‘தலைவா’ பிரச்சினை நமக்கு எதுக்கு..? தனுஷ் டீம் எஸ்கேப்..!

vijay dhanushநடிகர் விஜய் மற்றும் இயக்குனர் விஜய் இணைந்த படம் தலைவா.

இப்படம் வெளியாக முடியாமல் பல பிரச்சினைகள் சந்தித்தது.

எனவே இப்படத்தின் தலைப்பின் கீழ் பயன்படுத்தப்பட்ட TIME TO LEAD (தலைமை ஏற்க இதுவே தருணம்) என்ற வார்த்தையை அகற்றிய பின்னர் படம் வெளியானது.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்று வரை இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை.

இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள கொடி படம் வருகிற அக். 28ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கு தெலுங்கில் தர்மயோகி (தர்ம மகரிஷி) என தலைப்பிட்டு, அதன்கீழ் THE LEADER (தலைவர்) என பெயரிட்டுள்ளனர்.

ஆனால், தமிழில் தலைப்பிற்கு கீழ், எந்தவிதமான வார்த்தைகளும் இடம்பெறவில்லை.

ஒருவேளை தலைவா படத்தின் போது விஜய்க்கு ஏற்பட்ட பிரச்சினை தனக்கு ஏற்பட்டு விடக்கூடாதோ என்பதற்காக, ஆந்திராவில் மட்டும் இப்படி டிசைன் செய்துள்ளார்களோ? என கிசுகிசுக்கப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோருக்கு மறக்க முடியாத…
...Read More
இளைய தளபதி விஜய் நடித்த 'தலைவா'…
...Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக…
...Read More

Latest Post