யூடிப்பில் நெகட்டிவ் ரிவ்யூ.. ஆனாலும் படம் சூப்பர் ஹிட்டு – சரவண சக்தி

யூடிப்பில் நெகட்டிவ் ரிவ்யூ.. ஆனாலும் படம் சூப்பர் ஹிட்டு – சரவண சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெவின் ஜோசப் இயக்கத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா மற்றும் மஹானா இணைந்து நடித்துள்ள படம் ‘கும்பாரி’.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி பேசும்போது…

“இந்த படத்தில் இவ்வளவு முத்த காட்சிகள் இருந்தும் எப்படி யு சான்றிதழ் கொடுத்தார்கள் என அருகில் இருந்த நண்பர் கேட்டார். முத்தக்காட்சிகளை தற்போது ‘யு’வில் சேர்த்து விட்டார்கள் போல என்று நான் கூறினேன்.

இது போன்ற சின்ன படங்களுக்கு மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும். சமீபத்தில் வெளியான ஒரு பெரிய படத்திற்கு சில யூடியூப் சேனல்களில் எதிர்மறை விமர்சனம் அளித்துள்ளார்கள். ஆனால் படம் நன்றாக ஓடுகிறது” என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் T.குமாரதாஸ் பேசும்போது…

‘நட்பு சம்பந்தப்பட்ட படம் இது. காதல், காமெடி, இசை என எல்லாமே நன்றாக வந்துள்ளது. சின்ன படம் என ஒதுக்கி வைக்காதீர்கள். சின்ன படங்கள் மூலம்தான் பெரிய ஆட்கள் உருவாகியுள்ளனர். அன்று ஒரு சின்ன படத்தில் நடித்த சிவாஜிராவ் தான் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியுள்ளார்” என்று கூறினார்.

Though movie super hit still negative reviews coming says Saravana Sakthi

‘மாயநதி’ படத்தில் நடித்தபோது அபி செய்த அந்த காரியம் – அப்புக்குட்டி

‘மாயநதி’ படத்தில் நடித்தபோது அபி செய்த அந்த காரியம் – அப்புக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெவின் ஜோசப் இயக்கத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா மற்றும் மஹானா இணைந்து நடித்துள்ள படம் ‘கும்பாரி’.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தேசிய விருது பெற்ற நடிகர் அப்புகுட்டி பேசும்போது…

“நானும் விஜய் விஷ்வாவும் மாயநதி என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளோம். அப்போது ஒரு கிராமத்தில் இருந்த குளம் சுத்தம் இல்லாமல் இருந்ததை பார்த்துவிட்டு அதனை புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாவில் அதன் அவல நிலை குறித்து பதிவிட்டு விட்டார் விஜய் விஷ்வா.

இதை பார்த்துவிட்டு அந்த ஊர்க்காரர்கள் சிலர் அவரை தேடி வந்து விட்டனர். அந்த அளவிற்கு சமூக பொறுப்பு கொண்டவர்” என்று பாராட்டினார்.

Appukutty share his experience with Abi and Venba starrer Mayanadhi

ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளில் வேண்டுமென்றே விஜய் அதிகடேக் எடுப்பார் – ரோபோ சங்கர்

ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளில் வேண்டுமென்றே விஜய் அதிகடேக் எடுப்பார் – ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெவின் ஜோசப் இயக்கத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா மற்றும் மஹானா இணைந்து நடித்துள்ள படம் ‘கும்பாரி’.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது…

“படத்தின் நாயகன் விஜய் விஷ்வாவுடன் எனக்கு பல வருட நட்பு உண்டு. இருவரும் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் டூரிங் டாக்கீஸ் என்கிற படத்தில் இணைந்து நடித்தோம்.

அப்போது எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓகே செய்து நடித்த விஜய் விஷ்வா, பாடல் காட்சிகளில் குறிப்பாக கதாநாயகியுடனான நீச்சல் குளம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அதிக டேக்குகள் வாங்கினார்.

இங்கே இந்த படத்திலும் அப்படி ஒரு பாடல் காட்சியை பார்த்தேன். ஆனால் நீங்கள் ஒரே நாளில் இந்த காட்சியை படமாக்கி உள்ளீர்கள் என்று கூறும்போது ஆச்சரியமாக இருந்தது” என்று கூறினார்.

நடிகர் சௌந்தர்ராஜா பேசும்போது, “நானும் விஜய் விஷ்வாவும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. ஆனால் பல சமூகப் போராட்டங்களில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

நடிகர் பிரஜன் பேசும்போது…

“நானும் விஜய் விஷ்வாவும் தற்போது தரைப்படை என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளோம். பெரிய படங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு தேவையில்லை. சிறிய படங்களுக்கு தான் ஆதரவு தர வேண்டும். வளர்ந்து வரும் நடிகர்கள் தொடர்ந்து படங்களில் நடிப்பதுடன் தங்களது கெட்டப்புகளை மாற்றுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் தங்கள் முகத்தை தொடர்ந்து மக்களிடம் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Robo Sankar open talk about Vijays close scenes with heroines

சமூகநீதி பேச்சு சினிமா மேடையில் கூடாது; இளம் நடிகர்கள் முகத்தை காட்டிட்டே இருக்கனும் – எஸ்.ஆர்.பிரபாகரன்

சமூகநீதி பேச்சு சினிமா மேடையில் கூடாது; இளம் நடிகர்கள் முகத்தை காட்டிட்டே இருக்கனும் – எஸ்.ஆர்.பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெவின் ஜோசப் இயக்கத்தில் விஜய் விஷ்வா மற்றும் மஹானா இணைந்து நடித்துள்ள படம் ‘கும்பாரி’.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது….

“கும்பாரி என்பதன் அர்த்தம் எனக்கு முதலில் புரியவில்லை. இங்கே வந்த பிறகுதான் கும்பாரி என்றால் நட்பு என அர்த்தம் இருப்பது தெரியவந்தது.

மற்ற எந்த உறவுகளும் பந்தத்தோடு தொடர்பு கொண்டது. நட்பு மட்டும்தான் எந்தவித பந்தமும் இல்லாமல் வரக்கூடியது’ என்று கூறினார்.

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும்போது…

“இந்த படத்தின் பாடல்களை பார்த்துவிட்டு பிறகு ட்ரெய்லரை பார்க்கும்போது ஒவ்வொரு காட்சியையும் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது. இந்த படத்தின் நாயகன் விஜய் விஷ்வா மட்டுமல்லாமல் இனிகோ பிரபாகர், சௌந்தரராஜன் என எல்லோருமே என்னுடன் அடிக்கடி விவாதத்தில் இருப்பவர்கள்தான்.

இவர்கள் போன்ற இளம் நடிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்களை தேடி வரும் வாய்ப்பை தயவுசெய்து மிஸ் பண்ணாதீர்கள். உங்கள் முகத்தை மக்களிடம் பதிவு செய்து கொண்டே இருந்தால்தான் மக்கள் உங்களை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.

நடிகர் விக்ரம் 16 வருட போராட்டத்திற்கு பிறகு தான் சேது என்கிற படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார். உங்களுக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு சேது திரைப்படம் அமையும். இதுபோன்று இசை வெளியீட்டு விழாவிற்கு வருபவர்கள் இசை தொடர்பாகவும் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டுமே பேசினால் அந்த கலைஞர்களை பற்றி வெளியே தெரியும். அதை தவிர்த்து சமூக நீதி போராளிகளாக பொதுவுடமை சிந்தனை கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்வதற்கு சிலபேர் இது போன்ற விழாக்களை பயன்படுத்துகிறார்கள்.

அதற்கு வேறு மேடைகள் இருக்கின்றன.. அங்கே உங்களுடைய சமூக நீதி கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

Don’t talk politics in cinema events says SR Prabakar

‘ஜீனி’ & ‘கிருத்திகா’ படங்களை முடித்துவிட்டு ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி

‘ஜீனி’ & ‘கிருத்திகா’ படங்களை முடித்துவிட்டு ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஓணம் பண்டிகையின் போது ‘தனி ஒருவன்’ படம் வெளியானது.

இந்த படத்திற்கு முன்பு ரீமேக் படங்களை மட்டுமே இயக்கிக் கொண்டிருந்த மோகன் ராஜா தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்கு பெரும் புத்துணர்ச்சியை கொடுத்தார்.

நயன்தாரா, அரவிந்தசாமி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி பெறவே விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும் என மோகன் ராஜாவும் ஜெயம் ரவியும் அறிவித்திருந்தனர்.

ஆனால் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ‘தனி ஒருவன் 2’ படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

அதற்குள் பல படங்களில் நடித்து விட்டார் ஜெயம் ரவி. மேலும் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய படங்களுக்காக நீண்ட தலைமுடியும் வளர்த்திருந்தார் ஜெயம் ரவி.

மேலும் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படம், அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படம், பின்னர் ‘சைரன்’ படம் என ரவி பிஸியானார்.

இப்போது ‘ஜீனி’ படத்தில் நடித்து வருகிறார் ரவி.

இதனை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிக்க செல்கிறார் ரவி. அதன் பின்னர்தான் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிப்பார் என்றும் இதன் ஷூட்டிங் 2024 பிப்ரவரி அல்லது மார்ச்சில் துவங்கும் என தகவல்கள் வந்துள்ளன.

இதனிடையில் மோகன்ராஜா தெலுங்கில் ‘லூசிபர்’ ரீமேக்கை இயக்கிய பின்னர் நாகார்ஜூனாவை புதிய படத்திற்காக இயக்கி வருகிறார்.

Thani Oruvan 2 and Jayam Ravi movies updates

நிகில் – சம்யுக்தா மேனன் இணைந்த ‘சுயம்பு’ பட சூட்டிங் தொடங்கியது

நிகில் – சம்யுக்தா மேனன் இணைந்த ‘சுயம்பு’ பட சூட்டிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் புகழ் பெற்ற கதாநாயகன் நிகில், தனது 20வது படத்திற்காக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘சுயம்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

’சுயம்பு’ என்ற தலைப்பும் செங்கோல் தாங்கிய படத்தின் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகிலை ஒரு மூர்க்கமான போர்வீரனாகக் காட்டிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அமோக வரவேற்பைப் பெற்றது.

படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும், படத்தின் ரெகுலர் ஷூட்டிங் இன்று ஆகஸ்ட் 18ல் தொடங்குகிறது. நிகில் ஒரு போர்வீரனாக குதிரையில் சவாரி செய்யும் போது ஒரு நாகத்தை நோக்கி அம்பு எய்வது போல் இந்த போஸ்டரில் உள்ளது.

சுயம்பு

அவரது தோற்றம் முதல் காஸ்ட்யூம் என இதுவரை நாம் பார்த்திராத புதிய நிகிலை ரசிகர்கள் பார்க்க இருக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் போலவே, இந்த புதிய போஸ்டரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதில் நிகில் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படம் நடிகர் நிகிலின் கேரியரில் அதிக பொருட்செலவிலும் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடனும் உருவாக இருக்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.

நடிகர்கள்: நிகில், சம்யுக்தா மேனன்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
இசை: ரவி பஸ்ரூர்,
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா,
வசனங்கள்: வாசுதேவ் முனேப்பகரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம் பிரபாகரன்,
இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த்,
மார்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ.

சுயம்பு

Karthikeya 2 hero Nikhils Swayambhu Launched Grandly

Cast: Nikhil, Samyuktha Menon

Technical Crew:
Writer, Director: Bharat Krishnamachari
Producers: Bhuvan and Sreekar
Banner: Pixel Studios
Presents: Tagore Madhu
Music: Ravi Basrur
DOP: Manoj Paramahamsa
Dialogues: Vasudev Muneppagari
Production Designer: M Prabhaharan
Co-Producers: Vijay Kamisetty, GT Anand
Marketing :First Show

சுயம்பு

More Articles
Follows