‘செலவுக்கு பணம் தரவேண்டும்…’ தனுஷின் ‘திடீர்’ பெற்றோர் வழக்கு

dhanushமதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன், ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர் மற்றும் இவரது மனைவி மீனாட்சி ஆகிய இருவரும் நடிகர் தனுஷை தங்கள் மகன் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில்…

“பிரபல நடிகரான தனுஷ் கடந்த 7.11.1985 அன்று எங்களுக்கு மூத்த மகனாக பிறந்தார். கலைச்செல்வன் என்று பெயரிட்டு அவரை வளர்த்தோம்.

பிளஸ்-1 படிக்கும்போது படிப்பை நிறுத்திவிட்டு, இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் பணிபுரிய சேர்ந்தார்.

அதன்பின்னர் கஸ்தூரி ராஜா எங்கள் மகனை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார்.

பெற்றோர் என்ற முறையில் எங்களை கவனித்துக் கொள்ள வேண்டியது தனுஷ், எங்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

எங்களின் மருத்துவச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.65 ஆயிரம் மாதந்தோறும் தேவைப்படுகிற்று.

இதனை வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு தொடர்பான நடந்த விசாரணையில் ஜனவரி 12ஆம் தேதி தனுஷ் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Court summons Dhanush Sudden Parents claims Dhanush their son

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக…
...Read More
மலையாளம் மற்றும் தமிழில் சூப்பர் ஹிட்…
...Read More
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி இன்றும்…
...Read More

Latest Post