BREAKING பிகிலுக்கு தடை.?; மனுதாரருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING பிகிலுக்கு தடை.?; மனுதாரருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigil posterஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகிறது.

இப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா தடை கோரியிருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கு ஐகோட்ர்டில் விசாரணை வந்தது.

அதில்… நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் நாளை வெளியாவதில் தடையில்லை .. திருத்தங்கள் செய்துள்ளதால் புதிதாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

அன்பு தனது தந்தை மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

அன்பு தனது தந்தை மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathiஅல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:-

‘டத்தோ’ ராதாரவி பேசும்போது,

சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டுகிறேன்.

சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்க பார்க்க தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன்.

சிறு படங்களுக்கு குறைந்தது 5 நாட்களாக திரையரங்கில் ஒளிபரப்ப வேண்டும். ஸ்ரீகாந்த் தேவா இசையில் ’வாஸ்கோட காமா’ பாடல் எல்லோரையும் ஆட்டம் போட வைக்கும். இயக்குநர் உசேனுக்கு எனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பேன். அன்பு மயில்சாமிக்கு உங்கள் தந்தை மயில்சாமி போல் நட்பை பாதுகாத்து நல்ல பண்புகளோடு இருக்க வேண்டும் என்று வழக்கம்போல் நகைச்சுவையாகவும், சிந்திக்கும்படியாகவும் பேசி அனைவரையும் மகிழ வைத்தார் ‘டத்தோ’ ராதாரவி.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

‘தாவணி கனவுகள்’ படத்தில் தான் மயில்சாமி அறிமுகமானார். முதல் படத்தில் 7 டேக் வாங்கி தான் நடித்தார். அப்படிப்பட்ட மயில்சாமியா இவர் என்று இன்று வியந்து பார்க்கிறேன். அவருடைய மகன்களுக்கு ஒன்று கூற விழைகிறேன். நீங்கள் நன்றாக நடிக்கிறீர்களோ இல்லையோ? உங்கள் அப்பா மயில்சாமி மாதிரி நல்ல குணங்களோடு இருக்க வேண்டும்.

டிரைலர் பார்க்கும்போது புதுமுக இயக்குநர் மாதிரி தெரியவில்லை. யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இயக்கியிருக்கிறார். ‘அல்டி’ என்றால் அல்டிமேட்டின் சுருக்கம் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டேன் என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசும் போது,

மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி, பல காட்சிகளில் வந்தாலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அதேபோல் பேச்சிலும், நடிப்பிலும் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டார். மிகப்பெரிய ஜாம்பாவான்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிவார்கள். மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு மயில்சாமியும் அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டு அன்பு மயில்சாமி வெற்றியடைய வேண்டும் என்றார்.

ஜாகுவார் தங்கம் பேசும்போது,

விஜய் சேதுபதி கூறியதுபோல, அன்பு மயில்சாமி நடந்து கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேணடும். கதாநாயகி தமிழ் பெண்ணாக இருப்பதில் மகிழ்ச்சி. ‘கண்டக்டர் பொண்ண யார் கட்டிக்குவாங்க’ என்ற பாடல் வரிகள் அனைவரிடத்திலும் வெற்றியடையும். எம்.ஜி.ஆர். போல அனைவரையும் வாழ்த்தும்போது ஆத்மார்த்தமாக வாழ்த்தும் விஜய் சேதுபதிக்கு நன்றி என்றார்.

நடிகர் மயில்சாமி பேசும்போது,

இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. என் மகன் அழைப்பை ஏற்று நேரில் வந்து பிறந்த நாள் மற்றும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறிய விஜய் சேதுபதிக்கு நன்றி. எனது இரு மகன்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் மகனின் பொறுமையை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். பத்து படத்தில் நடித்திருந்தாலும் இந்த படம்தான் அவனுக்கு முதல் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறான். ஜாகுவார் தங்கம் கூறியதுபோல், விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர். மாதிரி யதார்த்தவாதி. பலர் கூறுவார்கள் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று. ஆனால், நான் கூறுவேன் அவர் இறக்கவில்லை. யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். தான்.

நடிகை மனிஷா ஜீத் பேசும்போது

முதல் பார்வை முதல் இன்று வரை அவருடைய ஆதரவை எங்களுக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு நன்றி என்றார்.

நடிகர் அன்பு மயில்சாமி பேசும்போது,

இப்படத்தில் பாடல்களை முதன்முறை கேட்கும்போதே எல்லோருக்கும் பிடிக்கும். ஸ்ரீகாந்த் தேவாவின் இசைக்கு ராபர்ட் நன்றாக நடனம் அமைத்திருக்கிறார் என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது,

இப்படத்தின் இயக்குநருக்கு இது முதல் படம். நன்றாக இயக்கியிருக்கிறார். ராபர்ட் மூலம் தான் இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் கதாநாயகி எனது குடும்பத்தில் ஒருவர். கார்த்திக் மற்றும் கவிதா இருவரும் புதுமுக பாடலாசிரியர்கள். இப்படத்திற்காக பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்தியதற்கு நன்றி என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதுமுகமாக இருந்தாலும் இப்படத்திற்காக நன்றாக பணியாற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவை சிறுவயது முதல் தெரியும். என்னைப்போல் சாப்பாட்டு பிரியர். இருவரும் இணைந்தே சாப்பிட செல்வோம். அதேபோல் ராபர்ட்டும் எனக்கு நெருக்கமானவர்.

இயக்குநர் உசேன் பேசும்போது,

இரண்டு மாதங்களில் படம் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ரஹ்மத்துல்லா பேசும்போது,

நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். ‘அல்டி’ படம் மூலம் திரைத்துறையில் பயணிக்க வந்துள்ளோம் என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, இசை மற்றும் டிரைலர் தகட்டை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டார்கள்.

மில்லியன் பார்வைகளை கடந்த “ஓ மை கடவுளே” டீஸர் !

மில்லியன் பார்வைகளை கடந்த “ஓ மை கடவுளே” டீஸர் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oh my kadavule teaserகாதல் எக்காலத்திலும் மாறாத உணர்வு. எப்போதும் உலகின் ஆதாரமாக, புதுமையாக உலகின் இயக்கமாக

இருப்பது காதல் தான். சினிமாவில் எக்காலத்திலும் காதல் கதைகளுக்கு பெரும் வரவேற்பு இருந்து

வருகிறது. தமிழில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஃபிரஷ்ஷான, இளமை ததும்பும் காதல் கதையாக

உருவாகியுள்ளது “ஓ மை கடவுளே” படம். அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும்.

இத்திரைப்படம் இதில் இணைந்திருக்கும் மற்ற நடிகர் பட்டாளத்தால் மேலும் மேலும் எதிர்பார்ப்பை

குவித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வாணி போஜன், சாரா இணைந்திருக்கும் இப்படத்தில்

அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு சிறிய பாத்திரத்தில்

நடித்துள்ளார்.

காதல் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும்

வரவேற்பு பெற்று வெளியான குறைந்த காலத்திலேயே மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை

புரிந்திருக்கிறது.

இது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியதாவது…

முதல் படம் இயக்கும் எந்த ஒரு இயக்குநருக்கும் தனது படத்தின் முதல் பார்வையை அறிமுகப்படுத்துவது,

வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் பரவச மனநிலையில் தான் இருக்கும். ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்ள

போகிறார்கள் எனும் பரிதவிப்பு இருந்துகொண்டே இருந்தது. இப்போது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு

எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாங்கள் வேலையை சரியாகச் செய்துள்ளோம் என்ற

நம்பிக்கையை அளித்திருகிறது. படத்தை பார்க்கும்போது ரசிகர்கள் உற்சாகமான காதலை காமெடியுடன்

கொண்டாடுவார்கள் இப்படம் அனைவரையும் எளிதில் கவரும். மிக விரைவில் முழுமையான டிரெய்லர்

மற்றும் இசை ஆல்பத்துடன் ரசிகர்களை சந்திப்போம் என்றார்.

தயாரிப்பாளர் G டில்லி பாபு Axcess Film Factory சார்பில் அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோரின்

Happy High Pictures உடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார். லியான் ஜேம்ஸ் இப்படத்திற்கு

இசையமைத்துள்ளார். மேயாத மான், எல் கே ஜி படப்புகழ் விது அயன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பிகில் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுங்க..; தியேட்டர்களுக்கு மினிஸ்டர் ஆர்டர்

பிகில் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுங்க..; தியேட்டர்களுக்கு மினிஸ்டர் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigil Vijayதீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாகிறது.

பெரிய நடிகர்கள் படம் என்பதால் அதிகாலை சிறப்பு காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது. அதை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கனவே கூறியிருந்தார்

ஆனாலும், சில திரையரங்குகள் பிகில் அதிகாலை காட்சிக்கான டிக்கெட்டுகளை விற்று வருகின்றனர்.

அந்த டிக்கெட்டுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ….

‘ தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நல்லண்ணெத்தில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், இதை தவறாக பயன்படுத்தி திரையரங்க உரிமையாளர்கள் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்ததால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.

எனவே, தீபாவளி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.

பிகில் மட்டுமல்ல.. எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை’ என அவர் கூறினார்.

ட்விட்டரிலும் தளபதி மாஸ்.; பிகில் எமோஜியால் ரசிகர்களுக்கு கிடைத்த எனர்ஜீ!

ட்விட்டரிலும் தளபதி மாஸ்.; பிகில் எமோஜியால் ரசிகர்களுக்கு கிடைத்த எனர்ஜீ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigil Vijayஅட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் பிகில்.

இந்த படத்திற்கு டிவிட்டர் ஒரு சிறப்பாக எமோஜி அளித்து உள்ளது.

விஜய் நடிப்பில் முன்பு வெளியான மெர்சல் படத்திற்கு Emoji அளித்து இருந்தது டிவிட்டர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதனை தொடர்ந்து பிகில் படத்திற்கும் Emoji அளித்து உள்ளது.

இது வரை டிவிட்டர் மொத்தம் 8 Emoji வெளியிட்டு உள்ளது. அதில் 2 Emoji விஜய் படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த்துடன் இணையும் சூரி

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த்துடன் இணையும் சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soori in thalaivar 168தர்பார் படத்தை முடித்துவிட்டார் ரஜினிகாந்த. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 168 என்று பெயரிட்டுள்ளனர்.

கிராமத்து பாணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முக்கிய கேரக்டரில் சூரி நடிப்பார் என கூறப்படுகிறது.

படத்தின் நாயகி யார்? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

More Articles
Follows