த்ரிஷ்யம் 2 பட கன்னட ரீமேக் இயக்குனர் பி.வாசு..; ஹிந்தி ரீமேக் இயக்குனர் யார் தெரியுமா.?

த்ரிஷ்யம் 2 பட கன்னட ரீமேக் இயக்குனர் பி.வாசு..; ஹிந்தி ரீமேக் இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Drishyam 2மோகன்லால் மீனா இணைந்து நடித்த திரிஷ்யம் -2 படத்தை மலையாளத்தில் இயக்கியிருந்தார் ஜீத்து ஜோசப்.

இப்படம் சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் நேரடியாக ரிலீசானது.

தற்போது தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசை வைத்து இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப்.

கன்னடத்தில் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே மீண்டும் இயக்குகிறார்.

இந்த நிலையில், திரிஷ்யம்-2 படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கப்போவது யார் என்பது தெரியாமல் இருந்தது.

ஏன் என்றால்… த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தை ஹிந்தியில் நிஷிகாந்த் காமத் இயக்கியிருந்தார்.

இவர் தற்போது உயிருடன் இல்லை.

இவர் தமிழில் மாதவன் நடித்த ‘எவனோ ஒருவன்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

தற்போது த்ரிஷ்யம்-2 படத்தின் ஹிந்தி படத்தை ஜீத்து ஜோசப்பையே இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

இதன் இந்தி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியுள்ளது.

த்ரிஷ்யம் முதல் பாகத்தை தெலுங்கில் ஸ்ரீபிரியாவும், கன்னடத்தில் பி.வாசுவும், ஹிந்தியில் நிஷிகாந்த் காமத் ஆகியோரும் ரீமேக் செய்தனர்.

தமிழில் த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் கமல் நடிப்பாரா என்பது தான் தெரியவில்லை.

Drishyum 2 hindi remake updates

JUST IN ஸ்டாலின் – முதல்வர்.. துரைமுருகன் – நீர்வளத்துறை.. அன்பில் மகேஷ் – பள்ளி கல்வித்துறை.; 34 அமைச்சர்கள் பட்டியல் இதோ..

JUST IN ஸ்டாலின் – முதல்வர்.. துரைமுருகன் – நீர்வளத்துறை.. அன்பில் மகேஷ் – பள்ளி கல்வித்துறை.; 34 அமைச்சர்கள் பட்டியல் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinதமிழகத்தில் 6வது முறையாக திமுக ஆட்சி அமைக்கிறது. முதன்முறையாக முக ஸ்டாலின் நாளை முதல்வர் பதவி ஏற்கிறார்.

நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பெயர்களின் விவரம் இதோ..

முக ஸ்டாலின் – முதலமைச்சர்

துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்.

இ. பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்

க. பொன்முடி – உயர்கல்வி துறை அமைச்சர்.

எ.வ. வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்.

தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்.

எஸ். ரகுபதி – சட்ட துறை அமைச்சர்

சு. முத்துசாமி – வீட்டு வசதி துறை அமைச்சர்.

கே.ஆர். பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்

தா.மோ. அன்பரசன் – ஊரக தொழிற் துறை அமைச்சர்.

மு. பெ. சாமிநாதன் – செய்தி துறை அமைச்சர்.

பி. கீதா ஜீவன் – சமூக நலன் – மகளிர் உரிமை துறை அமைச்சர்.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் – மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்.

ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் – போக்குவரத்து துறை அமைச்சர்.

கா. ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்

அர. சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.

வி. செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்

மா. சுப்ரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.

பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ். சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பி.கே. சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்.

பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை

சா.மு. நாசர் – பால்வளத்துறை அமைச்சர்.

சிவ. வீ. மெய்யாநாதன் – சுற்றுசூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்கள் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்

சி.வி. கணேசன் – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்.

மா.மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

என். கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்

ஆகிய 34 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Full list of Tamil Nadu Cabinet and Council of Ministers

JUST IN துணை தலைவர் மகேந்திரன் விலகல்..; கமல் கட்சி மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா.!

JUST IN துணை தலைவர் மகேந்திரன் விலகல்..; கமல் கட்சி மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maiam mahendranமக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்பட்டு இருந்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார் டாக்டர்.ஆர்.மகேந்திரன்.

மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட எவருமே இந்த தேர்தலில் ஜெயிக்கவில்லை.

தேர்தல் முடிவுகள் மே 2 அன்று வெளியான நிலையில் இன்று மே 6 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

இவருடன் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா.

கட்சியை சீரமைப்பதற்கான முழு அதிகாரத்தை கமலுக்கு வழங்கியுள்ளோம்

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு என துணைத்தலைவர் பொன்ராஜ் பேட்டி

கட்சியை சீரமைக்கும் விதமாக மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா என பொன்ராஜ் விளக்கம்.

Makkal Needhi Maiam vice president R Mahendran quits

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை முன்பே துல்லியமாக கணித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை முன்பே துல்லியமாக கணித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balaji Haasanஜோதிட உலகில் இந்த இளம் வயதிலேயே ஆச்சர்யத்தக்க வகையில் துல்லியமான கணிப்புகளை கூறி பிரமிக்க வைத்து வருகிறார் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன். அமெரிக்கா தேர்தலில் உலகமே டிரம்ப் ஜெயிப்பார் என்று சொன்னபோது, ஜோ பைடன் தான் வெற்றி பெறுவார் என்று சொன்னதாகட்டும், இலங்கை தேர்தலில் ராஜபக்சே தான் வெல்வார் என சொன்னதாகட்டும், அவ்வளவு ஏன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சி நேர்காணலிலேயே ஆணித்தரமாக அவர் கூறியது, என அவரது கணிப்புகள் தொடர்ந்து நிஜமாகி வருவது ஜோதிட உலகில் மாபெரும் ஆச்சர்யம்.

அந்தவகையில் இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து அவர் கணித்த கணிப்புகள் பல இடங்கள் அப்படியே முழுமையாக நடந்தேறி இருக்கின்றன.

கடந்த முறை மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தபோதும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சாதுர்யமாக ஆட்சியை தக்கவைத்து கொண்ட பின்னரும், இனி மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு எப்போதும் வாய்ப்பே இல்லை, என கடந்த சில வருடங்களாகவே பலரும் எதிர்மறை ஆருடம் சொல்லி வந்தனர்.

அந்த சமயத்தில், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தான், அடுத்த முதல்வராக வருவார் என்று, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே உறுதியாக கூறியிருந்தார் பாலாஜி ஹாசன்.

வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கணிப்பில் கூட,, தான் ஏற்கனவே கூறிய கணிப்பில் இருந்து அவர் மாறவில்லை. அவர் கணித்தது போலவே திமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று இதோ ஸ்டாலின் அவர்கள் முதல்வராகவும் பதவியேற்க போகிறார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஜாதகங்களை கணித்து, இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என பாலாஜி ஹாசன் கணித்தார். அதுமட்டுமல்ல, அவற்றை வாக்கு எண்ணிக்கைக்கு முன்கூட்டியே வீடியோவாக யூ ட்யூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர் கணித்து கூறியதில் 180 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். அந்தவகையில் அவரது கணிப்பில் 80 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில், மறைந்த வசந்த் அன் கோ வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தான் வெற்றி பெறுவார் என தனது கணிப்பில் உறுதி செய்தார். பாலாஜி ஹாசன்.

அதேபோல நட்சத்திர தொகுதியாக மாறிய கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தான் வெற்றி பெறுவார் என்றே அனைத்து கருத்து கணிப்புகளும் கூறின. ஆனால் வானதி சீனிவாசன் தான் வெற்றி பெறுவார் என பாலாஜி ஹாசன் கணித்தார்.. கடைசி நேரம் வரை இவரா, அவரா என நடந்த இழுபறிக்கு பிறகு வானதி சீனிவாசனே வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிரான அலை உருவாகி விட்டதாகவும் அதனால் இந்தமுறை பிஜேபி தான் ஆட்சியை பிடிக்கும் என பலரும் கருத்துக்கணிப்பு சொல்லி வந்த நிலையில் தனது துல்லிய ஜோதிட கணிப்பு மூலமாக மம்தா வெற்றி பெறுவார் என உறுதியாக கூறினார் பாலாஜி ஹாசன்.. இதோ அதுவும் பலித்து விட்டது.

மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு தோல்வி என கணித்த அதேசமயம் அஸ்ஸாமில் பிஜேபி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பதையும் கணித்து கூறி இருந்தார். இந்த தேர்தலில் பாஜக சற்றே ஆசுவாச பெருமூச்சு விட காரணமாக அமைந்தது இந்த அஸ்ஸாம் வெற்றி மட்டும் தான்.

இதேபோலத்தான் கேரளாவில் சபரிமலை விவகாரம், தங்க கடத்தல் விவகாரம் என கம்யூனிஸ்ட் அரசை பிரச்சனைகள் சூழ்ந்திருந்ததை காரணம் காட்டி, இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் தோல்வியுறும், காங்கிரஸ் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகள் கூறின.. ஆனால் பாலாஜி ஹாசனோ மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என கணித்தார். கணித்தது பலித்திருக்கிறது.

புதுச்சேரியை பொறுத்தவரை ரங்கசாமி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறி வந்தன. அவர்கள் கருத்துக்கு ஏற்ப, ரங்கசாமி தான் முதல்வர் ஆவார் என்று கூறிய பாலாஜி ஹாசன், ஆனால் அவருக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி பலத்தில் தான் ஆட்சி அமைப்பார் என்றும் கணித்து கூறி இருந்தார். கடைசியில் அவர் சொன்னதுதான் நடந்துள்ளது.

அந்தவகையில் பாலாஜி ஹாசனின் துல்லியமான கணிப்புகள் மீண்டும் அவரை பற்றி மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பாக பேச வைத்துள்ளன.

Astrologer Balaji Haasan prediction on Election 2021

ஓடிடி-யை குறி வைக்கும் தனுஷ் விஜய்சேதுபதி நயன்தாரா த்ரிஷா சிவா

ஓடிடி-யை குறி வைக்கும் தனுஷ் விஜய்சேதுபதி நயன்தாரா த்ரிஷா சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trisha nayantharaகொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே ஓடிடி-யில் படங்களை ரிலீஸ் செய்ய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தனுஷின் ஜெகமே தந்திரம் படம் அடுத்த ஜுன் மாதம் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளது..

தற்போது விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்துள்ள 19 (1) (ஏ) என்ற படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட உள்ளனர்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

வி.எஸ்.இந்து இயக்கியுள்ள இந்த படத்தில் இப்படத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே விஜய்சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க.பெ.ரணசிங்கம் என்ற படம் ஓ.டி.டி.யில் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த படமான துக்ளக் தர்பார் படத்தையும் ஓடிடி.யில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ படம் ஓடிடி.யில் ரிலீசாவது உறுதியாகி உள்ளது,

நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், த்ரிஷாவின் ராங்கி ஆகிய படங்களிம் ஓ.டி.டி.யில் வெளியாகலாம்.

Top celebrities films to release in OTT

கண்ணீர் நனைக்கிறது.. காலத்தை நினைக்கிறது..; தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணத்திற்கு டிஆர் இரங்கல்

கண்ணீர் நனைக்கிறது.. காலத்தை நினைக்கிறது..; தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணத்திற்கு டிஆர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Ibrahimதயாரிப்பாளர் திரு E.M.இப்ராஹிம் அவர்களின் மறைவுக்கு டிஆர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்..

1980ம் ஆண்டு வெளியான என் முதல் படமான ‘ஒரு தலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் E.M.இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது.

மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன்,
காரணம் அவர் அரங்கக்குடியில் பிறந்தவர்
என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர் வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர்
என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர்

இன்று ஏன் மறைந்தார்..
இந்த உலகை விட்டு பிரிந்தார்..

கண்ணீர் கண்களை நனைக்கிறது..
என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது..

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.
கௌரவ ஆலோசகர்,
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.
Oru Thalai Ragam film producer EM Ibrahim passed away

More Articles
Follows