தனுஷ் பட பாடலில் கௌதம் மேனன் செய்யும் புதுமை

தனுஷ் பட பாடலில் கௌதம் மேனன் செய்யும் புதுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and gautham menon stillsதனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.

மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க, எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விரைவில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஆனாலும் படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் யார்? ஆகிய விஷயங்களில் படு ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில், பாடல்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையிலே சில பாடல்களை படமாக்கி விட்டாராம் கௌதம்.

இதற்கு நாயகன் தனுஷும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

இந்நிலையில் இதன் இசையமைப்பாளரை ஒரு பாடலை வெளியிட்டு அதன் மூலமாக அறிவிக்க இருக்கிறார்களாம்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஷ்ணு

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஷ்ணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishnu vishal wife rajiniமாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து, கதாநாயகன் படத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால்.

அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் இப்படத்தில் நாயகியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார்.

இந்நிலையில் விஷ்ணுவின் மனைவி ரஜினி இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

எனவே இருவரின் புகைப்படத்தையும் போட்டு, என் வாழ்க்கையின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

vishnu vishal ‏@iamvishnuvishal
Happy bday to d superstar of my life

தனுஷை அடுத்து விஷ்ணு உடன் இணையும் விஜய்சேதுபதி

தனுஷை அடுத்து விஷ்ணு உடன் இணையும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishnu vishal vijay sethupathiவருடத்திற்கு குறைந்த பட்சம் ஆறு படங்களை கொடுத்துவிடும் முடிவில் இருக்கிறார் விஜய்சேதுபதி.

இதனிடையில் மற்ற நடிகர்களின் படங்களிலும் கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை படத்திலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து தற்போது கதாநாயகன் என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் கேத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை நாயகன் விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார்.

இதற்குமுன்பே, இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய்சேதுபதியுடன் விஷ்ணு இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்த சிம்பு

ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Achcham Yenbadhu Madamaiyada chennai collection reportகெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், பாபா ஷேகல், சதீஷ் உள்ளிட்டோர் நடித்த அச்சம் என்பது மடமையடா படம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வெளியானது.

ரூ. 500, 100 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் இதன் வசூலுக்கு தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் இப்படம் ரசிகர்களிடை வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது.

இப்படம் 3 நாட்களில் மட்டும் தமிழகளவில் ரூ. 14 கோடியை வசூல் செய்துள்ளதாம்.

மேலும் சென்னை வசூலில் முதல் வார முடிவில் ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி ஆகிய படங்களுக்கு பிறகு 3வது இடத்தை பிடித்துள்ளதாம்.

இதற்கு பிறகுதான் இருமுகன், 24 படங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மீண்டும் சென்னையை ரவுண்ட் கட்டும் ரஜினிகாந்த்

மீண்டும் சென்னையை ரவுண்ட் கட்டும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shootingஷங்கர் இயக்குர் 2.ஓ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதன் சூட்டிங் சில நாட்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் அமெரிக்கா பறந்தார் ரஜினிகாந்த்.

தீபாவளியன்று சென்னைக்கு வந்த திரும்பிய ரஜினி, தற்போது மீண்டும் 2.ஓ சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் மீண்டும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.

தற்போது சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி தொழில்நுட்ப பூங்காவில் நடைபெற்று வருகிறது.

அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்காக ரசிகர்கள் எடுத்த அவதாரம்

விஜய்க்காக ரசிகர்கள் எடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsபரதன் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன் தயாரித்து வரும் பைரவா அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா, சிஜா ரோஸ், பாப்ரி கோஷ் உள்ளிட்ட இளம் நாயகிகள் பட்டாளமே நடித்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கேரளா மாநிலத்திலுள்ள மலபார் பகுதியின் வெளியீட்டு உரிமையை விஜய் ரசிகர்களே வாங்கியிருக்கிறார்களாம்.

அடுத்த 2017 வருட பொங்கல் தினத்தில் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

More Articles
Follows