தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அநீதி’.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் வெளியிடுகிறார். ஜூலை 21ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த விழாவில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது…
“இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.
திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை. அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம்.
மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. ‘அநீதி’ படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்.” என்றார்.
‘அநீதி’ திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது…
“இதுவரை விநியோகஸ்தராக இருந்த நான் ஒரு படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது இதுவே முதல் முறை. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ‘அநீதி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.”
Arjundas is kollywoods Shahrukhkhan says Vanitha Jayakumar