காதலர் தினத்தில் கோலி சோடா 2 பட டிரைலர் வெளியீடு

காதலர் தினத்தில் கோலி சோடா 2 பட டிரைலர் வெளியீடு

Goli Soda trailer will be released on 14th Feb Valentines Dayபிரபலமான ஒளிப்பதிவாளர்கள் தற்போது இயக்குனர்களாகவும் வலம் வருகின்றனர்.

அதில் ஒருசிலரே வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களில் முக்கியமானவர் எஸ்.டி.விஜய் மில்டன்.

‘கோலிசோடா’, ‘கடுகு’ படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இவர்.

தற்போது ஹாட்ரிக் வெற்றியை நோக்கி கோலிசோடா இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதில் சமுத்திரக்கனி முக்கியக் கேரக்டரில் நடித்து வருகிறார். அவருடன் கௌதம் வாசுதேவ் மேனனையும் நடிகராக்கியிருக்கிறார் விஜய் மில்டன்.

சுபிக்ஷா இதில் நாயகியாக நடிக்க, விஜய்மில்டனின் சொந்த நிறுவனமான ‘ரஃப் நோட்’ தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இதன் டிரைலரை பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

அன்றைக்கு என்ன ஸ்பெஷல் தெரியும்தானே.? காதலர் தினம் என்பதையும் நாங்கள்தான் சொல்ல வேண்டுமா?

Goli Soda 2 trailer will be released on 14th Feb Valentines Day

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *