‘மற்ற நடிகர்களை போல் சிம்பு டார்ச்சர் செய்யமாட்டார்…’ கௌதம் மேனன்

‘மற்ற நடிகர்களை போல் சிம்பு டார்ச்சர் செய்யமாட்டார்…’ கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and gautham menonஅச்சம் என்பது மடமையடா படம் வருகிற நவம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது.

எனவே இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது கௌதம் மேனனிடம் சிம்புவுடன் தொடர்ந்து படம் செய்கிறீர்களே? இதற்கு என்ன காரணம்? என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது…

சிம்புவுடன் பணிபுரியும் போது வசதியாக (கம்பர்ட்டாக) உணர்கிறேன்.

அவர் மற்ற நடிகர்களை போல் டார்ச்சர் கொடுக்க மாட்டார்.

சொன்னதை புரிந்து கொள்வார்.

மற்ற நடிகர்களின் பெயரை சொல்ல முடியாது.

ஏன் என்றால், மறுபடியும் அவர்களுடன் பணிபுரிய உள்ளேன்.

மீண்டும் சிம்பு பட வாய்ப்பு வந்தால், என் சொந்த தயாரிப்பில் இயக்குவேன்” என்றார்.

‘சிவகார்த்திகேயன் போல என்னால் அழ முடியாது…’ கௌதம் மேனன்

‘சிவகார்த்திகேயன் போல என்னால் அழ முடியாது…’ கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and gautham menonசிம்பு, மஞ்சிமா மோகன் முதன்முறையாக இணைந்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா.

கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் பெரும் ஹிட்டடித்துள்ள நிலையில், இப்படம் நாளை மறுநாள் (நவ. 11) தேதி ரிலீஸ் ஆகிறது.

இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சிம்பு தவிர மற்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது கௌதம் மேன்னிடம் படம் தாமத்திற்கு என்ன காரணம்? என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது…

இப்படத்தை நான் தயாரிக்கவில்லை. இதன் தெலுங்கு பதிப்பை தயாரித்தவரே இதனையும் தயாரித்துள்ளார்.

படம் எதனால் தாமதம்? என்ன காரணம் என்பது எனக்கு தெரியாது.

ஆனால் பல சிரமங்களுக்கிடையில் இப்படத்தை வெளியிட இருக்கிறோம்.

பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன்.

அதற்காக சிவகார்த்திகேயன் போல என்னால் அழமுடியாது.” என்றார்.

சூர்யா படம் டிராப் ஏன்..? கௌதம் மேனன் விளக்கம்

சூர்யா படம் டிராப் ஏன்..? கௌதம் மேனன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and gautham menonசிம்பு, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் நாளை மறுநாள் (நவ. 11) தேதி ரிலீஸ் ஆகிறது.

இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சூர்யா உடன் இணைந்து, பணியாற்ற உள்ள படம் என்ன ஆனது? என்று கேட்கப்பட்டது.

அப்போது…

அந்த படம் ஒரு ஆங்கில பாணியிலான படம். அதை தமிழில் எடுக்க நினைத்தேன்.

ஆனால் சூர்யா அது இங்கே இந்த சமயம் செட்டாகாது. பிறகு பார்க்கலாம் என்றார்.

எனவே அது தொடங்கப்படவில்லை.” என்றார்.

‘கடவுள் இருக்கான் குமாரு’க்கு தடையில்லை; ஆனால்…

‘கடவுள் இருக்கான் குமாரு’க்கு தடையில்லை; ஆனால்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashகடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், படத்துக்கு தடை ஏதுமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜேஷ் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்பட இருந்த நிலையில், படத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.

இந்தப் படத்தை TN வெளியிடும் 7 ஜி சிவா என்ற விநியோகஸ்தர் தனக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மெரினா பிக்சர்ஸ் சிங்கார வேலன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரித்த நீதிபதிகள், சேலம் சிவா ரூ 35 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி சிவாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிடத் தடை ஏதுமில்லை என்றும் உத்தரவிட்டார்.

இப்படம் நாளை வெளியாகவிருந்தது.

ஆனால் இன்றுமுதல் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்பதால் இப்படத்தை நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி-கமலுக்கு ட்விட்டரில் மோடி ரிப்ளை

ரஜினி-கமலுக்கு ட்விட்டரில் மோடி ரிப்ளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi rajini kamalஇந்தியாவில் ஊழலுக்கு காரணமான கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தை நேற்று நள்ளிரவு முதல் செயல்படுத்தினார் பிரதமர் மோடி.

ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார்.

இதற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரஜினியின் ட்வீட் “Hats off @narendramodi ji. New india is born #JaiHind”.

ரஜினிக்கு மோடியின் பதில் ட்வீட் “Thank you. All of us have to work shoulder to shoulder and create a prosperous, inclusive and corruption free India.”

கமலின் ட்வீட் “Salute Mr. Modi. This move has to be celebrated across political party lines. Most importantly by earnest tax payers.”

கமலுக்கு மோடியின் பதில் ட்வீட் “This step was taken in the interest of our honest citizens who deserve a better India.”

சிவாஜி படத்தில் ரஜினியும், இந்தியன் படத்தில் கமலும் ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக போராடியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தனுஷ்-சௌந்தர்யா ரஜினிக்காக யோகிபாபு செய்த முதல் காரியம்

தனுஷ்-சௌந்தர்யா ரஜினிக்காக யோகிபாபு செய்த முதல் காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuசில காமெடி நடிகர்கள் பேசினால்தான் சிரிப்பு வரும். ஆனால் ஒரு சிலரை பார்த்தாலே சிரிப்பு வரும்.

இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர் யோகிபாபு.

தற்போது இவர் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அந்தளவு தன் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தன் முதல் ட்வீட்டாக தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு தனுஷ் மற்றும் சௌந்தர்யா ரஜினி உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

இவர் பன்னி மூஞ்சி வாயன் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

My First Tweet All The Best To Team

More Articles
Follows