ரஜினியே கால்ஷீட் கொடுக்க ரெடியான இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கூட்டணி..?

desingh periyasamyதுல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்கி பெரும் பாடுபட்டு 5 வருட போராட்டத்திற்கு பிறகு இந்தாண்டு பிப்ரவரியில் ரிலீஸ் செய்தார்.

இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தேசிங்கு பெரியசாமியை வெகுவாக பாராட்டி தனக்கும் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்ய சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான கதையை தேசிய பெரியசாமி எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ரவிக்குமார் இயக்கத்தில் ’அயலான்’ மற்றும் நெல்சன் இயக்கத்தில் ’டாக்டர்’ ஆகிய திரைப்படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

Overall Rating : Not available

Latest Post