மோகன்லால் நடிக்கும் ’த்ரிஷ்யம் 2’.; தமிழுக்கு கமல் ஓகே சொல்வாரா..?

mohanlal kamal haasanஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளியான படம் ’த்ரிஷ்யம்’.

இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் கமலஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ் நடிப்பில் ஜீத்து ஜோசப் ’பாபநாசம்’ என்ற பெயரில் இயக்கியிருந்தார்.

தமிழிலும் வசூல் வேட்டையாடி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ’த்ரிஷ்யம்’ பட இரண்டாம் பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் முடிவு செய்திருக்கிறாராம்.

இதில் மீண்டும் மோகன்லால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மோகன்லால் நடிப்பில் ’ராம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இதே இயக்குனர் ஜித்து ஜோசப்.

கொரோனா ஊரடங்கால் அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சினைக்கு பின் அந்த படத்தை முடித்துவிட்டு ’த்ரிஷ்யம்’ 2ஆம் பாகம் படத்தை இயக்குவார் ஜீத்து ஜோசப் என சொல்லப்படுகிறது.

தமிழில் பாபநாசம் 2 உருவாகுமா? அதற்கு கமல் ஓகே சொல்வாரா? என்பதுதான் தெரியவில்லை.

Overall Rating : Not available

Related News

Latest Post