சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் – இயக்குனர் பொன்ராம்!

சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் – இயக்குனர் பொன்ராம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ponramஒரு சாதாரண வெற்றியே நம் தோள்களில் மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்றி விடும். அப்படி இருக்கையில் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் பொன்ராம் தோள்களில் தவிர்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய பொறுப்புகள் வந்து சேர்ந்திருக்கின்றன. சீமராஜாவும் வெற்றி தான் என்ற உறுதியில் இருக்கும் பொன்ராம், அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பை காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார். “ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது என்கிறார்.

சீமராஜா பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது, “சீமராஜா மூலம் எங்கள் முந்தைய படங்களில் இருந்து நாங்கள் சிறிது சிறிதாக மேம்பட்டிருக்கிறோம். அதற்காக எங்கள் வழக்கமான பொழுதுபோக்கு விஷயங்களை ஒதுக்கி விடவில்லை. பொழுதுபோக்கு தான் பின்னணியாக இருக்கும், ஆனால் சில மாற்றங்களை கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது” என்றார்.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி பேசும்போது, “படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக, முழு முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிலம்பம் பயிற்சி பெற்று, கேமராவின் முன்பு அதை நேர்த்தியாக செய்து காட்டினார். சூரி நிச்சயமாக எங்கள் குழுவில் மிகப்பெரிய பலம். உங்களை விலா நோக சிரிக்க வைப்பார்.

“அனைவரும் சீமராஜா ஒரு திருவிழா உணர்வை தருவதாக சொல்வதை கேட்பதில் மகிழ்ச்சி. அதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்த நண்பர்கள் தான் என்று நான் கூறுவேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குனர் முத்துராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் இல்லாமல் இது நடந்திருக்காது. சீமராஜா திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

சிம்ரன், நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 24AM சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருப்பதோடு, தனது தனித்துவமான விளம்பரங்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று அதிக திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

சீமராஜா எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை அளித்தது – நடிகை சிம்ரன்!

சீமராஜா எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை அளித்தது – நடிகை சிம்ரன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simranகாலங்கள் கடந்தாலும் ஒரு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார்கள். அந்த வகையில் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத, மகாராணியாக தனி இடத்தை பிடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் இன்றைக்கும் தனக்கென தீவிர ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு நாயகி என்றால் அது சிம்ரன் தான்.

தனது படைப்புகள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை பெற்று மிகப்பெரிய உயரத்தை அடைந்த சிம்ரன், நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாராவது நினைத்திருப்போமா?. சீமராஜா படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பொன்ராம் சார் என்னை அணுகிய போது எனக்கும் அந்த மனநிலை தான் இருந்தது. நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொளள உண்மையிலேயே தயங்கினேன். ஆனால் கதையை என்னிடம் சொல்ல எனக்காக பொன்ராம் சார் பொறுமையாக காத்திருந்ததால் தான் இது நடந்தது. ஒருமுறை, நான் கதையை கேட்ட பிறகு, என் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்கும் தீர்மானத்துக்கு வந்தேன்.

இந்த படத்தில் எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரு குடும்பமாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தனர். கடந்த பல ஆண்டுகளில் பல படங்களில் பணிபுரிந்திருந்தாலும், இந்த குழுவில் முழுக்க நேர்மறை அதிர்வுகளை உணர்ந்தேன். குறிப்பாக, சிவா, பொன்ராம் கூட்டணி ஏற்கனவே வெற்றிகரமான படங்களை கொடுத்துள்ளது, ரசிகர்கள் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க வருவார்கள். ஆனால் சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் குழுவில் உள்ள அனைவருமே ரசிகர்களுக்கு முந்தைய படத்தை விடவும் சிறப்பான படத்தை கொடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள்” என்றார்.

24AM ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி வரும் இந்த சீமராஜா, உலகமெங்கும் செப்டம்பர் 13ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது. எற்கனவே டி இமான் இசையமைத்திருக்கும் பாடல்கள் அனைத்து வானொலி நிலையங்களிலும் தொடர்ச்சியாக ஒலித்து கொண்டிருக்கின்றன. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவும், மிகுந்த நேர்த்தியான பொழுதுபோக்கு படத்துக்கான காட்சியமைப்புகளும், டிரெய்லரில் வந்த இறுதி சில நொடிகளும் படத்தின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

சீமராஜா ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை விருந்தாக இருக்கும் – இசையமைப்பாளர் டி இமான்!

சீமராஜா ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை விருந்தாக இருக்கும் – இசையமைப்பாளர் டி இமான்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

D Imman‘திருவிழா’ மற்றும் ‘கொண்டாட்டம்’ போன்ற வார்த்தைகள் எப்போதுமே இசையோடு மிக நெருங்கிய உறவை கொண்டவவை. சீமராஜா படத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருவது இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் டி.இமானின் ஸ்டூடியோவில் உருவான பாடல்கள் தான் ஊர் திருவிழாக்கள் முதல் நகரின் பார்ட்டிகள் வரை ஒலித்து வருகிறது. குத்துபாடல், நாட்டுப்புற பாடல் மற்றும் மெல்லிசை பாடல் என சீமராஜா ஒரு ஹிட் ஆல்பமாக மாறியிருக்கிறது. “சீமராஜா திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை விருந்தாக இருக்கும் என நம்பிக்கையோடு கூறுகிறார் இசையமைப்பாளர் டி.இமான்.

“திரை இசையை பொறுத்தவரை இசையமைப்பாளர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதல் வகையில், சில திரைப்படங்கள் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு, பின்னணி இசை கோர்ப்பில் இசையமைப்பாளர்களின் மாயாஜாலத்தால் படத்தை மேலும் மெறுகேற்ற அவர்களை சார்ந்திருப்பார்கள். இன்னொரு பிரிவில், படக்குழுவில் உள்ள மற்றவர்களின் உழைப்போடு போட்டி போட்டு தங்களை நிரூபிக்க இசையமைப்பாளர்கள் சிறப்பான இசையை வழங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். சீமராஜா இதில் இரண்டாவது வகையை சார்ந்தது. இந்த படத்தில் நடிகர்கள் முதல் அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு என அனைத்தும் என்னை வியக்க வைத்தது. நான் பின்னணி இசையமைப்பில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்காமல் போனால் நான் படத்தில் தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் சீமராஜா ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். அது தான் இசையில் மிகப்பெரிய விஷயங்களை செய்ய என்னை தூண்டியது” என்றார் டி.இமான்.

பாடல்கள் படமாக்கப்பட்டதை பற்றி அவர் கூறும்போது, “சகோதரர் சிவகார்த்திகேயன் உடன் பல படங்களில் பணியாற்றியதால் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்தேன். எனினும், நான் இறுதியாக பாடல்களை பார்த்தபோது, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் அழகான ஒளிப்பதிவு மற்றும் நடன இயக்குனர் ஷோபியின் சிறப்பான நடன அசைவுகள் என பாடலை மேலும் மெறுகேற்றியதாக உணர்ந்தேன்” என்றார்.

சீமராஜா காய்ச்சல் காட்டுத்தீ போல மிக வேகமாக பரவி வருகிறது. விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் முன்பதிவு துவங்கி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. 24AM ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சூரி, சிம்ரன், லால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

குட்டீஸ்க்கு பிடிக்கிற ஃபைட்டை சிவகார்த்திகேயன் விரும்புவார் : அனல் அரசு

குட்டீஸ்க்கு பிடிக்கிற ஃபைட்டை சிவகார்த்திகேயன் விரும்புவார் : அனல் அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stunt Director Anal Arasu about Sivakarthikeyan and his stunts in Seemaraja‘சீமராஜா’வில் சிவகார்த்திகேயன் உடன் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான அனுபவம் என கூறுகிறார் சண்டைப்பயிற்சியாளர் அனல் அரசு.

அவர் கூறும்போது…

“ஆம், சிவகார்த்திகேயனுடன் பணிபுரிவதில் உள்ள விசேஷமான ஒரு விஷயம், அவர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் போது குழந்தைகளை மனதில் நினைக்கும் இயல்புடைய ஒரு நடிகர்.

அவருடன் நான் ஏற்கனவே பணிபுரிந்த ரெமோ மற்றும் சீமராஜா இரண்டுமே என்னுடைய மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட அனுபவமாக இருந்தது.

பல ஹீரோக்கள் வன்முறை மற்றும் இரத்தக்களரி சண்டைக்காட்சிகளை விரும்புகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை பார்க்கும் சண்டைக் காட்சிகளை விரும்புபவர்.

இது அவர் எளிமையான, சாதாரண சண்டையை விரும்புகிறார் என்று அர்த்தமல்ல. அவர் டூப் இல்லாமல் அபாயகரமான சண்டைக் காட்சிகளிலும் முழுமுயற்சியோடு நடிக்கிறார்.

இது நான் பெயருக்காக சொல்லும் வார்த்தைகள் இல்லை, திரையரங்குகளில் பார்க்கும்போது நீங்களே உணர்வீர்கள்.

சிவகார்த்திகேயன் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், சண்டைக் கலைஞர்கள் அவரால் தவறுதலாக காயப்படுத்தப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

சில நேரங்களில், எங்கள் குழுவினர் எந்தவித தயக்கமும் இன்றி எங்களை அடிங்க என கேட்கும்போதும், அவர் எதுவும் தவறாக நடக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்” என்றார்.

சீமராஜா படத்தை பற்றி அவர் கூறும்போது, “இந்த திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டது, ஆனால் சண்டைக காட்சிகள் தான் சவாலாக இருந்தது.

சிவகார்த்திகேயனின் உயர்ந்து வரும் நட்சத்திர மதிப்புக்கு ஏற்றவாறும், அதே சமயத்தில் வன்முறை இல்லாமல், ரசிக்கும் விதத்திலும் உருவாக்க முயற்சித்திருக்கிறேன்” என்றார்.

24AM ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா மிகபிரமாண்டமாக் தயாரிக்க, பொன்ராம் இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி, லால் மற்றும் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் நாளை செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது.

Stunt Director Anal Arasu about Sivakarthikeyan and his stunts in Seemaraja

வழக்கத்துக்கு மாறான ஒளிப்பதிவை சீமராஜாவில் கொடுத்திருக்கிறேன். : பாலசுப்ரமணியம்

வழக்கத்துக்கு மாறான ஒளிப்பதிவை சீமராஜாவில் கொடுத்திருக்கிறேன். : பாலசுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cinematographer Balasubramaniam talks about Seema Raja movieசிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் நாளை வெளியாகிறது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாலசுப்ரமணியம் இப்படம் தனக்கு பெரும் சவாலாக இருந்ததாக கூறியுள்ளா.

அவர் கூறியதாவது…

“எனது முந்தைய படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டேன். பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்., இமான் இசையில், என இந்த கூட்டணியில் வருத்த படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் கிராமிய பின்னணியில் உருவான படங்கள் என்பதால் இந்த வித்தியாசம் தேவைப்பட்டது.

அதே பிண்ணனி என்றாலும், காட்சி அமைப்பு மிக மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று உழைத்தோம். இயக்குநர் பொன்ராம், கலை இயக்குனர் முத்துராஜ், என ஒவ்வொருவரும் போட்டி போட்டு உழைத்தோம். இந்த படத்தில் உள்ள நடிகர்கள் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் ஓளி அமைப்புக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு தந்தனர்.

சிவகார்திகேயன், சமந்தா, சூரி , சிம்ரன், நெப்போலியன் சார், லால் சார் என குவிந்து இருந்த நட்சத்திர குவியல் படத்துக்கு பெரிய அந்தஸ்தை பெற்று தந்து இருக்கிறது.

படத்தை குறிப்பிட்ட காலத்தில் , சிறந்த தரத்தில் வழங்க வேண்டும் என்பதால் மிகுந்த உடல் களைப்பு மட்டுமின்றி, மன களைப்பு கூட இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் இடைவிடாத உற்சாகம் எங்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் தந்தது.

24 A M ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிப்பில் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி வெளிவரும் “சீமராஜா” எங்கள் உழைப்புக்கு பெரும் அந்தஸ்தை பெற்று தரும்”என உறுதி பட கூறினார் பாலசுப்ரமணியம்.

Cinematographer Balasubramaniam talks about Seema Raja movie

அர்ஜுன் நடிப்பில் சிங்காரவேலன் தயாரிக்கும் பட ஹீரோ பெயரை லிங்குசாமி அறிவிக்கிறார்

அர்ஜுன் நடிப்பில் சிங்காரவேலன் தயாரிக்கும் பட ஹீரோ பெயரை லிங்குசாமி அறிவிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Lingusamy reveal Hero and movie title of Muli starrer movieஅர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன்.

‘கழுகு – 2’ படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை ‘பேராண்மை’ , ‘பூலோகம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு – கோபிகிருஷ்ணா.

‘க்ரைம் நாவல்’ மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்படும் என ஏற்கனேவே அறிவித்திருந்தார்கள்.

அதன்படி இயக்குனர்/தயாரிப்பாளர் லிங்குசாமி நாளை காலை 11 மணிக்கு படத்தின் கதாநாயகன் யார் என்பதையும் படத்தின் பெயரையும் அறிவிக்கிறார்.

Director Lingusamy reveal Hero and movie title of Muli starrer movie

More Articles
Follows