தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக நடித்த ஹிந்தி திரைப்படம் ‘ராஞ்சனா’.
இப்படம் வரவேற்பை பெறவே இதற்கு அடுத்தப்படியாக அமிதாப்பச்சனுடன் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார்.
தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாராம்.
இப்படம் `ராஞ்சனா’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகுகிறது.
முதல் பாகத்தில் ‘உயிர்த்து எழுவேன்’ எனச் சொல்லி இறந்துபோகும் இவரது குந்தன் குமார் கேரக்டர் இதில் உயிர்த்தெழுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் இதில் அவர் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கொடி படத்தில் அரசியல்வாதியாக கலக்கியிருந்தார் தனுஷ் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.