பான் இந்தியா தொடரில் ‘வாரிசு’ பட நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.; பிரதமர் மோடி பார்வையிட்டார்.

பான் இந்தியா தொடரில் ‘வாரிசு’ பட நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.; பிரதமர் மோடி பார்வையிட்டார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், கான்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி நேஷனல் ஆகியவை இந்தியாவின் புகழப்படாத
நாயகர்களின் எழுச்சியூட்டும் கதைகளைக் காண்பிக்கும் ‘ஸ்வராஜ்’ என்ற மாபெரும் படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த தொடர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விரைவில் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் விரைவில் பிரபலமான ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்புக் காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்களுடன் அண்மையில் பார்வையிட்டார்.

இந்த தொடரில் நடிப்பது பற்றி கணேஷ் கூறுகையில்…

“ஒரு நடிகராக, இந்திய வரலாற்றில் இருந்து ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.

ஒரு துணிச்சலான இதயம், ஒரு போர்வீரன் என்று நடித்த அனுபவம் உண்மையிலேயே நிறைவாக இருந்தது. “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பான் இந்தியா படமும் உருவாக்குவாதற்கான சாத்திய கூறுகள் இந்தியாவிலேயே உள்ளது.

மொழி மற்றும் கலாச்சார தடைகளை மெதுவாக உடைத்து வரும் ஓடிடி-க்கு நன்றி. வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கவும், தங்களைப் பரிசோதித்து கொள்ளவும், வெவ்வேறு மொழிகளில் பணியாற்றவும் விரும்பும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம்.

நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் சொல்லப்படாத வீரம் பற்றிய பல கதைகள் உள்ளன. அதை இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ‘பொன்னியின் செல்வன்’ நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றை சித்தரிக்கும் முக்கியமான படைப்பாக இருப்பதால், அதைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

அதேபோல் வேலு தம்பி நான் மட்டுமே படித்த ஒரு கதாபாத்திரம் & இந்த கதைகளைத் திரையில் பார்ப்பது பார்வையாளர்களுக்கும் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

மேலும் ‘சபரி’ என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பன்மொழி படமாக ‘சபரி’ வெளிவருகிறது.

இதை தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

Ganesh Venkatram plays Velu Thambi historical hero in PAN INDIA Series

BREAKING இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறைத் தண்டனை.; தீர்ப்பு விவரம் இதோ..

BREAKING இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறைத் தண்டனை.; தீர்ப்பு விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆனந்தம்’ என்ற அருமையான குடும்ப படத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி.

இதனையடுத்து ‘ரன், சண்டக்கோழி, பையா, ஜீ, அஞ்சான்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தையும் தயாரித்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் அண்மையில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்த நிலையில் இவர் மீது பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது

‘எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பில் இயக்குனர் லிங்குசாமி & அவரது சகோதரர் சுபாஷ் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

லிங்குசாமி தரப்பில் மேல் முறையீடு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Lingusamy gets jail for six months

மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் & ஐஸ்வர்யா ரஜினி.; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் & ஐஸ்வர்யா ரஜினி.; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ்.

இவர் 18 வருடங்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு யாத்ரா & லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் தனுஷ். இது இந்திய திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் இருவரும் தங்கள் குழந்தைகளை அவ்வப்போது பார்த்து வந்தனர். தனித்தனியாக புகைப்படங்களை இணையங்களில் பதிவிட்டும் வந்தனர்.

இந்த நிலையில் இவர்களின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளியில் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

விளையாட்டு குழு கேப்டனாக SPORTS CAPTAIN பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டு மகனை வாழ்த்தினர்.

இவர்களுடன் இளைய மகன் லிங்கா மற்றும் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனைப் பார்த்து ரஜினி – தனுஷ் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

Dhanush and Aishwarya Rajini attend school event of their son Yathra

முதல் படம் தோல்வி.. 2வது படம் சூப்பர் ஹிட்.. 3வது படம் பான் இந்தியா.; பிரகாசிக்கும் பிரசாந்த்

முதல் படம் தோல்வி.. 2வது படம் சூப்பர் ஹிட்.. 3வது படம் பான் இந்தியா.; பிரகாசிக்கும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பிரசாந்த்.

தன் முதல் படத்தை இயக்கும் போதே தன் குருவின் பெயரையும் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு படத்தை இயக்க ஆரம்பித்தார்.

ஜீ.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லீ’ படத்தை இயக்கினார் பிரசாந்த் பாண்டிராஜ். இந்த படம் படுதோல்வியை தழுவியது என படக்குழுவினரே ஒத்துக் கொண்டனர்.

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரசாந்த் இயக்கிய வெப் சீரிஸ் ‘விலங்கு’.

விமல், இனியா, பாலசரவணன், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ரவி உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த கிரைம் திரில்லர் தொடரை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார்.

இந்த தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பட்டித்தொட்டி எங்கும் இது பற்றியே பேசப்பட்டது.

தற்போது பிரசாந்த் பாண்டிராஜ், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் பான் இந்தியா படத்தை இயக்க போகிறாராம்.

இதனை அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க இருக்கிறார் எனவும் தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Director Prasanth Pandirajs next movie Pan India movie

Breaking சால்ட் & பெப்பர் லுக்கில் மாஸ் ரஜினி.; ‘ஜெயிலர்’ சூட்டிங்கை சென்டிமெண்ட் ஸ்பாட்டில் தொடங்கிய நெல்சன்

Breaking சால்ட் & பெப்பர் லுக்கில் மாஸ் ரஜினி.; ‘ஜெயிலர்’ சூட்டிங்கை சென்டிமெண்ட் ஸ்பாட்டில் தொடங்கிய நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் 169 படமாக உருவாகிறது ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்படுகிறது. எனவே பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதில் ரஜினியுடன் , பிரியங்கா மோகன் , ரம்யா கிருஷ்ணன் , சிவராஜ் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கை இன்று தன் சென்டிம்மெண்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடங்கியுள்ளார் நெல்சன்.

அதாவது தன்னுடைய வெற்றி படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை ராயப்பேட்டையில் தான் தொடங்கினார் நெல்சன்.

அதே இடத்தில் இன்று ஜெய்லர் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.

இன்றைய ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல காட்சிகளை படமாக்க உள்ளனர்.

இதன் பின்னர் புனே மற்றும் ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

புனேவில் ஒரு பழமையான சிறைச்சாலை உள்ளது. அதில் படத்தின் முக்கியமான காட்சிகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ள.

இதில் ஜெயிலருக்கே உரிய கம்பீரமான தோற்றத்தில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் கண்ணாடி அணிந்தபடி வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு 2023 கோடை விடுமுறையில் ஜெயிலர் படத்தை தியேட்டர்களில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Jailer shooting updates Rajinikanth First look goes viral

தாடி வைத்தவர்கள் சோம்பேறின்னா.. அப்போ மோடி – அமித்ஷா.? ‘டைட்டில்’ விழாவில் ராதாரவிக்கு பேரரசு கேள்வி

தாடி வைத்தவர்கள் சோம்பேறின்னா.. அப்போ மோடி – அமித்ஷா.? ‘டைட்டில்’ விழாவில் ராதாரவிக்கு பேரரசு கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜித் அவர்கள் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் நடைப்பெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வந்த அனைவருக்கும் தனது நன்றியை பதிவு செய்தார்.

பின்பு பேசிய R K சுரேஷ்… “ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதனையும் பதிவு செய்தார்.

மேலும் தனது வேண்டுக்கோளாக படத்தில் நடிக்கும் நடிகர்களை அந்த படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும்” என்றார்.

மைம் கோபி படத்தின் பெயரே டைட்டில் என்பதனால் பெயருக்கான அர்த்தம் என்ன என்று யாரும் கேட்க முடியாது” என்றார்.

இயக்குனர் ரகோத்து விஜய் பத்திரிகையாளர்களிடம் இந்த படத்தினை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதனை பதிவு செய்தார்.

இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் தனது தாய் மற்றும் சீதா பாட்டிக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

“என்னால முடியாது என்று நான் நினைத்த பொழுது என்னை நம்பி என்னால முடியும் என்று என்னை நம்பியவர் என் தாய். ஆறு படம் நின்னு போச்சு.. இது ஏழாவது படம்.. நிச்சயம் வெற்றி பெறும்” என்று கூறினார்.

தன் படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.

டத்தோ ராதா ரவி தனது பேச்சால் அரங்கத்தில் சிரிப்பலையினை ஏற்படுத்தினார்.

மேலும் ஒரு படம் என்றால் அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனை ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

நடிகர்கள் தங்களது சம்பளத்தை தாங்கள் ஏற்றிக் கொள்ளவில்லை எனவும் ஏற்றிக் கொடுத்தால் வாங்கி கொள்ளாமல் இருக்கவா முடியும்.? எனவும் வினவினார்.

மேலும் அவர் கூறுகையில், “எல்லாரும் படத்தை திரையரங்கில் பாக்கணும், OTT யில் பாத்தா வேலைக்கு ஆகாது.

திரையரங்கம் சென்றால் படம் பார்த்து விட்டு வர வேண்டுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை உண்ண வேண்டாம்” என்றார்.

மேலும் நடிகர்கள் தாடி வைத்திருப்பது தேவையற்றது. மேடையில் இருப்பவர்கள் பாக்யராஜ், பெசன்ட் ரவி என பலரும் தாடி வைத்துள்ளனர்.

தாடி வைப்பவர்கள் சோம்பேறிகள் என்ற பொருள் உண்டு. நான் தினமும் எழுந்தால் முதலில் செய்வது ஷேவிங் தான். ஒரு படத்தில் முஸ்லிமாக நடிக்க என்ன தாடி வைக்க சொன்னார்கள்.

தாடி வைக்க மாட்டேன். அதற்கு ஒட்டு தாடி இருக்கு. அதை வைத்துக் கொள்ளலாம். அப்போதுதான் ஒட்டு தாடி தயாரிக்கும் தொழிலாளிக்கு வேலை கொடுக்க முடியும் என்று சொன்னேன்.

இவ்வாறாக சர்ச்சையாக பேசினாலும், இறுதியில் தாய் தந்தையரை பேணி காக்க வேண்டும் என ஒரு செய்தியுடன் தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்து பேசிய மிரட்டல் செல்வா.., இந்த திரைப்படத்தில் விஜய் அஜித் படத்திற்கு நிகராக சண்டை காட்சிகள் இதில் இருக்கிறது என்பதனை தெரிவித்தார்.

படத்தின் நாயகி அஸ்வினி… நாயகன் விஜித் தனக்கு ஒரு சிறந்த துணை நடிகராக இருந்தது தனக்கு பலம் அளித்ததாக பதிவு செய்ததுடன் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” எனவும் தெரிவித்தார்.

நடிகர் பெசன்ட் ரவி.., ” ஒரு மனிதன் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், தனக்கே உரித்தான நக்கல் பாணியில் அனைவரையும் சிரிக்க வைத்தார்.

பிறகு பேசிய இயக்குநர் பேரரசு, ராதா ரவியின் பேச்சை கண்டித்து எதிர்மறையாக பேசினார். மேலும் தனது பேச்சில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சாடினார். அவர்கள் தாடி வைத்துள்ளனர். அப்படின்னா அவர்களும் சோம்பேறிகள் தானே.” என்றார்.

(பாரதிய ஜனதா ஜனதா கட்சியை சேர்ந்தவர் ராதாரவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மோடியை நினைவு இல்லாமல் ராதாரவி பேசி விட்டாரோ என்னவோ??!!.)

இயக்குனர் பாக்யராஜின் சிறப்பம்சங்கள் பற்றியும், எதிர்மறை தலைப்புகளை வைத்தாலும் வெற்றி குடுக்க முடியும் என்பதை எவ்வாறு நிரூபித்தார் என்பதனை கூறினார்.

திருப்பாச்சி படம் எவ்வாறு பெயர் பெற்றது என்ற கதையினை கூட தன் பாணியில் கூறினார்.

பிறகு பேசிய RV உதயகுமார்… மத்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையினை வைத்தார். அதாவது திரையரங்கில் டிக்கெட் எடுப்பதற்கு ஆன்லைன் இணையதளத்தையே பயன்படுத்த வேண்டும். அதுவே ஒரு சிறந்த வழி” என அவர் கூறினார்.

மேலும் யூடியூப் வலைதளங்களுக்கு ஒரு கோரிக்கையினை அவர் வைத்தார். “நாகரீகமாக டைட்டீல் வைங்க. தவறாக வழி நடத்தாதீங்க”.

கே பாக்யராஜ் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் தன் ரசனை மிக்க பேச்சினால் அனைவரையும் ஈர்த்தார். “ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அதுவே மக்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது.

எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர்சனங்கள் எனக்கு வரும்..

தூறல் நின்னு போச்சு.. மௌன கீதங்கள்.. சுவரில்லா சித்திரம் ‘ என்ற படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது.

எனது அனைத்து படங்களிலும் தலைப்பு என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். அதே சமயத்தில் மக்களை யோசிக்க வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும்”.

தனது படத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு உருவாகும் என்பதனை தன் நகைச்சுவை பேச்சினால் அழகாக வர்ணித்தார். தனது ‘அந்த 7 நாட்கள் ‘ படத்தினை பற்றியும் அவர் ஒரு சில சுவாரசியமான செய்திகளை பதிவு செய்தார்.

இறுதியாக பேசிய இயக்குநர் S P முத்துராமன் அவர்கள்.. “ஒரு திரைப்படத்தை எவ்வாறு பிரபலமடைய செய்யலாம் என்பதனை விவரித்தது மட்டும் இல்லாமல் திரை உலகில் காலடி எடுத்து வைப்பதற்காக பொறுமை மற்றும் நம்பிக்கை தேவையோ அது உங்களிடம் இருக்கின்றது.

“நாம் ஒன்று கன்வின்ஸ் ஆகனும் இல்லை என்றால் கன்வின்ஸ் பண்ணனும். விட்டு குடுத்தால் தான் ஒரு படம் பண்ண முடியும்”, என்று கூறினார்.

இறுதியாக திரைப்படம் எடுப்பது என்பது பல்வேறு தியாகம் மற்றும் இழப்புகளை உள்ளடக்கியது.” என்று பேசினார்.

Radharavis controversial speech about Beard at Title movie meet

More Articles
Follows