மனோ பாலா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்தை இந்த வாரம் மே 18ஆம் தேதி வெளியாகவிருந்தது.

ஆனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் படத்தின் வெளியீட்டு தேதியை இம்மாதம் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதே தேதியில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள செம படம் வெளியாகிறது.

இந்த இரு படங்களும் கிட்டதட்ட ஒரே பெயரில் வெளியானால் ரசிகர்கள் குழப்பம் அடைய வாய்ப்புள்ளது.

Semma Botha Aagatha and Sema movie clash on 25th May 2018

ஹீரோவை திட்டி விட்டு ஒரு குப்பைக் கதையை வாங்கிய உதயநிதி

ஹீரோவை திட்டி விட்டு ஒரு குப்பைக் கதையை வாங்கிய உதயநிதி

udhayடான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் ஒரு குப்பைக் கதை.

காளி ரங்கசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி வெளியிடுகிறார்.

வருகிற மே 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

அதில் நடிகர் உதயநிதி, ஆர்யா, சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் உதயநிதி பேசும் போது,

தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக் கொடுத்தார்.

என்னை நடனமாட ஊக்குவித்தவர் அவர் தான்.

ஒரு படத்தில் இவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பதை அறிந்தேன். இதுவரை நல்லாதானே இருந்தார். இப்போ ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன்.

பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம் தான்.” என்று பேசினார்.

Oru Kuppai Kathai movie will be released by Red giant movies

okk movie audio

ரஜினி-சூர்யாவை அடுத்து தனுஷை இயக்கும் பா. ரஞ்சித்..?

ரஜினி-சூர்யாவை அடுத்து தனுஷை இயக்கும் பா. ரஞ்சித்..?

dhanush and ranjithகார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை அடுத்து சூர்யாவின் படத்தை இயக்கவிருந்தார் ரஞ்சித்.

ஆனால் அதற்குள் ரஜினியின் கபாலி பட வாய்ப்பு வரவே, அதில் பிஸியாவிட்டார்.

எனவே சூர்யா மற்ற படங்களுக்கு தன் கால்ஷீட்டை ஒதுக்கி விட்டார்.

அதற்குள் மீண்டும் ரஜினி பட வாய்ப்பு வரவே, காலா படத்தை இயக்க சென்றுவிட்டார்.

இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள படத்தை ரஞ்சித் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செல்வராகவன் படத்தை முடித்துவிட்டு கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

அந்த படங்களை முடித்துவிட்டு பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

இந்த படங்கள் தொடர்ந்து தனுஷ் படத்தை ரஞ்சித் இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இப்படம் சமூகம் கலந்த அரசியல் கதையாக இருக்குமாம். ஏற்கெனவே கொடி என்ற படத்தில் அரசியல்வாதியாக கலக்கியிருந்தார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டனி படத்திற்கு இசையமைக்கும் இளம் பெண் ஷிவாத்மிக்கா

ஆண்டனி படத்திற்கு இசையமைக்கும் இளம் பெண் ஷிவாத்மிக்கா

Sivatmikhaஇயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ” ஆண்டனி ” .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் (ஷிவாத்மிக்கா)

இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் “, நிஷாந்த், வைசாலி, ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம்’ ராஜா, சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இந்த விழாவில் பேசிய S .A சந்திரசேகர் பேசியவை “இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது.

எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார்.

இந்த விழாவில் ஜெயசித்ரா அவர்கள் பேசியவை ” படக்குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர்.

இந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் .தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என பேசினார்.

இந்த விழாவில் ” வெப்பம் ராஜா ” பேசியவை ” படத்தில் உள்ள அனைவரும் மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர்.

இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார்.19 வயது உடைய ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்து உள்ளார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பன்னிருக்கார்.,PC ஸ்ரீ ராம் அவைகளை போல் இவரும் மிக பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை , என பேசினார்.படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம்.கண்டிப்பா அவர் மிக பெரிய நடிகராக வருவார்.ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ஆண்டனி படத்தில் இவர் நடித்து உள்ள கதாபாத்திரத்தை பண முடியும்.மிக சிறப்பாக செய்து உள்ளார் ” என பேசினார்.

விழாவில் நடிகை ரேகா பேசியவை ” மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள்.

படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டும். ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை ‘ இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இயக்குனர் குட்டி குமார் பேசியவை” இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய நன்றி.

இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம்.ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்.

இரண்டு வித்யாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு மேல்,மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்க பட்டு உள்ளது.

உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த்.மேலும்படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஷிவாத்மிக்கா அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. ரொம்ப நாளாவே மியூசிக் பன்னிருக்காங்க’ என பேசியுள்ளார்.

இசை அமைப்பாளர் ஷிவாத்மிக்கா பேசியவை ” படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி.

இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுகமாக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம்.

வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என பேசி உள்ளார்.

சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

vijay and SANAகபாலி, பைரவா, கொடி, காலா போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன்.

இவர் அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

பிறந்த நாள் கொண்டாடும் சந்தோஷ் நாராயணனுக்கு இளையதளபதி விஜயிடமிருந்து ஒரு சப்ரைஸ் பரிசு வந்துள்ளது.

தனது கையெழுத்து போட்ட ஒரு கிரிக்கெட் பேட்டை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார்.

இதை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய்க்கு நன்றியை தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

விஷாலை அடுத்து விஜய் ஆண்டனியுடன் இணையும் அர்ஜுன்..?

விஷாலை அடுத்து விஜய் ஆண்டனியுடன் இணையும் அர்ஜுன்..?

arjun vijay antonyவிஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள காளி படம் மே 18 ரிலீஸாகிறது.

இதனையடுத்து
திமிரு பிடிச்சவன்’ படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் சிஷ்யர் கணேஷா இப்படத்தை இயக்குகிறார்.

இதன்பின்னர் ‘கொலைகாரன்’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார்.

‘கொலைகாரன்’ படத்தில் அர்ஜுனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் இந்த கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது

More Articles
Follows