ஜெயிலுக்கே விடுதலை கொடுத்த ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா

ஜெயிலுக்கே விடுதலை கொடுத்த ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு குற்றவாளி ஜெயிலில் இருந்து விடுதலை (ரிலீஸ்) ஆவதை பார்த்திருக்கோம். ஆனால் ஒரு ஜெயிலே ரிலீஸ் ஆகவுள்ளதை அறிந்திருக்கிறீர்களா.?

ஆம் நீண்ட மாதங்களாக பல்வேறு காரணங்களாக கிடப்பில் போடப்பட்ட ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

அதன் விவரம் வருமாறு..

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’.

இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார்.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் தற்போது கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஜெயில்’.

இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். தேன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார்,’பசங்க’ பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன்ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை அமைக்கும் பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர்.

நடனக் காட்சிகளை சாண்டி,ராதிகா அமைத்துள்ளனர். ஜிவிபிரகாஷ் குமாரின் இசையில் கபிலன், சிநேகன் , கருணாகரன், தெருக்குரல் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் பாடிய ‘காத்தோடு காத்தானேன்…’ பாடல் யூடியூப்பில் வெளியாகி இரண்டுகோடி பார்வையாளர்களை ஈர்த்து பெரும் வெற்றியடைந்துள்ளது. 

இந்த நிலையில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா.

விரைவில் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gv Prakashs Jail movie will be released by Studio Green

கார்த்திக் ராஜா இசையில் நான்கு நாயகிகளுடன் இணையும் நட்டி

கார்த்திக் ராஜா இசையில் நான்கு நாயகிகளுடன் இணையும் நட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடிக்கும் ‘வெப்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார்.

‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கிறார்.

4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

படத்தின் முக்கிய வேடங்களில் பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.

கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர்: அருண்
சண்டைப்பயிற்சி: ஃபயர் கார்த்திக்
ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா

Nattys WEB movie first look released

BREAKING நாளை (OCT 25) எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள்..; ரஜினி திடீர் அறிக்கை

BREAKING நாளை (OCT 25) எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள்..; ரஜினி திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.

தற்போது ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நாளை அக்டோபர் 25ஆம் தேதி தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. எனவே தற்போது சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. ஒன்று தாதா சாகேப் பால்கே விருது பெற போகிறேன்.

அடுத்து என் 2வது மகள் சௌந்தர்யா HOOTE என்ற வாய்ஸ் சோஷியல் மீடியாவை தொடங்கவுள்ளார். அதில் என் குரலை பதிவு செய்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், புதிதாக சமூக வலைதளம் ஒன்றை வருகிற 25ஆம் தேதி தொடங்க உள்ளார்.

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘HOOTE’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Rajini daughter Soundarya launching Hoote VOICE based Social media

கூடுதல் தகவல்.. : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வன்முறையை தூண்டுவதாக அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டன.

இதனால், டொனால்ட் ட்ரம்ப், தானே சொந்தமாக சமூக வலைதளம் ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் பிரத்யேக சமூக வலைதளத்தை டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக தொடங்கியுள்ளார். இந்த வலைதளம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது.

தற்போது புதிய சமூக வலைத்தளம் (குரல்) ஒன்றை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தொடங்கவுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

JUST IN மகிழ்ச்சி… வருத்தம்..; விருது பெற டெல்லி செல்லும் முன் ரஜினிகாந்த் பேட்டி

JUST IN மகிழ்ச்சி… வருத்தம்..; விருது பெற டெல்லி செல்லும் முன் ரஜினிகாந்த் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.

தற்போது ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

ரஜினியை தலைவா என குறிப்பிட்டு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் நண்பன், அண்ணன், குரு முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் இந்திய சினிமாவின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது கருதப்படுகிறது.

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களும் பெற்றுள்ளனர்.

இவர்களின் வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நாளை அக்டோபர் 25ஆம் தேதி தாதா சாகேப் பால்கே விருது பெற ரஜினிகாந்த் டெல்லி செல்கிறார்.

இதனையொட்டி இன்று அக்டோபர் 24 சற்றுமுன் தன் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

“தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

இந்த விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

இந்த நேரத்தில் கே பாலச்சந்தர் சார் இல்லாதது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

இந்த விருது வாங்கிய பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கின்றேன்.

Actor Rajinikanth met Media at Poes Garden

நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்து.. பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம இருக்கோம்..; சூடு கிளப்பும் சூர்யா

நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்து.. பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம இருக்கோம்..; சூடு கிளப்பும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’.

ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இது 1990களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கதையாக கொண்டுள்ளது.

அதாவது.. அப்பாவி பழங்குடி இன மக்களின் வாழ்க்கையைப் பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது.

பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார்.

இதன் டீசர் கடந்தவாரம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அக்டோபர் 22 படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் மீது போலீஸ் காட்டும் அராஜகம்.. அதிகாரம்… அடக்குமுறை என பரபரப்பாக உள்ளது. அதே சமயம் சூர்யா பேசும் சூடான வசனங்கள் அனல் பறக்க வைக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதில்… ‛‛பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கணும், அதை தார்மீக நீதிமன்றம் உறுதி செய்யணும்.

தப்பு செய்பவர்களுக்கு ஜாதி, பணம் என நிறைய இருக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம தான இருக்கோம்.

நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மவுனம் ஆபத்தானது” உள்ளிட்ட வசனங்கள் கவரும் வகையில் உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர்,2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya voluntarily acted in ‘Jai Bhim’, trailer looks powerful!

ரஜினி-மம்மூட்டி- சிவகார்த்திகேயனை பாராட்டி நயன்தாரா-த்ரிஷா கலாய்த்த கே ராஜன்; ‘முதல் மனிதன்’ இசை விழாவில் பரபரப்பு

ரஜினி-மம்மூட்டி- சிவகார்த்திகேயனை பாராட்டி நயன்தாரா-த்ரிஷா கலாய்த்த கே ராஜன்; ‘முதல் மனிதன்’ இசை விழாவில் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் உசேன் தயாரிப்பில், இயக்குநர் ராஜராஜ துரை இயக்கியுள்ள திரைப்படம் முதல் மனிதன்.

மதத்தின் அரசியல் மனிதத்தை எப்படி அழிக்கும் என்பதை பேசும் படமாக சமூகத்திற்கு அவசியமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், நேற்று சென்னையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் ராஜராஜதுரை பேசியதாவது…

எத்தனையோ தோல்விகளை நான் என் வாழ்வில் சந்தித்துள்ளேன். என் இன மக்களையும், மாற்று சாதியை சேர்ந்தவர்களையும் வரவேற்கிறேன். அதிர்ச்சியடையாதீர்கள் நான் என் இனம் என சொன்னது மனித இனத்தை, என் சாதி என சொன்னது ஆண் சாதியை, மாற்று சாதி என சொன்னது பெண் சாதியை தான்.

உலகில் ஆண் சாதி, பெண் சாதி தவிர்த்து வேறு எந்த சாதியும் இல்லை என்பதை நம்புவன் நான். அதைத்தான் இந்தப்படத்திலும் சொல்லியுள்ளேன் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி…

இந்திய காங்கிரஸ், மாநில துணை தலைவர் இநாயதுல்லா அவர்கள் பேசியதாவது…

சாதியை பற்றி சொல்லும் போது ஆண் சாதி, பெண் சாதி என்றார்கள், ஔவையார், சாதி இரண்டான் கொல் வேறில்லை என்று சொல்லியுள்ளார்கள், அவரின் மொழி தழுவி இப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்.

முதல் மனிதன் இந்த மண்ணில் பிறக்கவே இல்லை என்பது தான் உண்மை சொர்க்கத்தில் பிறந்த மனிதன் செய்த தவறுக்காக, படைக்கப்பட்டதே இந்த பூமி. மனிதன் வந்த பல ஆண்டுகளுக்கு பிறகு தான் சாதி இம்மண்ணுக்கு வந்தது. அதனை இப்படம் அருமையாக எடுத்துகாட்டுகிறது. இது ஒரு அற்புதமான படம். மனிதனுக்கு மதம் பிடித்து போனதை, இப்படம் படம் பிடித்து காட்டுகிறது. பூமியின் முதல் மனிதன் ஜாதியின் பெயரால் செய்த தவறை மாற்ற வந்திருக்கிறான்.

இந்த முதல் மனிதன். நாம் ஒரு தாய் தந்தை வழி வந்தவர்கள். மக்களின் நல்லிணத்திற்காக இப்படம் எடுத்துள்ள இப்படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறேன் நன்றி.

இயக்குநர் R.V. உதயகுமார் பேசியதாவது…

இந்தப்படத்தில் ஒரு வித்தியாசமான பாடல் இயக்குநரே எழுதியுள்ளார் அருமையான பாடல். ஒரு அற்புதமான படத்தை தந்துள்ள இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள். இப்போது நிஜத்தில் சாதியை யாரும் பேசுவதில்லை சினிமாவில் தான் சாதியை பற்றி பேசி, சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுக்கிறார்கள். அதற்கு தேசியவிருதும் கொடுத்துவிடுகிறார்கள்.

இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏற்றதாழ்வு என்பது பணம், காசில் வருவதில்லை. புகழ்பெற்றவன் மற்றவனை இகழ்வாக நடத்துவதிலேயே அது ஆரம்பித்து விடுகிறது. அதை முதலில் மாற்றுங்கள். அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது.

நாம் தான் ஜாதியை கண்டுபிடித்து நாமே ஏற்றதாழ்வை பிரிவினையை உருவாக்கி, ஜாதி இல்லை என்று இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

இங்கு வந்துள்ள அரசியல் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள், இனிமேல் பள்ளியில் சேரும்போது, சாதியை சான்றிதழில் போடக்கூடாது என சட்டம் போடுங்கள், என்ன மதம் என்று மட்டும் போடுங்கள் பிரச்சனை தீர்ந்து விடும், இப்படத்திற்கு அனைத்து ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்யுங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

இந்த மேடையை பார்க்க, மிகவும் சந்தோஷமாக உள்ளது. அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். முதல் மனிதன் படத்திற்கான வெற்றி இங்கேயே ஆரம்பித்து விட்டது. ஜாதி கலவரத்தை தூண்டுவதை இப்போது சினிமாவிலும் ஆரம்பித்து விட்டார்கள். அது நல்ல விசயம் இல்லை. ஜாதி கலவரத்தை தூண்டும் படங்கள் வரும் சமயத்தில் சாதியே இல்லை என இப்படம் வருவது மகிழ்ச்சி.

சாதியை வைத்து இப்போது எல்லோரும் பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ஜாதியை உயர்த்தி இன்னொரு ஜாதியை தாழ்த்தி எடுக்கும் சினிமாவை தடை செய்ய வேண்டும். இந்த மாதிரி படத்தை தயாரிப்பாளர்கள் தயாரிக்க கூடாது. மக்கள் ஆதரவு தராதீர்கள்.

இந்துவாக பிறந்ததால் நான் இந்துவாக இருக்கிறேன். என் அப்பா காட்டிய தெய்வத்தை நான் வழிபடுகிறேன் இதில் என் தவறு எங்கு இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த முதல் மனிதன் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.

தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது…

துணிச்சலோடு இந்தபடத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் உசேன், அற்புதமான கதையை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் ராஜராஜதுரை, அருமையான பாடல்கள் தந்த தாஜ்நூர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

இந்தப்படத்தில் கேமரா மிக அழகாக இருந்தது. இது ஒரு நல்ல படம் அல்ல மக்களுக்கு நல்ல பாடம். இந்தப்படம் பெரும் வெற்றி பெற வேண்டும். எனக்கு தெரிந்து எங்குமே ஜாதி இல்லை, தாழ்த்தப்பட்டவர்களை வணங்கும் நிலை இன்று வந்துவிட்டது. இன்று அனைவரையுமே நாம் வணங்குகிறோம். அந்த நிலை தான் இப்போது இருக்கிறது.

இப்போது படம் எடுத்தால் 12 கேரவன், நயன்தாரா ஷூட்டிங் வந்தால் 7 அஸிஸ்டெண்ட், அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம். ஆண்ட்ரியா தமிழ் நடிகை ஆனால் பாம்பேவில் இருந்து மேக்கப் மேன் வேணும் என்கிறார்.

இப்படி இருந்தால் தயாரிப்பாளர் எப்படி பிழைப்பான். நடிகர்கள் இன்று கேரவனில் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி வந்தால் ஸ்பாட்டிலேயே இருக்கிறார். மம்முட்டி சொந்த கேரவன் வைத்திருக்கிறார் அவர்கள் தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதில்லை, நம் ஹீரோக்களையெல்லாம் என்ன சொல்வது.

சிலர் அக்கிரமம் செய்வதை நான் எடுத்து சொல்கிறேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபம் பெற்று தர வேண்டும், சினிமா நன்றாக இருக்கிறது, மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்று ‘டாக்டர்’ திரைப்படம் தான். அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் 40 கோடி படம் 60 கோடி பட்ஜெட் ஆகி, சிவகார்த்திகேயன் அதற்கு பொறுப்பெடுத்துக் கொண்டார், அதற்கு யார் காராணம், திரிஷா நடித்த படத்திற்கு விழாவிற்கு வர 15 லட்சம் கேட்கிறார். வெற்றிபெற்ற பிறகு ஆடியோ பங்சனுக்கு வர மாட்டேன் என சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். அது யாராக இருந்தாலும் பராவயில்லை. தயாரிப்பாளருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

நாயகி சாண்ட் ரா ரோஷ் பேசியதாவது…

இது என் முதல் படம், திரையில் ரிலீஸாவது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதை அவ்வளவு நன்றாக இருந்தது. இயக்குநர் கேமராமேன் மிக ஆதரவாக இருந்தார்கள். எங்கள் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

திமுக செய்தி தொடர்பாளர் காண்ஸ்டனடைன் ரவீந்திரன் பேசியதாவது…

திரையுலகம் இல்லாமல் திமுக இல்லை, திமுக இல்லாமல் திரையுலகம் இல்லை. திரையுலகை தமிழ் பேச வைத்த பெருமை கலைஞருக்கு உண்டு. இன்றைக்கு ஒருவன் தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சொல்லிக்கொண்டு திரியும் போது, ஆதி மனிதன் மதமில்லாமல் திரிந்தானே என சொல்ல வருவகிறதே இந்தப்படம் அதுவே சந்தோஷம்.

முஸ்லீமும் கிறிஷ்துவமும் வேறுவேறல்ல இரண்டும் ஒரு மதமே. நீங்கள் இணையத்தில் தேடினால் உங்களுக்கே அது தெரியும், நாம் எல்லோரும் ஒன்றே என சொல்ல வந்திருக்கும் இந்தப்படம் வெற்றி பெற வேண்டும். சமூகத்திற்கான கருத்தை இந்தப்படம் சொல்கிறது. ஒவ்வொரு படத்திலும் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது, எனவே எல்லாப்படமும் வெற்றி பெற வேண்டும். நன்றி

நடிகர் பாசித் பேசியதாவது…

முதல் மனிதன் எனக்கும் முதம் முறையாக நடிக்கும் வாய்ப்பை தந்தது. நடிகர் மாரிமுத்து சாருடன் முதலில் நடிகும்போது, நிறைய டேக் வாங்கி நான் சரியாக நடிக்க வில்லை என திட்டி விட்டார். ஆனால் அதை எனக்கான பாடமாக எடுத்துகொண்டு, மற்ற காட்சிகளை டேக் வாங்காமல் நடித்தேன். எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் போண்டா மணி பேசியதாவது…

ஒரு நடிகனின் வாழ்க்கை இயக்குநரின் கையில் தான் இருக்கிறது. 25 வருட உழைப்புக்கு, இந்தப்படத்தில் பலன் கிடைத்துள்ளது. நான் நினைத்து கூட பார்க்கவில்லை இன்று மேடையில் என்னை வாழ்த்துகிறார்கள், இயக்குநர் ராஜராஜதுரை எனக்கு வாழ்க்கை தந்துள்ளார்.

நடிகனை யாரும் குறை சொல்லக்கூடாது நடிகன் கேட்டால் நீங்கள் ஏன் கேரவன் தருகிறீர்கள், நீங்கள் இதைத்தான் தருவேன் என சொல்லி படமெடுங்கள். சினிமா பிழைத்திருக்கும். இந்த வெற்றி என் உழைப்புக்கு கிடைத்துள்ளது. ஒரு நடிகனுக்கு அடக்கம் இருந்தால் அவன் சினிமாவில் பிழைத்திருப்பான். இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசியதாவது…

இந்தப்படம் எனக்கு ஒரு வித்தியாசமான படம் தயாரிப்பாளரிடன் ஏன் இந்தப்படம் எடுக்கிறீர்கள் எனக்கேட்ட போது, சினிமா துறை மூலம் ஒரு கருத்தை சொல்லும் போது பெரியளவில் சென்று சேர்கிறது, அதனால் எடுக்கிறேன் என்றார். மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.

ஆண்டி இண்டியன் படத்திற்கும் இந்தப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால் கதையில் இல்லை. இப்படத்தில் நாயகி மிக நன்றாக நடித்திருக்கிறார். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்.

திரு விஜயமுரளி பேசியதாவது…

படத்தோட நாயகனுக்கு டூயட் இல்லை என்பதால் தான் அமைதியாக அடக்கமாக இருக்கிறார். ஆனால் நன்றாக நடித்துள்ளார். முதல் படம் எடுக்க வருகிறவர்களின் புகலிடமாக தாஜ்நூர் தான் இருக்கிறார். யாராயிருந்தாலும் அருமையான இசையை தருகிறார்.

தயாரிப்பாளர் உசேன், ஆடியோ பங்சனில் சிரித்து கொண்டிருக்கும் ஒரே தயாரிப்பாளர் இவர் தான். படம் வெற்றி பெற்று அவருக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி…

Producer K Rajan controversy speech at Muthal Manithan audio launch

More Articles
Follows