‘ஜெயில்’ திரைப்பட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

‘ஜெயில்’ திரைப்பட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

அந்த மனுவில், படத்தை தயாரித்துள்ள
கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை,
ஒடிடி உரிமை,சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயில் படம் வரும் டிசம்பர் 9 ம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது

அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது சட்டவிரோதமாக படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது,ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் படத்தின் விநியோக உரிமையை வழங்கிவிட்டு தற்போது வேறொரு நபர் மூலம் படத்தை வெளியிட முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்

தயாரிப்பு நிறுவனம் தர்ப்பில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு காப்புரிமை வழங்கவில்லை எனவும்,
படத்தை வெளியிட தகுதியான விநியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

தொடர்ந்து,ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து வரும் 6 ம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் க்கு உத்தரவிட்ட நீதிபதி,
திரையரங்க விநியோக உரிமை குறித்து வரும் திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Court verdict on Jail film release

‘வலிமை’ வில்லன் கார்த்திகேயாவுக்கு அஜித் கொடுக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட்

‘வலிமை’ வில்லன் கார்த்திகேயாவுக்கு அஜித் கொடுக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருபவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா.

இவர் தான் காதலித்து வந்த லோஹிதாவை அண்மையில் திருமணம் செய்தார்.

இந்த திருமண விழாவில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என ரசிர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அஜித் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் விரைவில் புதுமண தம்பதிகளை தன் வீட்டிற்கு அழைத்து கல்யாண விருந்து அளிக்கவிருக்கிறாராம் அஜித்.

Ajith’s surprise treat to Valimai villain

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் துல்கர் சல்மான் பட நாயகி

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் துல்கர் சல்மான் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது டான் மற்றும் அயலான் படங்கள் ஆகிய படங்கள் திரைக்கு வரத்தயாராகி வருகிறது-

இந்த படங்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ளார் என்ற செய்திகளை பார்த்தோம்.

நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜதிரத்னலு என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் இவர்.

இந்த நிலையில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ரித்து வர்மாவிடம் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாம்.

துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ரிதுவர்மா.

மேலும் தீனி என்ற படத்தில் அசோக் செலவனுடன் நடித்தார் ரிது வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Dulquer Salman film actress joins with Sivakarthikeyan

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ‘விக்ரம் 61’

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ‘விக்ரம் 61’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் தனது அடுத்தப் படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம்.

விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Chiyaan and Pa Ranjith joins for Vikram 61

ஞானவேல்ராஜா & ஜிவி பிரகாஷ் ஆகிய டபுள் ‘ரிபெல்’ கூட்டணி..; ரஞ்சித் ஆரி தனஞ்செயன் கௌரவ் வாழ்த்து

ஞானவேல்ராஜா & ஜிவி பிரகாஷ் ஆகிய டபுள் ‘ரிபெல்’ கூட்டணி..; ரஞ்சித் ஆரி தனஞ்செயன் கௌரவ் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STUDIO GREEN சார்பில் K E ஞானவேல் ராஜா மற்றும் Thirukumaran Entertainment சார்பில் C V குமார் இணைந்து வழங்க, GV பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”.

பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் அம்மா சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்து கொள்ள, இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.

பூஜையை தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

*இயக்குநர் ரஞ்சித் பேசியதாவது…*

ஞானவேல் சார், CV குமார் சார், புதுசா ஒரு படம் ஆரம்பிச்சிருக்காங்க. இந்தக்கூட்டணி எனக்கு ரொம்ப பிடிச்ச கூட்டணி. ஜீவி சார் நடிக்கிறார்.

அவருக்கு என் படங்கள் பிடிக்கும், என் படங்கள் பார்த்து பேசுவார். அவருடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில், விரைவில் ஒரு படம் செய்ய பேசிட்டு இருக்கோம்.

இந்தப்படம் பற்றி சொன்னார்கள். இந்தப்படம் முக்கியமான ஊரின் வரலாறை பேசுவதாக சொன்னார்கள்.

மூணாறு ஊரின் அரசியல் எனக்கு தெரியும். அந்த அரசியலை இந்தப்படம் பேசுவது மகிழ்ச்சி. சிறப்பான படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

*இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது…*

பழைய கூட்டணி மீண்டும் இங்கு இணைந்திருக்கிறது. எல்லோரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று பேச்சிலர் பார்த்தேன், நன்றாக இருந்தது, அடுத்து ஜெயில் படமும் நன்றாக வந்திருக்கிறது. கூழாங்கல் பல விருதுகளை வென்றிருக்கிறது.

தமிழ் சினிமா நல்ல பாதையில் பயணிக்கிறது. இன்னும் நிறைய நல்ல படங்கள் வரவுள்ளது. இந்தப்படமும் அந்த வரிசையில் இணையும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் நன்றி.

*தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது…*
தமிழ் சினிமாவில் இது ஒரு வெற்றிக்கூட்டணி. K E ஞானவேல் ராஜா மற்றும் C V குமார் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை செய்தார்கள். அவர்கள் கூட்டணியில் இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும்.

ஜீவி தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகராக இருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஆர்யாவை பெரிய ஹிரோவாக்கி விட்டார். அதே போல் ஜீவியையும் அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும். இந்தப்படத்தில் மிகச்சிறந்த கூட்டணி அமைந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.

*நடிகர் ஆரி பேசியதாவது…*

‘ரிபெல்’ என்கிற தலைப்பு எல்லோருக்கும் பொருந்தாது. சமுகத்தின் மீது அக்கறை கொண்ட ஜீவி சாருக்கு பொருந்தக்கூடிய தலைப்பு இது. மக்களுக்கான அரசியலை பேசவுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தப்படம் சமூகத்திற்கான அரசியலை பேசும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.

*இயக்குநர் நிகேஷ் பேசியதாவது..*

இது ஒரு அரசியல் படம், ரஞ்சித் சார் திரைப்படங்கள் தான் எனக்கு சினிமா கற்று தந்தது. அவர் இங்கு வந்து வாழ்த்தியது மகிழ்ச்சி. இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. K E ஞானவேல் ராஜா மற்றும் C V குமார் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக்கொண்ட ஜீவி சாருக்கு நன்றி. சமூகத்திற்கு தேவையான படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி.

*இயக்குநர் கௌரவ் பேசியதாவது…*

ரிபெல் தலைப்பே சூப்பரா இருந்தது. CV குமார் திரைக்கதையில் மிகவும் ஞானம் கொண்டவர். அவருக்கு துணையாக K E ஞானவேல் ராஜா இருக்கிறார்.

ஆரம்பமே மிகப்பெரும் விழாவோடு ஆரம்பிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படம் சிறந்த படமாக வர அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

*தயாரிப்பாளர் C V குமார் பேசியதாவது…*

நான் 24 படம் பண்ணிட்டேன். இவ்வளவு பெரிய பூஜை இந்தப்படத்திற்கு தான். இந்தப்படத்தை ஒப்புக்கொள்ளவே, ஒரு தைரியம் வேணும். அது K E ஞானவேல் ராஜா சாரிடம் இருக்கிறது.

இது ஒரு அரசியல் கதை, இது எப்படி அமையப்போகிறது என பயம் இருந்தது. ஆனால் இந்தப்படத்தில் நல்ல கூட்டணி அமைந்திருக்கிறது. கதையும் நன்றாக உள்ளது. ஒரு சிறந்த அரசியல் படமாக இப்படம் இருக்கும், நன்றி.

*தயாரிப்பாளர் K E ஞானவேல் ராஜா பேசியதாவது….*

பேச்சிலர் படம் பார்த்தேன், மிகவும் பிடித்தது. படம் ரொம்ப பிரமாதமாக இருந்தது. ஜீவிக்கு வாழ்த்துகள். ரிபெல் கதையை நிகேஷ் சொல்லும்போதே ரொம்ப பிடித்திருந்தது. ஒரு காலேஜ் கதை, அரசியல், தமிழுணர்வு எல்லாம் கலந்திருந்தது.

ஜீவி சரியாக இருப்பார் என அவரிடம் சொன்னேன் அவர் கதை கேட்டு, நான் ரசித்த இடங்களை அப்படியே அவரும் ரசித்ததாக சொன்னார். இப்போது ரிபெல் படத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

இன்றைக்கு மாலை எங்கள் நிறுவனத்தின் சார்பில் வேறொரு அறிவிப்பும் வருகிறது. இரண்டு படங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை. ரஞ்சித் பிரதர் உடன் ஆரம்பத்தில் படம் செய்துள்ளேன். இன்று அவர் பெரிய உயரத்தில் இருக்கிறார். நலன் சாருடன் அடுத்த அறிவிப்பு விரைவில் வரும். இருவரும் இங்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. இந்தப்படம் ஒரு சிறப்பான அரசியல் கதையை சொல்லும். ஆதரவு தாருங்கள் நன்றி.

*நடிகர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…*

இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. K E ஞானவேல் ராஜா சார் தான் என்னை ஒரு நடிகனாக என்னை அறிமுகப்படுத்தி வெற்றி பெற வைத்தார். ஒரு நடிகனாக எனக்கு ஒரு பிஸினஸை ஏற்படுத்தி நிலை நிறுத்தியவர் அவர் தான். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்வது மகிழ்ச்சி.

நாங்கள் இணைந்து செய்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இந்தப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நிகேஷ் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு கதை இதில் இருக்கிறது. அதை நாங்கள் சரியாக சொல்வோம் என்று நம்புகிறேன் நன்றி.

*தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…*

K E ஞானவேல் ராஜா சாரே ஒரு ரிபெல் தான். அவருடன் ஜீவி எனும் இன்னொரு ரிபெல் இணைந்து இந்த ரிபெல் படத்தை எடுக்கிறார்கள். இயக்குநர் நிகேஷ் அருமையான திரைக்கதையை எழுதியுள்ளார்.

இந்தப்படம் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். உங்கள் அரசியலை இங்கு வந்திருக்கும் ரஞ்சித் சாரிடம் கற்றுக்கொள்ளுங்கள். அரசியல் கருத்துக்களை தெளிவாக பேசக்கூடியவர் அவர். பேச்சிலர் படம் பார்த்தேன் ஜீவியின் நடிப்பு அசத்தலாக இருந்தது.

ஜெயில் படத்தில் இன்னும் வேறொரு கோணத்தில் நடித்திருக்கிறார். ஒரு படத்திற்கு பெரும் அர்ப்பணிப்பான உழைப்பை தந்து, தயாரிப்பாளருக்கு பிடித்த நடிகராக வளர்ந்து வருகிறார். இந்தப்படம் ஒரு அற்புதமான கூட்டணியுடன் உருவாகிறது.

Celebs wishes to GV Prakash in Rebel

சிங்கப்பூரில் மட்டும் ‘கூழாங்கல்’ ரிலீஸ்.; நயன்தாரா விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு

சிங்கப்பூரில் மட்டும் ‘கூழாங்கல்’ ரிலீஸ்.; நயன்தாரா விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சில விருதுகளை வென்ற படம் ‘கூழாங்கல்’.

செல்லப்பாண்டி, கருத்தடையான் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கூழாங்கல்’.

வினோத்ராஜ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

94வது ஆஸ்கர் விருதுகளுக்காக சிறந்த சர்வதேச திரைப்படங்களுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் இப்படம் கலந்து கொண்டது.

ரவுடி பிக்சர்ஸ் சார்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலைநில் இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு முன்பாக சிங்கப்பூரில் வெளியிடுகிறார்கள்.

கூழாங்கல் திரைப்படம் சிங்கப்பூரில் வரும் டிசம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

‘கூழாங்கல்’ திரைப்படம் இன்னமும் இந்தியாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh Shivan announced theatrical release of Koozhangal

More Articles
Follows