தனுஷ்-கௌதம்மேனன் பட பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல்

தனுஷ்-கௌதம்மேனன் பட பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ennai nokki paayum thotta first look updatesதனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.

இதில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார் கௌதம்.

விரைவில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 27ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

இத்தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். ஆனால் இதில் வெளியீட்டுக்கான நேரம் குறிப்பிடப்படவில்லை.

சிம்பு-தனுஷ்-சந்தானம் படங்கள் பற்றி செல்வராகவன்

சிம்பு-தனுஷ்-சந்தானம் படங்கள் பற்றி செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Selvaraghavanநீண்ட இடைவேளைக்கு பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

எஸ்.ஜே. சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், செல்வராகவன், யுவன் இணைந்து ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.

#AskSelvaYuvan என்ற ஹேஷ்டேக்கில் பலரும் கேள்விகளை எழுப்பினார்கள்.

அப்போது சிம்புவின் கான், சந்தானத்துடன் இணையும் புதுப்படம்’, தனுஷின் ‘புதுப்பேட்டை 2’ உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டனர்.

அதற்கு பதிலளித்து செல்வராகவன் தெரிவித்ததாவது…

“எனக்கும், யுவனுக்கும் நல்ல ப்ரெண்ட் சிம்பு. கான் படம் விரைவில் மீண்டும் தொடங்கப்படும்.

சந்தானம் நடிக்கும் படம் காமெடி படம் கிடையாது. அது அவருக்கு ஒரு புதிய பரமாணத்தை கொடுக்கும்.

‘7ஜி ரெயின்போ காலனி’ ஸ்டைலில் இன்றைய படமாக இருக்கும்.

யுவன் கால்ஷீட் கொடுத்த உடனே ‘புதுப்பேட்டை 2’ ஆரம்பிப்பேன்.

நிச்சயம் ‘புதுப்பேட்டை 2’ வருவது உறுதி.” என்று பதிலளித்தார்.

ரஜினிகாந்தை சுற்றி வளைத்த ரசிகர்கள்

ரஜினிகாந்தை சுற்றி வளைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini chennai airportலைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வரும் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மும்பை விழாவில் வெளியிடப்படுகிறது.

இதில் ரஜினிகாந்த், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் கலந்துக் கொள்வதற்காக ரஜினி இன்று மதியம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

ரஜினியைப் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவருடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அதன்பின்னர் விமானத்துக்குள்ளும் ரசிகர்களுடன் செல்ஃபி ஷூட் தொடர்ந்தது.

தற்போது இந்த புகைப்படங்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

விக்ரமுக்கு கிடைத்த வரவேற்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்குமா?

விக்ரமுக்கு கிடைத்த வரவேற்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram sivakarthikeyan double remoவிக்ரமின் மாறுப்பட்ட நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் அந்நியன். (ஜீன் 2005ல் ரிலீஸ்)

இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை விட தெலுங்கில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதில் இடம்பெற்ற ரெமோ என்ற கேரக்டர் பெயரில் பேருந்துகள் விடப்பட்டன.

கல்லூரி இளசுகளிடம் ரெமோ றெக்க கட்டி பறந்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயேன் நடித்துள்ள ரெமோ ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகிற நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதற்கான அறிவிப்பை சற்றுமுன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இதன் தயாரிப்பாளர் ஆர்டி. ராஜா.

அந்நியன் ‘ரெமோ’வை போல் இந்த ‘ரெமோ’ ஆந்திராவை கலக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நயன்தாரா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்

நயன்தாரா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaரெமோ படத்தை தொடர்ந்து மீண்டும் 24ஏம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நாயகிகளாக நயன்தாரா, ஸ்னேகா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னை புறநகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இதன் சூட்டிங்கில் நேற்று நயன்தாரா தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

எனவே, அவருக்காக சிவகார்த்திகேயன் கேக் ஏற்பாடு செய்திருந்தாராம்.

நயன்தாரா கேட் வெட்டி குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

நயன்தாரா பிறந்த நாளையொட்டி படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

‘விஷயம் தெரிஞ்ச பையன் விக்னேஷ் சிவன்…’ சூர்யா பாராட்டு

‘விஷயம் தெரிஞ்ச பையன் விக்னேஷ் சிவன்…’ சூர்யா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suirya vignesh shivanவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இதன் சூட்டிங் நேற்றுமுதல் தொடங்கியது.

சூர்யா நடித்த காக்க காக்க படத்தை ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு சென்று பார்த்த நான், இன்று அவருக்கு ஆக்ஷன் சொன்னேன்.

எனது கனவு நிஜமாகும் என நினைக்கவில்லை” என முதல்நாள் சூட்டிங் குறித்து விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சூர்யா தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“முதல்நாள் சூட்டிங்கை நேசித்தேன். இந்த சின்ன பையனுக்கு (விக்னேஷ் சிவன்) நிறைய தெரிந்துள்ளது” என்று பாராட்டியுள்ளார்.

More Articles
Follows