நாடோடிகளை தொடர்ந்து சுந்தர பாண்டியனுக்கும் 2ஆம் பாகம் எடுக்கும் சசிகுமார்

நாடோடிகளை தொடர்ந்து சுந்தர பாண்டியனுக்கும் 2ஆம் பாகம் எடுக்கும் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Nadodigal 2 Sasikumar going to act in Sundarapandian 2கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை தமிழ் திரையுலகினர் வாடிக்கையாக்கி விட்டனர்.

இதுநாள் வரை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இந்த பயணத்தில் சேராமல் இருந்து வந்தார்.

அவரின் சமீபத்திய படங்களான பலே வெள்ளையத்தேவா, கிடாரி உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை.

எனவே அவரும் தன் பழைய ஹிட் படங்களின் 2ஆம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டார்.

தற்போது நாடோடிகள் 2 என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் இவருடன் சமுத்திரக்கனி, அஞ்சலி, அதுல்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும் வேளையில் சுந்தர பாண்டியன் படத்தின் 2ஆம் பாகத்தையும் எடுக்க தயாராகிவிட்டார்.

இப்படத்தை முதல் பாக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவிருக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

After Nadodigal 2 Sasikumar going to act in Sundarapandian 2

இசை ஆல்பத்திற்காகவே புதிய மியூசிக் சேனலை தொடங்கும் லிப்ரா

இசை ஆல்பத்திற்காகவே புதிய மியூசிக் சேனலை தொடங்கும் லிப்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

To Telecast Music Album song Libra Productions launching TV Channelபிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’ நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றை துவங்க இருக்கிறது.

இதில் வழக்கமான திரையிசை பாடல்களே ஒளிபரப்பாகாது என்கிற அம்சத்தில் தான் மற்ற மியூசிக் சேனல்களில் இருந்து இது மாறுபடுகிறது..

ஆம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது கனவுகளை கொட்டி இசை ஆல்பமாக பாடல்களை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து உரிய தொகையை கொடுத்து அதன் உரிமையை வாங்கி அவற்றை மட்டுமே இந்த சேனலில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

விரைவில் இந்த LM TV தனது ஒளிபரப்பை துவங்க இருக்கிறது.

இசை ஆல்பம் உருவாக்கி, அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகரத்துடிக்கும் திறமையாளர்களுக்கு பணமும் புகழ் வெளிச்சமும் ஒருசேர கிடைக்கும் என்பதால் இந்த சேனல் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

To Telecast Music Album song Libra Productions launching TV Channel

சினிமாத்தனம் இல்லாத சினிமா; தொட்ரா பற்றி எம்.எஸ். குமார் ஓபன் டாக்

சினிமாத்தனம் இல்லாத சினிமா; தொட்ரா பற்றி எம்.எஸ். குமார் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor MS Kumar speaks about his debut movie ThodraJ.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா.

இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..

வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் M.S.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்..

தொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள M.S.குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

“படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கனவு என்பதைவிட அதை வெறி என்றே சொல்லலாம்.

என் அம்மா என் கனவுகளை அறிந்திருந்தாலும் அவர் சினிமா உலகின் அறிமுகம் இல்லதவராக இருந்தார்.

அதனால் இறக்கும் தருவாயில் தன் மருமகளை அழைத்து தன் மகனுக்காக படம் எடுக்கவேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்துபோனார்.

என் மனைவி அந்த கனவுகளுக்கும், சத்தியத்திற்கும் தொட்ரா படத்தின் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.

நான் பழனியில் இருந்தபோது அங்கே உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியதால் இந்தப்படத்திற்காக கேமரா முன் நின்றபோது பெரிதாக பயம் ஏற்படவில்லை.

நாமதானே பணம் போடுறோம்? முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தால் என்ன? என்ற கேள்விதான் இன்று நிறைய புதியவர்களின் தவறாக உள்ளது. நான் அந்த தவறை செய்யத் தயாராக இல்லை.

எனக்கு நடிக்க வரும் என்பதை மக்களுக்கு அல்ல.. இந்த திரையுலகிற்கு முதலில் சொல்லவேண்டும். படிப்படியாக திரையுலகின் மூலம் மக்கள் மத்தியில் என்னை பதிய வைக்க வேண்டும்.

ஒரு நல்ல நடிகனாக பெரிய இயக்குநர்களின் படங்களில் பேசப்படும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் அவ்வளவுதான் எனத் தெளிவாக தன் எதிர்காலத்தை ரூட் போட்டுக்காட்டியவர் மேலும் கூறியதாவது,

இயக்குநர் மதுராஜ் சொன்ன இந்தக்கதையில் எனது கேரக்டர் பிடித்திருந்தது. எனக்கு செட்டாகும் போலத் தோன்றியது. மற்றபடி கதைக்கு என்ன தேவைப்பட்டதோ அதை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார் இயக்குநர் மதுராஜ்.

தொட்ரா படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகளைத்தவிர அனைத்து காட்சிகளையுமே மிக இயல்பாக படமாக்கியுள்ளோம்.

காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நிஜமான கோவில் திருவிழாக்கள் நடக்கும் இடங்களுக்கே சென்று மக்கள் அறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து படமாக்கியது புதிய அனுபவமாக இருந்தது.

எனக்கும் ஹீரோ பிருத்விக்கும் சண்டைக்காட்சி ஒன்று இருக்கிறது. நிஜ வாழ்வில் இருவர் சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் அதில் நடித்துள்ளோம். கிட்டத்தட்ட நான் கலந்துகொண்ட 25 நாட்கள்

படப்பிடிப்பிலும் சினிமா குறித்த பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.

எனக்கு ஜோடியாக மைனா சூசன் நடித்துள்ளார். அவர் முன்னாடி நடிப்பில் போட்டியெல்லாம் போடமுடியாது.

கண்களாலேயே மிரட்டக்கூடியவர். படம் பார்க்கும்போது எங்கள் நடிப்பை நிச்சயம் ஒப்பிட்டு பார்ப்பீர்கள்.
தயாரிப்பாளர் நடித்தாலே என்னத்த பண்ணப்போறாங்க.. பணம் போட்டுட்டாங்கன்றதுக்காக நடிக்கத்தெரியாதவன்லாம் நடிக்க வந்து நம்மளை சாகடிப்பாங்க..

நாம பார்த்துத் தொலையணும் என்ற எண்ணம் எல்லோர் மனசிலும் இருக்கும். ஆனால் நான் உங்களை அப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மாட்டேன். நம்பலாம். இயக்குநர் பாக்கியராஜ் படம் பார்த்துவிட்டு இரவில் வீட்டிற்குச் சென்றபின் என்னை போனில் அழைத்து நன்றாக நடித்துள்ளீர்கள் எனப் பாராட்டினார்.

கதாநாயகி வீணாவை இயக்குநர் அடித்தார் என்று சொல்லப்படுவது ஓரளவு உண்மைதான். படம் பேசும் விசயம் ரொம்ப சென்சிட்டிவ்வானது.

அதில் கதாநாயகியின் பாத்திரம் ரொம்ப முக்கியமானது. சீரியசான காட்சிக்களில் அவரது பங்களிப்பு மிக மிக அவசியம். கேரள நாயகி என்பதால் அர்த்தம் புரிந்து உச்சரிப்பதில் எமோட் செய்வதில் வீணா லேசாகத் திணறினார்.

அந்த ஒரு காட்சிக்கான ரியாக்ஷந்தான் அது. ஆனால் படம் முழுக்க அழகான நடிகையாக வருவார். முதல் படம் பாடம் என்பார்கள். போகப் போக பழகிக்கொள்வார்.

அவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைக்கும். பந்தா இல்லாத இயல்பான கதாநாயகி. இயக்குநரும் அப்படி செய்யக்கூடியவர் அல்ல. நேரம் விரயமானதால் ஏற்பட்ட கோபத்தில் தான் இயக்குநர் கோபப்பட்டார். எல்லோருமே இது அவரவர் படமாக நினைத்து உழைத்தனர். நாயகியும் அதன்பின் நிலைமையை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டார்.

என் மனைவி சந்திரா தான் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.. என்னுடைய ஆர்வத்திற்காகவும் எனது தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்திற்காகவும் தான் அனுபவம் இல்லாத இந்த துறையில் இறங்கினார்.

அதேசமயம் தன்னுடைய மற்ற தொழில்களில் தன்னிடம் பணிபுரிபவர்களை எப்படி ஆளுமையுடன் வேலைவாங்கி திறம்பட நடத்தி வருகிறாரோ, அதேபோல சினிமாவையும் எளிதாகக் கையாண்டுள்ளார்.

ஜாதிவிட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்தவர்கள் நாங்கள்.

சினிமாவா? ஐயோ வேண்டாம் எனக் கதறுகிற பெண்களுக்கு மத்தியில் என்னை சினிமாவில் ஆளாக்க துணை நிற்கும் என் காதல் மனைவிக்கு நன்றி என்கிறார் எம் எஸ் குமார்.

நான் மட்டுமல்ல என்னுடைய மகள் அபூர்வா சஹானாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

படத்தில் சிம்பு ‘பக்கு பக்குன்னு’ என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார். ஹீரோ பிருத்வி மூலமாக இந்த பாடலை பாடமுடியுமா என சிம்புவிடம் கோரிக்கை வைத்தோம்.

அவரும் தயங்காமல் மூன்று மணி நேரத்தில் பாடிக்கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்தி விட்டார்.

இந்தப்படத்திற்காக நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளோம். கஷ்டப்பட்டதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். வெகு ஜனங்களுக்கு பிடித்த படமாக இந்தப்படம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார் M.S.குமார்.

Actor MS Kumar speaks about his debut movie Thodra

Thodraa-Movie-Photos-2

ஆன்மிக பயணத்தில் அரசியல் பேசாத ஆன்மிக அரசியல் தலைவர் ரஜினி

ஆன்மிக பயணத்தில் அரசியல் பேசாத ஆன்மிக அரசியல் தலைவர் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths Himalaya Spiritual tour and Aanmiga Arasiyal updatesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

அங்கு அவரை ஹிமாச்சல அரசியல் பிரபலங்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அவர் விமான நிலையத்தில் இருக்கும் போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள், விபத்தில் மரணம் அடைந்த திருச்சி உஷா குறித்தும், கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினி குறித்தும் கேள்விகள் கேட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு பதிலளிக்காமல் ரஜினிகாந்த் வணக்கம் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

இதனால் பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு ரஜினியை கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் ஏன் பத்திரிக்கையாளர்களிடம் அந்த மரணங்கள் மற்றும் அரசியல் குறித்து பேசவில்லை என்பதற்கு ரஜினிகாந்த் தற்போது பதில் அளித்துள்ளார்.

அதில் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு வந்துள்ளதால் அரசியல் பேச மாட்டேன்.இது புனிதமான இடம், இங்கே அரசியல் பேச விரும்பவில்லை.” என தெரிவித்துள்ளாராம்.

அவர் தற்போது இமாச்சல பிரதேசம் பாலம்பூரில் இருக்கிறார். இன்னும் ஒரு வாரம் கழித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanths Himalaya Spiritual tour and Aanmiga Arasiyal updates

பிரபுதேவா தயாரிப்பில் இணையும் சந்தானம்-ராஜேஷ்

பிரபுதேவா தயாரிப்பில் இணையும் சந்தானம்-ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajesh santhanamகாமெடியனாக நடித்து வந்த சந்தானம் அண்மைகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது இவரது நடிப்பில் சர்வர் சுந்தரம், ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

சில காரணங்களால் அந்த நிறுவனம் இந்த தயாரிப்பை கைவிட தன் பிரபுதேவா ஸ்டூடியோஸ் மூலம் பிரபுதேவா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

மே அல்லது ஜூன் மாதம் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

Director Rajesh teams up with Santhanam in Prabudeva production

கட்டப்பாவுக்கு ராஜ மரியாதை; தமிழருக்கு பெருமை சேர்த்த சத்யராஜ்

கட்டப்பாவுக்கு ராஜ மரியாதை; தமிழருக்கு பெருமை சேர்த்த சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sathyaraj is the first tamilan got his statue at Madame Tussauds London Museumராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவான படம் பாகுபலி.

இந்த இரண்டு படங்களும் இந்திய சினிமாவின் பெருமையை உலகளவில் கொண்டு சென்றது.

இதில் ராஜ விசுவாசியான கட்டப்பா பாகுபலியை கொல்வது போல காட்சி இருந்தது.

இதனால் சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், இதுநாள் வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் இவருக்கு கிடைத்துள்ளது.

லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து கவுரவப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர் பிரபாஸூக்கு பாகுபலி தோற்றத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது.

லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தமிழ் நடிகர் ஒருவரின் மெழுகுச்சிலை இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Sathyaraj is the first tamilan got his statue at Madame Tussauds London Museum

More Articles
Follows