தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
S.U. அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்தா’.
செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.
நிகழ்வில் முதலாவதாக ஒலி வடிவமைப்பாளர் விவேக் தணிகாசலம் பேசியதாவது…
“சித்தார்த் சாருக்கும் அருண் சாருக்கும் நன்றி. அவர்களால் தான் நான் இந்தப் படத்திற்குள் வந்தேன். என்னை நம்பி முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்தார்கள். அதனால்தான் இவ்வளவு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்த வாய்ப்புக்கு நன்றி”.
கலை இயக்குநர் சி.எஸ். பாலச்சந்திரன்…
“இந்த வாய்ப்பு கொடுத்த சித்தார்த்துக்கு நன்றி. இயக்குநர் அருணுடன் எனக்கு இது மூன்றாவது படம். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கும் வரப்போகும் படங்களில் வாய்ப்பு அளிக்க போவதற்கும் நன்றி” என்றார்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்…
“இதுதான் எனக்கு முதல் படம். இயக்குநர் அருண் தந்த வாய்ப்பு இது. என்னை நம்பிய தயாரிப்பாளர் சித்தார்த்துக்கும் நன்றி”
இயக்குநர் அருண்…
“நானும் சித்தார்த்தும் சேர்ந்துதான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். படம் ஆரம்பிக்கும் போது என்ன நம்பிக்கை இருந்ததோ அதே நம்பிக்கைதான் இப்போது வரை இருக்கிறது. என்னைவிட ஒரு நடிகராக தயாரிப்பாளராக இந்தப் படத்தைத் தூக்கி சுமந்தது சித்தார்த்தான்.
எந்த தடங்கலும் இல்லாமல் என்னை முழு சுதந்திரத்தோடு படம் செய்ய வைத்தார்கள். இந்தப் படம் இந்தளவு நன்றாக வர துணையிருந்த தொழில்நுட்பக்குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் முதல் படம் போல நினைத்து நிறைய கற்றுக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.
Director SU Arunkumar speech at Chithha press meet