தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்தை பார்த்த ரஜினிகாந்த், தன் பாராட்டை சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரெமோ படம் தெலுங்கிலும் வெளியானது.
இதன் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது…
“இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களை கேட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டியிருந்தார்.
மேலும் அவர் படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.
இப்படத்தை இங்கே மாபெரும் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும், தில் ராஜீ அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று பேசினார்.
தன் ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டை சிவகார்த்திகேயன் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.