சிம்பு சொல்லிதான் தனுஷ் அவர் இயக்கத்தில் நடித்தாரா?

சிம்பு சொல்லிதான் தனுஷ் அவர் இயக்கத்தில் நடித்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhanushவிண்னைத் தாண்டி வருவாயா படத்திற்கு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ளார்.

அச்சம் என்பது மடமையடா என்ற இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்து, தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதே இயக்குனரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படமும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து தனுஷ் தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…

‘நானும் சிம்புவும் எப்போதுமே நல்ல நண்பர்கள்தான். அவர்தான் என்னை கெளதம் மேனனுடன் படத்தில் நடியுங்கள்.

அது நிச்சயம் எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

றெக்க பட தயாரிப்பாளரை எச்சரித்த விஜய்சேதுபதி

றெக்க பட தயாரிப்பாளரை எச்சரித்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rekka movie stillsரத்தினசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள றெக்க படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் நடைபெற்றது.

இதில் விஜய்சேதுபதி பேசும்போது….

இப்படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் என் கூட படித்தவர். நானும் அவனும் +2வில் ஒன்றாக படித்தோம்.

அவன் என்னை வைத்து படத்தை தயாரிக்க விரும்பினார்.

சினிமா வேண்டாம். தயாரிப்பு வேண்டாம் என எவ்வளவு முறை தடுத்து பார்த்தேன். எச்சரித்தேன்.

எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.

ஆனால் ஆரஞ்ச் மிட்டாய் படத்தை எடுத்தார். இப்போது றெக்க.

அவன் பிடிவாதமானவர். ஆனால் ஒரு தெளிவான நல்ல முடிவை சிந்தித்து எடுப்பார்.

இப்போது இப்படத்தை நல்ல முறையில் மிகப்பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்.

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

ஹரீஷ் உத்தமன் படத்தை தயாரிக்கும் விஜய்சேதுபதி

ஹரீஷ் உத்தமன் படத்தை தயாரிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish uthamanஆரஞ்ச் மிட்டாய் படத்தை தயாரித்த கணேஷ் தயாரித்துள்ள படம் றெக்க.

இப்படத்தை ரத்தினசிவா இயக்க நாயகனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி பேசும்போது…

நான் ஹீரோவாக ஆவதற்கு முன்னே ஹரீஷ் உத்தமனை பார்த்துள்ளேன்.

நான் பயிற்சி பெற்றவன். ஆனால் அவர் எந்த பயிற்சியும் இல்லாமல் மிக அழகாக நடிப்பவர்.

ஹீரோவுக்கு உண்டான எல்லா தகுதியும் உள்ளவர்.

நிச்சயம் ஒரு நாள் ஹீரோவாக நடிப்பார்.

என்னிடம் பணம் இருந்தால், ஒருநாள் முடிந்தால் அவர் நடிக்கவுள்ள படத்தை நிச்சயம் நான் தயாரிப்பேன்” என்றார்

‘ரெமோ’-‘றெக்க’ மோதல் குறித்து விஜய்சேதுபதியின் சூப்பர் பதில்

‘ரெமோ’-‘றெக்க’ மோதல் குறித்து விஜய்சேதுபதியின் சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan vijay sethupathiஎம்ஜிஆர்-சிவாஜி காலம் தொடங்கி இன்றைய காலம் வரை தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள இரண்டு நடிகர்களை வைத்து, அவர்களின் ரசிகர்கள் எதிரெதிர் அணியில் மோதிக் கொள்வார்கள்.

சம்பந்தப்பட்ட நடிகர்கள் நண்பேன்டா என்று தோளில் கைபோட்டு கொண்டு போஸ் கொடுத்தாலும் இவர்களின் மோதல் என்றும் தீராது.

தற்போது சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி இடையே போட்டி நிலவுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படமும் விஜய்சேதுபதி நடித்துள்ள றெக்க படமும் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.

எனவே இன்று நடந்த றெக்க படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த படங்களின் மோதல் குறித்து விஜய்சேதுபதியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்….

ரெமோ படத்தின் ட்ரைலர் பார்த்தேன். சிவா செமய்யா பண்ணியிருந்தாரு. படமும் நல்லா இருக்கும். அந்த படமும் நல்லா ஓட வேண்டும்.

அதுபோல் றெக்க படமும் இதுவரை நான் செய்யாத சப்ஜெக்ட். நல்லா கமர்ஷியல் மாஸ் ஆக இருக்கும். இந்த படமும் நல்லா ஓடும்.

ஆயுதபூஜை விடுமுறை நாட்கள் அப்படின்னு நிறைய வருது.

இந்த லீவு நாட்கள்ல நம்ம ரசிகர்களுக்கு ஒரு படம் போதுமா? எல்லா படத்தையும் பார்த்து ஓட வைக்கட்டும்” என்றார் விஜய்சேதுபதி.

சிவகார்த்திகேயனை கொண்டாடுவதில் என்ன தப்பு? – விஜய்சேதுபதி ஓபன் டாக்

சிவகார்த்திகேயனை கொண்டாடுவதில் என்ன தப்பு? – விஜய்சேதுபதி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maan karate sivakarthikeyan vijay sethupathiவா டீல் படத்தை தொடர்ந்து ரத்தினசிவா இயக்கியுள்ள படம் றெக்க. இதன் பாடல்கள் அண்மையில் வெளியானது.

விஜய்சேதுபதி நடித்துள்ள இப்படத்தை வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

அப்போது பேசிய விஜய்சேதுபதி…

“றெக்க படத்தில் ஒரு பாடல் காட்சியில் மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்டைலான போஸ் ஒன்றை கொடுத்திருப்பேன்.

இப்படியொரு காட்சியை இயக்குனரிடம் வைக்க சொன்னது நான்தான்.

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் எல்லாரையும் நிறைய பேர் கொண்டாடிவிட்டார்கள்.

என் சமகாலத்தில் எனக்கு போட்டி என்று கூறப்படும் சிவகார்த்திகேயன் படத்தை கொண்டாடுவதில் என்ன தப்பு?

அதில் எனக்கு சந்தோஷமே. எந்த வருத்தமும் இல்லை.” என்று பேசினார்.

சென்னை வசூலில் உங்க ஹீரோ எந்த இடத்தில் இருக்கிறார்?

சென்னை வசூலில் உங்க ஹீரோ எந்த இடத்தில் இருக்கிறார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay ajithதமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் இருந்தாலும் சென்னைக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

அதுபோல் சினிமாவிலும் இதன் பங்கு முக்கியமானது.

எனவே சினிமா படங்களின் வசூலும் கணக்கில் கொள்ளப்படும்.

இதில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸடார் ரஜினிதான்.

அந்த வகையில் சென்னை வசூலில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் இவர்களின் படங்கள் எது எந்த இடத்தில் உள்ளது என்பதை பார்ப்போம்….

ரஜினி : எந்திரன் : ரூ17.4 கோடி

விஜய் : துப்பாக்கி : ரூ 13.2 கோடி

அஜித் : ஆரம்பம் : ரூ 12.6 கோடி

சூர்யா : சிங்கம் 2 : ரூ 12.3 கோடி

கமல் : விஸ்வரூபம் : ரூ 12 கோடி

விக்ரம் : ஐ : ரூ 9.6 கோடி

சிவகார்த்திகேயன் : வருத்தப்படாத வாலிபர் சங்கம் : ரூ 8.5 கோடி

ஜெயம் ரவி : தனி ஒருவன் : ரூ 6.9 கோடி

தனுஷ் : வேலையில்லா பட்டதாரி : ரூ 6.8 கோடி

ஜீவா : கோ : ரூ 6.6 கோடி

சிம்பு : விண்ணை தாண்டி வருவாயா : ரூ 5.10 கோடி

விஜய் சேதுபதி : நானும் ரவுடி தான் : ரூ 4.9 கோடி

More Articles
Follows