கமல்-ரஜினி நாயகியுடன் 30 வருடங்களுக்கு பிறகு இணையும் பார்த்திபன்

கமல்-ரஜினி நாயகியுடன் 30 வருடங்களுக்கு பிறகு இணையும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress jayapradaநினைத்தாலே இனிக்கும் படத்தில் கமல்-ரஜினியுடன் நடித்தவர் ஜெயப்ரதா.

மேலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் கேணி என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் இயக்கும் இப்படத்தில் நாசர், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு பிரச்சனையை மையப்படுத்தி இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயப்ரதாவுடன் நடிப்பது குறித்து பார்த்திபன் கூறியதாவது… ‘எனது குருநாதர் கே.பாக்யராஜ், ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் இந்தி ரீமேக் படம் ‘ஆக்ரி ரஸ்தா’ படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.

அந்த படத்தில் ஜெயப்ரதா அவர்கள் அமிதாப் மற்றும் ஸ்ரீதேவியுடன் நடித்திருந்தார்.

அதன்பின்னர் இப்போது மீண்டும் ஜெயப்ரதாவுடன் இணைவது எனக்கு மகிழ்ச்சி என்றார்.

எனக்கும் விஜய்சேதுபதிக்கும் இதான் ஒற்றுமை… – இளையராஜா

எனக்கும் விஜய்சேதுபதிக்கும் இதான் ஒற்றுமை… – இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay Sethupathi With IlayaRajaசென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா, விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது இளையராஜா பேசியதாவது…

விஜய்சேதுபதியை ஒரு நல்ல நடிகராக உங்களுக்கு தெரியும்.

இந்த கல்லூரி எப்படி ஏழை மாணவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு படிக்க உதவுகிறதோ, அதேபோல் விஜய்சேதுபதியும் திறமையான இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அந்த படங்களை தயாரித்து வருகிறார்.

நானும் அவரும் சென்னைக்கு ஒன்றுமே இல்லாமல் வந்தவர்கள்தான்.

இன்று அவர் நடிகராகவும், நான் இசையமைப்பாளராகவும் வளர்ந்துள்ளோம்.

இந்த வயதில் என்னென்ன சாதிக்க வேண்டுமோ அத்தனையையும் சாதித்துவிடுங்கள்.

ஆனால் கனவு காணுங்கள் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

கனவு காண்பதை விட்டுவிட்டு கடுமையாக உழைத்தால்தான் விரும்பிய இலக்கை அடைய முடியும்’ என்று பேசினார் இசைஞானி.

பிக்பாஸை கைது செய்யனுமா..? கமலுக்கு ஆதரவாக கஸ்தூரி

பிக்பாஸை கைது செய்யனுமா..? கமலுக்கு ஆதரவாக கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and Kasthuriகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது என்பதை பார்த்தோம்.

இதனையறிந்த நடிகை கஸ்தூரி கமலுக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவாக சில கருத்துக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது…

கமலையும் பிக்பாஸ் நிகழ்ச்ச்சியில் கலந்துக் கொண்டவர்களை எதுக்கு கைது செய்யனும்? அவங்களையே 100 நாட்கள் ஹவுஸ் அரெஸ்ட் செஞ்சுதானே வச்சுருக்காங்க.

அதுக்காக இவங்க விஜய் டிவி மேல கேஸ் போட முடியுமா? எனக் கேட்டுள்ளார்.

kasturi shankar‏Verified account @KasthuriShankar 2m2 minutes ago
Why arrest #KamalHaasan & #BiggBossTamil inmates?already they r under 100 day house arrest only.Will these guys file case against #VijayTV ?

ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் கமலுடன் கஸ்தூரி இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி சாதனையை முறியடித்து முதலிடத்தில் விவேகம்

கபாலி சாதனையை முறியடித்து முதலிடத்தில் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Vivegamசிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில் வெளியான விவேகம் டீசர் ஒரு சாதனையை படைத்துள்ளது.

ரஜினியின் கபாலி டீசர் 463 K லைக்ஸை பெற்று தமிழ் சினிமாவில் முதல் இடத்தில் இருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடித்து, 465K லைக்ஸை விவேகம் பெற்றுள்ளது.

இதனை #VIVEGAMMostLikedTamilTeaser என்று ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Vivegam teaser likes broken Kabali records

காலா கதை உரிமை வழக்கு; ரஜினி-தனுஷுக்கு கோர்ட்டு அவகாசம்

காலா கதை உரிமை வழக்கு; ரஜினி-தனுஷுக்கு கோர்ட்டு அவகாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala movie stillsஅண்மைகாலமாக ரஜினி படங்கள் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இதில் தற்போது உருவாகிவரும் ‘காலா’ படமும் விதிவிலக்கு அல்ல.

காலா படத்தின் தலைப்பும் அது ஒரு தாதாவின் கதை என்ற தகவல் வெளியானதையடுத்து, ராஜசேகர் என்பவர் இவை இரண்டிற்கும் உரிமை கோரி புகார் மனு ஒன்றை சென்னை காவல்துறை ஆணையரிடம் மே மாதம் 30-ம் தேதி கொடுத்தார்.

இவ்வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே, தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், ரஜினி மற்றும் பா.ரஞ்சித் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி பதில் அளிக்க அவகாசம் கேட்டிருந்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு (இன்று) நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, படக்குழு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பில் அனைவரும் இருப்பதால், பதில்மனு அளிக்க காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனுத்தாக்கல் செய்ய ரஜினி மற்றும் ரஞ்சித் தரப்புக்கு மீண்டும் ஒரு வாரம் காலம் அவகாசம் அளிக்கிறேன் என உத்தரவிட்டார்.

மும்பையில் விஐபி2; அமெரிக்காவில் ஸ்கெட்ச்; தாணுவின் தாராளம்

மும்பையில் விஐபி2; அமெரிக்காவில் ஸ்கெட்ச்; தாணுவின் தாராளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram tamanna sketchகபாலி மற்றும் தெறி படங்களை தொடர்ந்து, தனுஷின் விஐபி 2 மற்றும் விக்ரமின் ஸ்கெட்ச் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் கலைப்புலி தாணு.

இதில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் ஆடியோ விழாவை மும்பையில் பிரமாண்டமாக நடத்தி முடித்தார் எஸ்.தாணு.

இந்நிலையில் ஸ்கெட்ச் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக விக்ரம் மற்றும் தமன்னா இணைந்து நடித்துள்ளனர்.

Vikrams Sketch movie audio will be happen in USA

More Articles
Follows