தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் பட டைட்டில்களை வைப்பது அல்லது அவரது படங்களையே ரீமேக் செய்வது, இதுதான் இப்போதைய தமிழ்சினிமாவின் ட்ரெண்ட்.
அந்த வரிசையில், இப்போது இணையவுள்ள படம் மூன்று முகம்.
இப்படம் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இதில் 3 வேடங்களில் ஒன்றான அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் இன்றும் படுபிரபலம்.
இப்படம் வெளியாகி 35 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை ரீமேக் செய்யவிருக்கிறது.
இதில் மூன்று வேடங்களில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
பல சமூக சேவைகளில், ஈடுபட்டு வரும் சூப்பர் மனிதரான லாரன்ஸ், சூப்பர் ஸ்டார் பட ரீமேக்கில் நடிப்பது பொருத்தம் தானே.