ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபு உடன் இணையும் இசக்கி பரத்

ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபு உடன் இணையும் இசக்கி பரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Golisoda 2 fame Isakki Bharath join with with Prabu for new projectமில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “கோலி சோடா 2” படத்திலும், இயக்குனர் சமூத்திரகனி – சசிக்குமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “நாடோடிகள் 2” படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.

இவருடன் முக்கிய வேடத்தில் “இளையதிலகம்” பிரபு நடிக்கிறார். இவர்களுடன் “நான் கடவுள்” ராஜேந்திரன், சித்ரா லட்சுமனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மேலும் முன்னனி கதாநாயகிகளுள் ஒருவர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.

இயக்குனர் விக்ரமனிடம் பல படங்களில் துணை/இணை இயக்குனராக பணியாற்றியவரும், கோலி சோடா 2 படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவருமான ராமகிருஷ்ணன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா கிளாப் அடிக்க, சிவாஜி பிலிம்ஸ் குமார் கேமரா ஆன் செய்ய, இயக்குனர் பாலாஜி சக்திவேல் இப்படத்தின் முதல் காட்சியை படமாக்கினார்.

சென்னை கடற்கரை அருகே இப்படத்திற்காக பிரம்மாண்டமாக ரெஸ்டாரண்ட் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Golisoda 2 fame Isakki Bharath join with with Prabu for new project

 

கடைக்குட்டி சிங்கத்திற்கு கிடைத்த கௌரவம்; துணை ஜனாதிபதி பாராட்டு

கடைக்குட்டி சிங்கத்திற்கு கிடைத்த கௌரவம்; துணை ஜனாதிபதி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vice President of India Venkaiah Naidu praises Kadaikutty Singamசூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் பட அண்மையில் வெளியானது.

பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், விஜி சந்திரசேகர், பானுப்ரியா, சூரி, பொன்வண்னன், இளவரசு, சரவணன், மாரிமுத்து முதலானோர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பாஜ. கட்சியை சேர்ந்தவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கய்யா நாயுடு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அதில், ‘சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான ‘சின்ன பாபு’ (தமிழில் – ‘கடைக்குட்டி சிங்கம்) திரைப்படத்தை பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரஸ்யமான நல்ல படம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்!

ஒரு ஜனாதிபதி ஒரு திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவிப்பது என்பது அரிதான நிகழ்வாகும்.

எனவே இப்படக் குழுவினருக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக இது பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் இதற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Vice President of India Venkaiah Naidu praises Kadaikutty Singam

ஆர்.டி.ராஜா பட நிறுவனத்தை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்

ஆர்.டி.ராஜா பட நிறுவனத்தை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan decided to give farewell to his Kanaa teamதான் தயாரிக்கும் படத்தின் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதை மிக மிகப் பிரம்மாண்டமாக செய்பவர் 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவன அதிபர் ஆர்.டி. ராஜா.

தங்கள் பட சூட்டிங் நிறைவடையும் போது அந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி சொல்வதையே ஒரு விழாவாக எடுப்பார்.

வேலைக்காரன், சீமராஜா படங்களுக்கும் இதை செய்தார்.

தற்போது இதே வரிசையில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

இவர் முதன்முறையாக தயாரித்துள்ள கனா படத்தின் சூட்டிங் இன்றோடு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று (17-7-18) மாலை சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படதை அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

’மரகதநாணயம்’ படத்திற்கு இசை அமைத்த திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.

Sivakarthikeyan decided to give farewell to his Kanaa team

kanaa wrap up

தன் சம்பளத்தை நா. முத்துகுமார் குடும்பத்திற்கு கொடுத்த சிவகார்த்திகேயன்

தன் சம்பளத்தை நா. முத்துகுமார் குடும்பத்திற்கு கொடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan given his salary to Na Muthukumar familyநடிகர், தயாரிப்பாளர், பாடகர் என வலம் வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக கோலமாவு கோகிலா படத்திற்காக பாடலாசிரியராக அவதாரம் எடுத்தார்.

நயன்தாரா நாயகியாக நடித்த இப்படத்தை லைக்கா தயாரிக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் கல்யாண வயசு என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

இப்பாடலில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிப்பார் யோகி பாபு.

இந்த பாடல் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை பிரபலமானது.

ஆனால் இந்த பாடலுக்காக சிவகார்த்திகேயன் சம்பளம் எதையும் வாங்கவில்லையாம்.

தனக்கு கொடுக்க நினைக்கும் தொகையை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுக்க சொல்லிவிட்டாராம்.

சிவகார்த்திகேயன் நடித்த முதல் படத்தில் நா.முத்துக்குமார் பாடல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan given his salary to Na Muthukumar family

na muthukumar family

முதன்முறையாக தமிழ் சினிமாவில் *ஆக்டோபஸ்* நடிக்கும் படம்

முதன்முறையாக தமிழ் சினிமாவில் *ஆக்டோபஸ்* நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First time Octopus act in Tamil Cinema“வீரையன்” இயக்குனர் பரீத் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படைப்பு “ஆக்டோபஸ்”.

இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களோடு, முதன்மை கதாப்பாத்திரத்தில் “ஆக்டோபஸ்” ஒன்றும் நடிக்க இருக்கிறது.

“அனகோண்டா”, “கிங்காங்க்”, “லைப் ஆப் பை” ஆகிய படங்களை போல குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக இப்படம் தயாராக உள்ளது.

ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட இருக்கும் இப்படத்திற்கான, முதல் கட்ட தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

First time Octopus act in Tamil Cinema

First time Octopus act in Tamil Cinema

சீமராஜா-வில் *சூப்பர் சிங்கர்* செந்தில் கணேஷுக்கு வாய்ப்பளித்த இமான்

சீமராஜா-வில் *சூப்பர் சிங்கர்* செந்தில் கணேஷுக்கு வாய்ப்பளித்த இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Singer fame Senthil Ganesh croon for Immans music in Seemarajaஓரிரு தினங்களுக்கு முன் விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6வது சீசன் இறுதிச் சுற்று நடைபெற்றது.

இதில் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார் நாட்டுப்புற கலைஞரான செந்தில் கணேஷ்.

இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் போதே இவர் மிக பிரபலமானார்.

இவருக்கு தன் இசையில் பட ஒரு வாய்ப்பு அளித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பளித்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.

இப்படத்தில் நாட்டுப்புற பாடலை அவர் பாடியுள்ளார் என்றும் அந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என இமான் தெரிவித்துள்ளார்.

Super Singer fame Senthil Ganesh croon for Immans music in Seemaraja

More Articles
Follows