தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் அல் பசீனோ..?

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் அல் பசீனோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

al pacino dhanushதனுஷின் கொடி படம் வருகிற அக். 28ஆம் தேதி தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து, கௌதம் மேனனின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ‘பவர்பாண்டி’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இதனையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ (Al Pacino) நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாம்.

இவர் Scarface உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்த சிறந்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படுவதால், அவர் ஒப்புக்கொள்ளக்கூடும் எனத் தெரிகிறது.

நாயகன்-குருதிப்புனல் படங்கள் குறித்து கமலின் இன்றைய பதிவு

நாயகன்-குருதிப்புனல் படங்கள் குறித்து கமலின் இன்றைய பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal facesதமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே உலகப் புகழ்பெற்ற ஆஸ்கரின் நுழைவு வாயில் வரை சென்றுள்ளன.

அதில் கமல்ஹாசனின் ‘நாயகன்’ மற்றும் ‘குருதிப்புனல்’ படங்கள் முக்கியமானவை.

இதில் நாயகன் 1987ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியும், ‘குருதிப்புனல்’ படம் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியும் (இன்று அக். 23) வெளியானது.

தற்போது இப்படங்களை நினைவுகூர்ந்து ரசிகர்கள் இணையதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

நாயகனுக்கும் குருதிப்புனலுக்கும் எனக்கும் ஆயுளைக் கூட்டிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

இத்தகைய ரசனைக்கு விருந்தோம்ப ஆனவரை முயல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதா உடல் நலக்குறைவு; ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்

ஜெயலலிதா உடல் நலக்குறைவு; ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha kamalhassanதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் கடந்த ஒரு மாதமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அடுத்த நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிறது.

இதுகுறித்து கமல் சற்றுமுன் தன் ட்விட்டல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது…

“நற்பணி இயக்கத் தோழர்களுக்கு ஒரு கோரரிக்கை: தமிழக முதல்வரின் உடல் நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி கொடுத்த அவார்ட்

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி கொடுத்த அவார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini sivakarthikeyanசினிமா பத்திரிகையாளர் சங்கம், தனது தீபாவளி மலரை வெளியிட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம், கலைப்புலி தானு, இயக்குனர்கள் பொன்ராம், விஜய் மில்டன், தாமிரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது…

இந்த மேடை நான் ரஜினி சாருக்கு நன்றி சொல்ல பயன்படுத்திக் கொள்கிறேன்.

என்னுடைய ரஜினிமுருகன் படத்திற்கும் தற்போது ரெமோ படத்திற்கு அவர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார்.

அவரிடம் இருந்து பாராட்டு பெறுவதே எனக்கு அவார்ட்தான்.” என்றார்.

சிம்புவை வாழ்த்திய தனுஷ்-த்ரிஷா; நன்றி சொன்ன மஞ்சிமா.!

சிம்புவை வாழ்த்திய தனுஷ்-த்ரிஷா; நன்றி சொன்ன மஞ்சிமா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush trisha simbu manjima mohanகௌதம் மேனன் ஒரே நேரத்தில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தையும், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தையும் இயக்கி வந்தார்.

தற்போது சற்றுமுன் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் வெளியானது.

வெளியான சில நிமிடங்களிலேயே படத்தின் ட்ரைலருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கௌதம்மேனன், சிம்பு, மஞ்சிமா ஆகியோருக்கு தனுஷ், த்ரிஷா உள்ளிட்டவர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

புருனே இளவரசியின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்..?

புருனே இளவரசியின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Brunei Princess Ajithதமிழ்நாட்டில் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் அண்மையில் புருனே நாட்டின் இளவரசியும் இவருக்கு ரசிகையாக மாறிவிட்டாராம்.

மன்னராட்சி நடைபெறும் புருனோ நாட்டில், ஒரு விருந்து விழாவில் ‘ஆலுமா டோலுமா’ பாடல் ஒலிக்க, அப்பாடலை கேட்டு மெய் மறந்தாராம் இளவரசி.

மேலும் தனது மெய்க்காப்பாளர்களடம் அஜித்தை பற்றி விசாரித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது புத்தாண்டு விருந்துக்கு அஜித்தை அழைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

ரத்தினக் கம்பள வரவேற்பு, வைரங்கள் பதித்த சிம்மாசனம் என பிரமாண்ட வரவேற்புகள் தடபுடலா செய்யப்பட உள்ளதாம்.

ஆனால், அஜித் கலந்து கொள்வாரா? இளவரசியுடன் விருந்து உண்பாரா? என்பதுதான் தெரியவில்லை.

More Articles
Follows