தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.
இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும்போதே விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தையும் இயக்க ஆரம்பித்துவிட்டார் கவுதம்மேனன்.
தற்போது விக்ரம் அவர்கள் சாமி ஸ்கொயர் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டதால், தனுஷ் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம் கவுதம்மேனன்.
இப்படத்தின் சூட்டிங்கை 2017 டிசம்பருக்குள் முடித்துவிட்டு ஜனவரியில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
எனவே `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை காதலர் தினத்தை குறி வைத்து பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.
தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தில் ராணா, சுனைனா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush Enai Noki Paayum Thota release updates